ina alipu
எந்த வெளியார் தலையீடுமில்லாமல் ஸ்ரீலங்கா அரசினால் சுயமாக தயாரிக்கப்பட்டு வெளிவந்த Lessons Learnt and Reconciliation Commission  ('எல்எல்ஆர்சி')    கற்றுக்கொண்ட பாடங்கள், மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை  (மஹிந்த சிந்தனை,) தொடர்பிலான வேலைத்திட்டத்தை இலங்கையில் விரைவுபடுத்தவேண்டும் என்று நெருக்கடி கொடுக்கும் விவாதத்துக்கான பிரேரணையை, 07-03-2012 அன்று ஜெனீவாவின் ஐ.நா மனித உரிமைச் சபையில்,  உலகவல்லரசு அமெரிக்கா, உத்தியோகபூர்வமாக தனது பங்கிற்கு சமர்பித்திருக்கிறது. 

ஐநா மனித உரிமை அமர்பில் அமெரிக்கா தாக்கல் செய்த பிரேரணை ஒன்றும் ஸ்ரீலங்கா அரசுக்கோ, போர்க்குற்றவாளிகளுக்கோ பாரதூரமான எதிரான விளைவை உண்டுபண்ணக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதுமல்ல, குறிப்பிட்ட, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்ததே ராஜபக்க்ஷ தலைமையிலான ஒரு சிங்களவர் குழு.

அந்தப்பிரேரணை அமெரிக்காவால் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகள் வரத்தொடங்கியவுடனேயே, ஏது என்னவென்று அறிய முன்பே, இலங்கையும், இலங்கையின்  நண்பன்  இந்தியாவும், நிலைகொள்ளாமல் பறந்தடித்து ஏகப்பட்ட வாதப்பிரதி வாதங்களை உறுப்புநாடுகளுக்கு இட்டுக்கட்டி பிரேரணையை தோல்வியடையச்செய்யும் வேலைத்திட்டங்களில் மும்முரமாக ஈடுபட்டதாக அறியமுடிந்தது.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்க்ஷ தனது கட்டுப்பாட்டிலுள்ள சிலரை நியமித்து வரையப்பட்ட தமிழர் நலன் தொலைக்கும்  வரைவு அறிக்கையில், அவர்களே சிபார்சு செய்த வேலைத்திட்டங்களை காலதாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் வேண்டுதல். அமெரிக்காவின் அந்த வேண்டுதல்கூட இலங்கைக்கும் இந்தியாவுக்குமான தன்மானப்பிரச்சினையாக பூதாகரமாக்கப்பட்டு பெரும் பூகம்பத்தை உலக அரங்கில் கிளப்பியிருந்தது.

இதிலிருந்து பார்க்கும்போது, உலகில் வல்லமையுள்ள ஆட்சியாளர்கள் தவிர, வேறு பொது நலன்விரும்பிகள், நியாயவாதிகள் எவராலும் கற்பழிப்பு, குழந்தைக்கொலை, மனித கூட்டத்தை அவலநிலைக்கு இட்டுச்செல்லல், மற்றும் மனித உரிமைமீறல்கள் போன்றவற்றை அவ்வளவு இலகுவாக உலக அரங்கில் அல்லது சாதாரண நியாய அரங்கில் விவாதத்திற்கு எடுத்து விவாதித்துவிடமுடியாது, அல்லது அவற்றிற்கு முக்கியத்துவம் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது.

http://www.uyarvu.com/images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/war-crimes-sri%20lanka%205.jpgசெயற்கைகோள் பதிவுசெய்த நிழல்ப்படங்கள், பல சர்வதேச தொண்டரமைப்புக்கள் நேரடியாக கண்ட காட்சிகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள், வாக்குமூலங்கள், மற்றும் பல ஊடக ஸ்தாபனங்கள் பகிரங்கமாக ஆதாரபூர்வமாக தொகுத்து வெளிப்படுத்தியிருந்த சாட்சியப்பதிவுகள் அனைத்திலும் மிக மோசமான மனிதப்படுகொலைகள், சித்திரவதைகள், உயிருடன் கழுத்தறுப்புக்கள், வன்புணர்வுகள், "மிருகங்களே புறக்கணிக்கும்" இயற்கைக்குவிரோதமான இறந்த பெண்களின் உடல்கள் மீதான பாலியல் வக்கிரங்கள், இன்றும் நின்றுவிடாமல்  தொடராக இன்னும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.  தருஷ்மன் தலைமையிலான ஐநா நிபுணர்குழு அறிக்கையும் அவற்றில் உண்மையிருப்பதாக ஒத்துக்கொள்ளுகிறது. ஆனால் அவை அனைத்தையும் விவாதத்திலிருந்து ஓரங்கட்டி ஒதுக்கித்தள்ளவேண்டுமென்பதே இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளின் நோக்கமாக இருப்பதை காணமுடிகிறது.

