Wednesday, August 29, 2012

கொள்கையற்று தடுமாறும் இந்தியா என்ற இந்தியா.


சர்வதேச விதிமுறைகளை மீறி பாரிய இனப்படுகொலை புரிந்த ஒரு இராணுவம், இந்திய-தமிழக மீனவர்களை அன்றாடம் கடலில் கொன்றொழித்து தொடர்ச்சியாக அத்துமீறி அடாவடி புரிந்து வருகின்ற இராணுவம்,

அப்பேற்பட்ட ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு எக்காரணம் கொண்டும் இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது, என தமிழ்நாடு அரசு தனது தார்மீகமான எதிர்ப்பை மிகத்தெளிவாக பலதடவை உத்தியோக பூர்வமாக இந்தியமத்திய அரசுக்கு தெரிவித்தபோதும், தமிழக அரசிற்கோ தமிழக அரசியற் கட்சிகளுக்கோ, எள் முனையளவும் மதிப்பளிக்காமல்  இலங்கை இராணுவத்துக்கு பயிற்சிகளை இந்தியா தொடர்ந்து வழங்கும் என இந்திய காங்கிரஸ் (மத்திய) அரசின் பாதுகாப்பு இணை அமைச்சகம் அதிகாரபூர்வமாக ஆணவமாக தெரிவித்திருக்கிறது.

இந்தியாவை ஆட்சி செய்யும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் - கொள்கை வகுப்பாளர்களின் தொடர்ச்சியான தமிழர் விரோதப்போக்கின் பிரதிபலிப்பே தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கை உதாசினப்படுத்தப்பட்டு, தமிழகத்தை மதிக்காத மத்திய அரசின் எதேச்சதிகார முடிவாக பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு மட்டுமன்றி, இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மானிலங்கள், மற்றும் காங்கிரஸுக்கு ஒத்தாசையாக இருக்கும் மானில ஆட்சிகள் தவிர எதிர்நிலை கட்சிகள் ஆட்சிசெய்யும்  மானிலங்களின் மனநிலையை,  தார்மீக உரிமையை காங்கிரஸ் அரசு கவனத்தில் கொள்ளாது என்ற எதேச்சதிகார செய்தியும் இந்த இடத்தில் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.

இலங்கை இராணுவம் ஒழுக்கமற்றது, கட்டுப்பாடற்று தன்னிச்சையாக அராஜக போக்காக நடக்கவல்லது என்ற குற்றச்சாட்டுக்கள் ஐநா மன்ற பேச்சாளர்களின் செய்திகளில் இருந்தும், இலங்கை உள் நாட்டு இராணுவ நடத்தைகள் மூலமும், கணக்கற்ற ஈழ தமிழர்களின் படுகொலை வீடியோ காட்சிகள் மூலமும் சர்வதேசத்தால் அறியப்பட்டு ஆய்வுக்குள்ளாகியிருக்கிறது.


2007ஆம் ஆண்டு நவம்பரில் ஹெய்டியில் அமைதிகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்தினரில், 111 படையினரும், 3 இராணுவ அதிகாரிகளும் அந்த நாட்டு சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி மிருகத்தனமாக இச்சையை தீர்த்துக்கொண்டது, மற்றும் சுரண்டலுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை இராணுவத்தினர் அனைவரும்  ஐநா அதிகாரிகளின் மிகுந்த கண்டனத்துடன் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.  இது ஒரு சர்வதேச செய்தி, இந்த வெட்கக்கேடான விடயம் இந்திய அரசாங்கத்தின் காதுகளுக்கு எட்டியதா இல்லையா என்பது தெரியவில்லை.

அதுதொடர்பாக நியுயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கி, கருத்து தெரிவிக்கையில், ஹெய்டியில் அமைதிகாப்புப் படையில் பணியாற்றிய இலங்கை இராணுவத்தினர் அங்குள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும். அந்த பொறுப்பும் கடமையும் இலங்கை அரசாங்கத்திற்கே உண்டு. இக்குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்ட இலங்கை இராணுவத்தினர் கட்டாயம் அதற்காகத் தண்டிக்கப்பட வேண்டும். இதனை இலங்கை அரசாங்கமே செயற்படுத்த வேண்டும் என்றும் கண்டிப்பாக கூறியிருந்தார்.

