ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 24 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் இன்று காலை இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்தன.

தீர்மானத்துக்கு எதிராக 15  நாடுகள் வாக்களித்துள்ளன.

மேலும் 8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.

இந்தியா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்று ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

மலேசியா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமால் நடுநிலை வகித்தது.

வாக்களிப்பு விபரம்

இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஆதரித்து
AUSTRIA
BELGIUM
BENIN
CAMERON
CHILE
COSTA RICA
CZECH REPUBLIC
GUANTEMALA
HUNGARY
INDIA
ITALY
LIBYA
MAURITUS
NIGERIA
NORWAY
PERU
POLAND
MOLODOVA
ROMANIA
SPAIN
SWISS
USA
URUGAY

இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றக்கூடாதென்று
BANGALADESH
CHINA
CONGO
CUBA
ECUADOR
INDONESIA
KOWEIT
MALDIVES
MAURITANIA
PHILIPINES
QATAR
RUSSIA
SAUDI
THAILAND
UNGANDA

நடுநிலமையாக வாக்களிக்காம் ஒதுங்கி இருந்த நாடுகள்
ANGOLA
BRUKINA FASO
BOSTAWANA
DIJIBUTI
JORDAN
KYRGSTAN
MALAYSIA
SNEGAL
வடக்கில் இருந்து இராணுவத்தை மீளப் பெறுமா அரசு? (அமெரிக்காவின் பிரேரணை இணைப்பு)

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை, தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் மாபெரும் இராஜதந்திரச் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த 4 வாரங்களாக, உலகத் தமிழர்களின் எதிர்பார்புக்கு மட்டுமல்ல, இலங்கைத் தீவை மையப்படுத்திய உலக அரசியல் வெளியிலும், இப்பிரேரணை விவகாரம் முக்கியவிடயமாக மாறியிருந்தது.இந்நிலையில் இன்று ஐ.நா கூட்டத் தொடர் அமர்வில் கடும் வாதப் பிரதிநதிவாதங்களுக்கு மத்தியில் இந்தப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட இன்று வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது..

பிரேணையின் தமிழ் வடிவம் வருமாறு,

ஐக்கிய நாடுகள் சாசனம், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், மனித உரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய விதிகளுக்கு அமைவாக…

பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச விதிகளுக்கு அமைவாக இருப்பதை உறுதிப்படுத்தும் உறுப்பு நாடுகளது கடமைக்கு அமைவாகவும், குறிப்பாக பொருத்தமான சர்வதேச மனித உரிமைகள், பாதுகாப்பு, மனிதாபிமான விதிகளுக்கு அமைவாகவும்…

சிறிலங்காவின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்  அறிக்கையின் முடிவுகளையும் பரிந்துரைகளையும் மற்றும் சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இவ்வறிக்கை வழங்கிய பங்களிப்பை ஏற்றும்..

சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் படுகொலைகள் மற்றும் காணாமற் போதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையிட்டு பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ளுதல், வடக்கிலிருந்து இராணுவத்தை விலக்குதல், காணி தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பாரபட்சமற்ற பொறிமுறையை உருவாக்குதல், தடுத்து வைத்தல் தொடர்பான கொள்கைகளை மீளாய்வு செய்தல், சுயாதீனமான சிவில் சமூக கட்டமைப்புகளை பலப்படுத்துதல், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குதல் மூலம் இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காணுதல், அனைவரதும் கருத்து வெளிப்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், சட்ட ஆட்சி முறை தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்கள் சார்ந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வரவேற்று…

சர்வதேச சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டமை குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் கவனத்திற்கொண்டு..

1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதுடன் நீதி, பொறுப்புப் கூறுதல், சகல இலங்கையர்க்கும் இடையிலான நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்த, பொருத்தமானதும் நம்பிக்கையானதுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் சட்டரீதியான கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றவும் சிறிலங்கா அரசைக் கோருதல்

2. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து எடுக்கப்படவுள்ள விபரங்கள் உள்ளிட்ட, விரிவான செயற்திட்டத்தை விரைந்து முன்வைக்குமாறும், சர்வதேச சட்டவிதிகள் மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து கவனம் செலுத்துமாறும் சிறிலங்கா அரசாங்கத்தைக் கோருதல்

3. மேற்சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தவதற்குரிய ஆலோசனைகளையும் தொழில்நுட்ட உதவிகளையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தை வழங்குமாறும் சிறிலங்கா அரசாங்கத்தை இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுவதுடன் இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகத்தின் 22 வது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுதல்.