அமெரிக்காவின் பிரேரணை வரும் நாட்களில் மனித உரிமை கவுன்சிலில் உறுப்பு நாடுகளின் வாக்கெடுப்புக்கு வருகிறதோ இல்லையோ,  இந் நிகழ்வின் மூலம், Genocide  ராஜபக்க்ஷ,  தற்போதைக்கு போர்க்குற்றச்சாட்டிலிருந்து விடுப்பெடுத்துவிட்டார் என்றே தெரிகிறது.

தமிழன் சார்பாக கேட்பதற்கு ஆளில்லாதபடியால்,. ஸ்ரீலங்கா தானாக முன்வைத்த ஒரு வேலைத்திட்டத்தை "LLRC" துரிதப்படுத்தி செயற்பாட்டுக்கு கொண்டுவர வைப்பதற்கே உலக நாட்டாமை ஒருவர் உலக உச்ச மன்றமான ஐநாவில் பிரேரணை மூலம் கோரவேண்டியிருக்கிறது.

அமெரிக்காவின் கோரிக்கையை மற்றைய உறுப்பு நாடுகள் ஒருவேளை! ஏற்றுக்கொள்ளுமாயின்,   சிங்கள நல்லிணக்க ஆணைக்குழு  பரிந்துரைகளில் காணப்படும் இலகுவான செயற்திட்டங்கள் சிலவற்றை  ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்கள் தெரிவுசெய்து, நத்தைவேகத்தில் சில நகர்வுகளை ஏற்படுத்தி கால நீடிப்பை உண்டுபண்ணிக்கொள்ளலாம், அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை அனைத்தும் தமிழினத்துக்கு விரோதமான வேலைதிட்டம் என்பதையும் மனதில்க்கொள்ளவேண்டும், இதன்மூலம் தொடர்ந்து உலகத்தை ஏமாற்ற ராஜபக்க்ஷவிற்கு இன்னுமொரு நல்ல சந்தற்பம் கிடைத்திருப்பதாகவே வரும் காலங்களில் உணரலாம். இந்த ஐநா கூட்டத்தொடர் விவாதம்கூட ராஜபக்க்ஷவுக்கு ஒரு அதிர்ஸ்டமான நிலையை தோற்றுவித்திருக்கிறதென்றே கொள்ள முடியும்.

ராஜபக்க்ஷவின் நல்லிணக்க ஆணைக்குழு என்பதே பெருத்த ஏமாற்றுத்திட்டம் என்பதுதான் (கூட்டமைப்பு தவிர்ந்த) அனைத்து தமிழர்களின் கணிப்பீடு. ராஜபக்க்ஷ நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சிபார்சுசெய்திருக்கும் விடயங்கள் எழுத்துருவில் எதையோ மாற்றியமைக்க எழுதப்பட்ட புனித நீதிச்சித்தாந்தம்போல் சிங்கள ஆட்சியாளர்கள் உலகத்துக்கு காட்டிக்கொண்டாலும், தமிழர்களின் நீண்டகால ""அரசியல் அபிலாஷைகள், அடிப்படையிலான உரிமைக்குரல்கள்"" அனைத்தையும் எடுபடாமல் செயலற்றுப்போகச்செய்யும் ஒன்றாகவே நல்லிணக்க ஆணைக்குழுவின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டம்  இருக்கும் என்பது நிச்சியம் பின்னர் உணரப்படும்.