ஸ்ரீலங்கா இராணுவத்தினர் ஹெய்டியில் முறைகேடாக நடந்ததாக கூறப்படும்  ஐநாவின் குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க,  இலங்கை போரின்போது இலங்கை இராணுவம் அந்நாட்டின் இன வெறி ஆட்சியாளர்களின் கட்டளைக்கொப்ப நடந்துகொண்ட அராஜக முறைமை, சர்வதேச கண்டனத்தை பெற்று, நடந்த  சம்பவங்கள் அனைத்தும் பாகுபாடற்ற பகிரங்கமான  நீதி விசாணக்குட்பத்தப்பட்டு தண்டனை வழங்கவேண்டுமென்று சர்வதேசம் கண்காணித்துகொண்டிருக்கும் சமயத்தில் எந்த ஒரு வாத பிரதிவாத நீதி நியாயங்களையும் இந்திய மத்திய சோனியா, மன்மோகன் அரசு, கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. ஏழுகோடி தமிழர்களை உள்ளடக்கிய ஒரு மானிலத்து மக்களின் பெரும்பான்மை அரசின் உரிமை கோரிக்கை உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறது, ஒரு மானில அரசின் முதலமைச்சரின் தார்மீக கோரிக்கை சற்றும் மதிப்பளிக்கவில்லை.

ஊடுருவி பார்க்குமத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும், அந்நாட்டின் இராணுவத்திற்கும், இந்திய அரசாங்கம் ஏதோ காரணங்களுக்காக மிகவும் அச்சப்பட்டு ஸ்ரீலங்காவின் எண்ணங்களை நிறைவேற்ற கைகட்டி பணிந்து நிற்பதாகவே உணர முடிகிறது.

1. சீனாவின் சக்திமிக்க ஆதிக்கம் ஸ்ரீலங்காவில் குவிந்திருப்பமை,....  ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் திடமான வெளியுறவு கொள்கை,.... அதனால் ஸ்ரீலங்காவை எதிர்க்க முடியாத இந்தியாவின் உறுதியற்ற அச்ச நிலை,....

2, திட்டமிடல் இல்லாமல் 2009 ல் ஈழ போர்க்களத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்துடன் இணைந்து இந்தியாவும் குற்றம் புரிந்தமை,.... அதனால் ஸ்ரீரீலங்காவின் அசைவுக்கு ஒத்துக்கொண்டு ஆடவேண்டிய கையறு சூழ்நிலை.....

3, மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களால் உறுதியான முடிவெடுத்து அரசாங்கதை நகர்த்தி கொண்டு செல்ல முடியாத ஆளுமையின்மை. இவைகளையே காரணமாக கொள்ள முடியும்.

சீனா இலங்கையில் காலூன்றிவிடும் அதற்கான இராசதந்திரமாக இலங்கை அரசாங்கத்தின் நட்புறவை தக்க வைத்துக்கொள்ள இலங்கை அரசாங்கத்தை பகைக்காமல் அனுசரித்துப்போகவேண்டிய தேவை இருப்பதாக முதுகெலும்பில்லாத பிரதமர் மன்மோஹன் சிங் தொடர்ச்சியாக சொல்லி வருகிறார். எவரையும் பாதிக்காமல் இருக்கும்வரையில் அந்த கூற்றை ஏற்றுக்கொள்ள முடியும்,. ஈழத்தமிழர்களுக்கு கொள்ளிவைத்துத்தான் சீனாவை கட்டுப்படுத்த ஸ்ரீலங்காவின் நட்புறவை கட்டிக்காக்கவேண்டுமென்றால் அதில் என்ன நியாயமிருக்கிறது, அதன் விளைவு மூன்று இலட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க காரணமான மன்மோஹன் சிங்கால் இந்திய கடற்பரப்பில் தொழில் புரியும் தனது நாட்டு மக்களை இலங்கை இராணுவத்திடமிருந்து காப்பாற்ற வழியில்லை, அதுபற்றி பேசக்கூட திராணியற்று சர்வதேச கண்டனத்துக்குரிய இராணுவத்திற்கு பயிற்சியளிக்க இடம் கொடுக்கிறார் என்றால் அந்த ராஜதந்திரத்தை என்னவென்று சொல்ல?

உதாரணத்துக்கு ஒரு சிறிய தகவல் கொழும்பு நகரில் காலி வீதியில் மிகப்பெரிய காணி ஒன்று  கலாசார மையம் கட்ட, இந்தியாவிடம் ஒப்படைப்பதாக, இலங்கை அரசு பேச்சுவார்த்தை முடிந்து வாக்குறுதி அளித்து ஒப்புக்கொண்டிருந்தது.  இந்த நிலத்தை  கையகப்படுத்தும் நடவடிக்கையில் இந்திய தூதரகம் ஈடுபட்டது. ஆனால்  100 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை இந்தியாவுக்கு கொடுக்காமல் போக்கு காட்டி ஏமாற்றிவிட்டு சீனாவின் விமான தொழில் நுட்ப நிறுவனத்துக்கு, இலங்கை அரசு கொடுத்துள்ளது. இந்த இடத்தில் ஐந்து நட்சத்திர ஓட்டலை கட்ட, சீன விமான நிறுவனமான, "கேடிக்' முடிவு செய்துள்ளது.  இலங்கை அரசு இந்தியாவுக்கு மதிப்பளிக்காமல் சீன நிறுவனத்துக்கு காணியை கொடுத்திருந்தது. அதுமட்டுமல்லாமல் இலங்கையின் பல பகுதிகளிலும்  ஹம்பாந்தோட்ட, கொழும்பு, நீர்கொழும்பு, திருகோணமலை, மட்டக்களப்பு ,முல்லைத்தீவு, என்று அனைத்து இடங்களிலும் சீனாவின் பெருத்த முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன,

சீனாவின் ஆதிக்கத்தை இந்திய ராசதந்திரத்தால் கட்டுப்படுத்த முடியும் என்று நம்பினால் அது 21ம் நூற்றாண்டின் அதிசயம் என்றுதான் சொல்ல முடியும். சீனா இலங்கையில் காலூன்றுவதற்கு எடுகோலாக இருந்ததே இந்தியாவின் திட்டமில்லாத உறுதியற்ற வெளியுறவுக்கொள்கை வகுப்பாளர்கள் என்பதே பல ஆய்வாளர்களின் முடிவு.

சமீப காலங்களாக இந்திய அரசு தனது உள்நாட்டின் வளர்ச்சித்திட்டங்களை கவனத்தில் கொள்ளாமல் ஏனோ தானோ என்ற போக்குடன் மக்களை ஏமாற்றும் விதமாக போலியான ஒரு தோற்றப்பாட்டை பூதாகரப்படுத்துவதுபோல்  செயற்படுத்திவரும் சில காரியங்கள் அரசியல் ஆய்வாளர்களிடத்தே பெருத்த கேள்வியை தோற்றுவித்திருக்கிறது. எந்த ஒரு அடித்தளத்தையும் திடப்படுத்தி கட்டமைக்காமல், மக்கள் ஆதரவையும் தன்னகத்தே உள்வாங்கிக்கொள்ளாமல் தெற்காசிய பிராந்தியத்தில் ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி இந்தியாவை ஒரு வலிமை மிக்க நாடாக இருப்பதாக போலியாக காட்டிக்கொள்வதிலேயே இந்திய அரசு காலம் கடத்துவது தெரிகிறது. எந்த நோக்கமும் இல்லாமல் அடுத்தடுத்து பல கோடி ரூபாய்களை செலவழித்து ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி தான் ஒரு வல்லமை மிக்க நாடென உலகுக்கு காட்டி காலத்தை ஓட்டிவிடலாம் என்பதிலேயே இந்தியா நம்பிக்கை கொண்டிருப்பது மட்டும் தெரிகிறது.