சர்வதேச நியாயவாத தொண்டமைப்புக்களின் நெருக்குவாரத்தின் காரணமாக சென்ற ஆண்டு ஐநா செயலாளர் பான் கீ மூன், அவர்களின் பணிப்பின்பேரில், சட்டவாளர் தருஷ்மன், தலைமையிலான மூவர் கொண்ட நிபுணர் குழு எட்டுமாத கால தேடுதலில் ஈழத்தின் யுத்தக்குற்றம் பற்றிய ஆய்வறிக்கையை தயாரித்தது.  சில விவாதங்களின்பின் அறிக்கை ஐநா செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கைக்கு போட்டியாக ராஜபக்க்ஷ தனது கையாட்கள் சிலரை நியமித்து (LLRC)  Lessons Learnt and Reconciliation Commission  'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' என்று ஒன்றை தோற்றுவித்து, தனது அதிகாரத்துக்குட்பட்ட ஆணைக்குழு பரிந்துரைப்பதைத்தான் நடைமுறைப்படுத்துவேன், சர்வதேய நெருக்குவரங்களுக்கு இடமளிக்கப்போவதில்லை என்று ராஜபக்க்ஷ கறாராக கூறிவந்தார்.

இன்று அது நிதர்சனமாகியிருக்கிறது. அமெரிக்கா என்ற வல்லரசும் வேறு வழியின்றி , ஐநா நிபுணர்குழுவின் அறிக்கையை புறந்தள்ளிவிட்டு, ராஜபக்க்ஷவின் கனவுத்திட்டத்தையே வழி மொழிந்திருக்கிறது.  தமிழர்தரப்பும் உலக அமைதி விரும்பிகளும் பெருத்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த, தருஷ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு  தயாரித்த அறிக்கை எந்தப்பிரயோசனமும் இல்லாமல் வீசப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

ராஜபக்க்ஷவின் நல்லிணக்க ஆணைக்குழு சிபார்சு செய்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், ஈழமக்கள்மீது நடத்தப்பட்ட அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் நீதி கிடைக்கப்போவதில்லை. அத்துடன்   மிச்சம் மீதியாக ஈழத்தில் உயிருடன் இருப்பவர்களுக்கும் வருங்காலங்களில் எந்த உத்தரவாதமும் கிடைக்கப்போவதில்லை. இது தொடரும் பட்சத்தில் இன்னும் ஒரு இருபது ஆண்டளவில் அனைத்து தமிழர் பிரதேசங்களும்  சிங்களமயமாகும் அபாயம் எவராலும் தடுக்க முடியாது. அதற்கான ஆரம்ப வேலைகளை 2009ல் இருந்தே ராஜபக்க்ஷ அரசு செய்துவருவது அனைவரும் அறிந்ததே,

அதற்கு  உடந்தையாக (தமிழர்) தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், அவரது அன்பிற்குரியவரான சுமந்திரன் அவர்களும்,  இந்தியாவுடன் இணைந்து திரை மறைவில் ராஜபக்க்ஷவுக்கு நிறைய ஒத்தாசை வழங்கிவருகின்றனர்., ஒட்டுக்குழுத் தலைவரான டக்கிளஸ், மற்றும் கருணா பிள்ளையான் போன்றோர், சிங்கள ராஜபக்க்ஷவுடன் இணைந்து நேரிடையாகவே  பங்களித்து வருகின்றனர்.

ஜனநாயக முறைப்படி தமிழர் தரப்பின் இலங்கை பாராளுமன்ற பிரதிநிதுத்துவத்தின் பொருட்டு, தமிழர்களின் பேரம்பேசும் சக்தியாக தமிழர் தேசியக்கூட்டமைப்பு ஒன்றின் குரலுக்கு மட்டுமே, உலக நாடுகள் எடுக்கும் அசைவியக்கங்களை  தமிழர் சார்பாக ஆமோதிக்கும்/ நிராகரிக்கும் தகமை 2009க்குப்பின் இருந்ததாக கருதப்பட்டது. ஆனால் அதுவும் நடப்பு 19 வது மனித உரிமை அமர்வுகளுக்கு முன்னரே அடிபட்டுப்போய்விட்டதாக கருதப்படுகிறது. நடப்பு ஐநா மன்ற மனித உரிமை கூட்டத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை உலக மட்டத்தில் உண்டுபண்ணியிருந்தது. இருந்தும் தமிழர்தரப்பின் வாத பிரதிவாதங்களை பிரதிபலிக்கும்வண்ணம் கருத்தோ, கட்டுரையோ, வேண்டுகோளோ எதையும் தமிழர்சார்பாக ஐநா மன்றத்திற்கு சென்றடையவில்லை. மூன்றாம் தரப்பு நாடுகள் தமது பாட்டுக்கு ஏதேதோ விவாதிக்கின்றன.

sd
இன்றைய சூழ்நிலையில் தேசியக்கூட்டமைப்பினர் ஐநா மன்றுக்கு சமூகமளித்திருப்பின் சர்வதேசத்தின் பார்வையும் தமிழர்களின் நியாயப்பாடும், ஸ்ரீலங்கவுக்கான எதிர்க்குரலையும் வெளிப்படுத்தியிருக்கமுடியும். கொல்லப்பட்டவர்களின் நியாயமும் ஊடகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் ஆவணங்களும் சேர்ந்து,  Genocide ராஜபக்க்ஷவுக்கு ஒரு சுருக்கு கயிற்று மேடையாக கூட்டத்தொடர் மாற நிறைய வாய்ப்புக்கள் இருந்தன. ஆனால் கெடு வாய்ப்பாக திட்டமிட்ட "கூட்டமைப்பின" சதியின் பின்வாங்கலால் ஐநாவின் கூட்டத்தொடர் வீரியமின்றி தெருக்கூத்து மேடையாக வேறு திசை நோக்கி சென்றுவிட்டது.

2009 லும், அதன்பிறகும், அதற்கு முன்னும், நடந்த இனப்படுகொலை மற்றும் போராளிகளின் சித்திரவதை படுகொலைக்காட்சிகள் இன்றுவரை புதிது புதிதாக புகைப்படங்களாக வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. மனிதரால் ஜீரணிக்க முடியாத அந்தக்காட்சிகள்,, போரில் எந்த பாதிப்புமடையாத அரசியல்வாதிகளான சம்பந்தன் போன்றோருக்கு  ஒரு சில அரசியல்ச் "சம்பவங்கள்". ஆனால் உணர்வுள்ளவனுக்கும் உறவுகளுக்கும் அவை உணர்வுடனான உருக்கமான என்றும் மறக்கமுடியாத உள்ளக் குமுறல்கள். சம்பந்தன் குழுவினரோ,  ஐநா பிரதிநிதிகளோ  முள்ளிவாய்க்காலின் ஒருநாள் ஒரு மணித்துளியை ஏன் மீட்டிப்பர்க்கவில்லை, சம்பந்தனுக்கும்  சுமந்திரனுக்கும் இல்லாத வலி, வேதனை,. வேறு நாடுகளில் வெவ்வேறு சூழலில் வாழும் வெள்ளையர்களுக்கு ஏன் வரப்போகிறது? எப்படி அவர்கள் முள்ளிவாய்க்காலை முற்று முழுதாக உணரமுடியும்?
http://www.uyarvu.com/images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/war-crimes-sri%20lanka%203.jpg
http://uyarvu.com//images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/war-crime-1.jpg
http://uyarvu.com//images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/war-crime-13.jpg http://uyarvu.com//images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/war-crime-9.jpg
இருந்தும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டத்திட்டங்களை மீறி, தருஷ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு, இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை ஆரம்பிக்குமாறு, மனித உரிமை பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவினால் இலங்கை தொடர்பில் தாக்கல் செய்ய உள்ள யோசனையை மனித உரிமை பேரவையின் உறுப்பினர்கள் கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ள தருஷ்மன் குழுவினர், அமெரிக்காவின் யோசனை போதுமானதல்ல எனவும், போர் குற்றத்துடன் தொடர்புடையவர்களை கண்டறிய சுயாதீன விசாரணை நடத்தும் செயற்பாடுகளை பேரவை முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளனர். (இந்த உணர்வு தமிழ் அரசியல் வியாபாரிகளிடம் ஊற்றெடுக்கவில்லையே என நினைக்கும்போது உடல் கூசுகிறது)

ina alipu
இந்த கோரிக்கை தொடர்பில் தருஷ்மன் குழுவினர் ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளனர். மர்சுகி தருஷ்மன், ஸ்டீவன் ரட்னர், யஷ்மின் சூகா ஆகியோர் அனுப்பியுள்ள இந்த மகஜரில், வைத்தியசாலைகள் மீது விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், "பொதுமக்கள் மீது எந்த பொறுப்புமின்றி தாக்குதல் நடத்தப்பட்டதாக" கூறியுள்ளனர். இந்த விடயத்தில் இலங்கை தனது பொறுப்பை நிறைவேற்றுகிறதா இல்லையா என்பதை விசாரணை செய்ய வேண்டியது சர்வதேசத்தின் பொறுப்பு எனவும் நிபுணர்கள் குழுவின் உறுப்பினர்கள் தமது மகஜரில் கூறியுள்ளனர்.

அந்தக்குரல்களுக்கு பலம் கொடுக்கவேண்டிய பொறுப்பு யாருக்கு உண்டு. வானத்திலிருந்து யாராவது வந்திறங்குவார்களா? இதைத்தான் தேசியத்தலைவர் சொல்லிக்கொடுத்தாரா? கண்மூடி, வாய் பொத்தி, காதுகளை இறுக அடைத்துக்கொண்டு சொகுசாக நாம் வாழ  அடுத்த வீட்டுக்காரன் எமக்காக போராடுவானா? அவனுக்கு இருக்கும் ரோசத்தில் அல்லது உணர்வில் சிறு துளியாவது எமக்கு இருக்க வேண்ட்டாமா. இதுவெல்லாம் தமிழனின் சாபக்கேடல்லாமல் வேறு எதுவென்று சொல்லமுடியும். பதவிக்கும் தலைமை வகிப்பதற்கும் ஒரு தகுதி வேண்டாமா? சுடுகாட்டின்மீது அரசியல்செய்வதிலும்பார்க்க செத்தொழிவது மேலானதில்லையா!

இவர்களுக்கு இந்தப்பதவியும் பட்டங்களும் எப்படி வந்தது? பதவி வந்த பின்னணியை சிந்திக்கவேண்டாமா. இன்று அமெரிக்க கொண்டுவரும் கோரிக்கைகூட  பாதிக்கப்பட்ட தமிழினத்தின் ஒப்புதலோடு நடந்த ஒன்றல்ல. இருந்தும் அமெரிக்கா, ஐரோப்பா தமது வல்லமையை பிரயோகித்து மனிதாபிமானத்தோடு சில இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க தலைப்பட்டிருக்கிறது. . தமிழர்களுக்கான நீதி  அரங்கத்தின் திறவுகோலாக அந்த நாடுகளின்  முன்னெடுப்புக்கள் இருக்கட்டும்.  எமது பங்களிப்பு என்ன. எமது வீட்டின் நிலை என்ன என உணர்ந்து அவைகளை எடுத்துவைக்கும் பொறுப்பு எமக்கு மட்டும்தான் உண்டு. இந்தியாவுக்கு பயணம் செய்வதும், கனடாவில் உட்கார்ந்து நாங்கள் எதையும் சொந்தம் என்று சொல்லவரவில்லை சும்மா பேச்சுக்கு சொன்னொம் என்று சொல்லுவதுடன் அரசியல் இராசதந்திரப்பணி முடிந்துவிடுமா? 

எனது உரிமைக்காக போராடிய பெண் போராளிகளின் மார்பிலும் பிறப்புறுப்பிலும் வக்கிரத்தை வெளிப்படுத்திய மிருகத்தின் கூட்டத்தையும், அதன் தலைவனையும் நீதியின்முன் நிறுத்தி சங்காரம் செய்யும்வரை ஒளித்து விளையாடிக்கொண்டிருக்கலாமா? ஒருபக்கம்  நடைப்பயணங்களும் பேரணிகளும் ஆற்பாட்டங்களும் தமது வல்லமைக்குட்பட்டு மானமுள்ளவர்கள் செய்கின்றனர். அரசியல் பச்சோந்திகளை நம்பி விடுதலைப்போராட்டம் தொடங்கப்படவில்லை என்பது மீண்டும் மக்களால் நன்கு உணரப்படுகிறது.

போராட்டத்தின் தொய்வை பயன்படுத்தி அரசியல் பச்சோந்திகள் நிறம் மாற்றி இடம்மாறலாம்,. போராட்டம் உணர்வு மயமானது. இழக்கப்பட்ட ஒவ்வொரு உயிர்களின் அந்த கணத்தை மனக்கண்ணில் இருத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதே குறியாகி அடுத்து தீர்வுத்திட்டத்தைப்பற்றி இனியும் மக்கள்தான் யோசிக்கவேண்டும்.
ina alipu
ina alipu
ina alipu
ina alipu
ina alipu
news
ina alipu
ina alipu
ina alipu
ina alipu
ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்.