இது எந்தளவுக்கு அந்த நாட்டின் வல்லமையை கட்டிக்காக்கும் என்பது விஞ்ஞான இராணுவ ஆய்வாளர்களின் ஆய்வுக்குட்பட்ட விடயம். இருந்தும், வளர்ச்சி கண்ட உலக நாடுகளின் அடிச்சுவட்டையும், யதார்த்த நிலையில் கடந்தகால உலக வரலாற்றையும் நோக்கும்பொழுது இந்தியாவின் இந்த மாயைப்போக்கு வீழ்ச்சியை நோக்கியே இட்டுச் செல்லும் என்பது நாளடைவில் புரியப்படலாம், இதனால் ஒரு கட்டத்தில் மக்கள் கிளர்ச்சியையும், பொருளாதார நலிவையும், எதிர் நோக்குவதோடு அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லாமல்ப்போய் தெளிவற்ற சீரழிவான பாதையை திறந்துவிடும்,  நாடு மக்களின் நம்பிக்கையின்மையை பெற்று வேறுவிதமான அரசியல் உத்திக்கு தள்ளப்படலாம்? உதாரணத்திற்கு சோவியத் யூனியனின் ஆட்சியாளர்கள் மக்களின் மனநிலையை மறந்து அணுவல்லமையை பறைசாற்றப்போய் நாட்டை உடைத்த கதை என்பது போலவே இந்திய வழித்தட வரலாற்று பாதையின் மூலம் விரும்பத்தகாத தரவுகள் உணரக்கிடைக்கிறது.


அடிப்படையில் இந்தியா , கல்வி, அரசியல் பொருளாதாரம்,  இராஜதந்திர சணக்கியம், திட்டமிடுதல் ஆகியவற்றில் மிகவும் பின்தங்கியே இருந்து வருகிறது.  நாட்டில் ஆண்டான் அடிமை என்ற உறவுமுறை தொடர்ந்து பேணப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான அரசியல் பாதையல்ல என்பதே ஆய்வாளர்களின் கணிப்பு. இந்தியா தாராள பொருளாதார கொள்கைக்குள் இறங்கிய சில பத்துவருடங்களின் பின் வெளிப்பகட்டுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய, சீனா நாடுகளுடன் பொருளாதார மற்றும் வல்லமையில் சமநிலையில் இருப்பதாக ஒரு மாயையை தோற்றுவித்து  அணு ஆயுத அரசியலை முன்னிலைப்படுத்தவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதையும் காணலாம்  மன்மோஹன் சிங் அரசும், கொள்கை வகுப்பாளர்களும் அவற்றையே தொடற்சியாக விரும்பி வரவேற்று ஆர்வம் காட்டி வருவதையும் காணலாம்.




உள் நாட்டில் பெருவாரியான மக்களின் சீரழிவான வாழ்க்கைத்தரம், கல்வியின்மை, வறுமை, உள்ளூர் கிளர்ச்சிகள், அரசியல் நெருக்கடிகள், தெளிவற்ற வெளியுறவுக்கொள்கை, ஊழல் முறைகேடு,  நிர்வாகச்சீர்கேடுகள் இலஞ்சம், எவரையும் தண்டிக்க முடியாத இத்துப்போன சட்ட நிர்வாகம். இப்படி பல ஆயிரம் பிரச்சினைகளின் உருவம்தான்  இந்தியாவாக உருவெடுத்து நிற்கிறது, இவைகளில் வளர்ச்சிப்பணி மற்றும் புதிய பொருளாதார திட்டமிடல்களுக்குள் செல்ல முடியாமல் இடைமறிக்கும் பெருத்த ஊழல் முறைகேடுகள், எவரையும் தண்டிக்க முடியாத அரசியல் தலையீடுகள், உறுதியில்லாத ஓட்டை நிறைந்த இத்துப்போன சட்டங்கள், இவைகளைப்பற்றித்தான் இன்றைய இந்திய பாராளுமன்றம். அன்றாட விவாதமாக்கி முடிவுக்கு வரமுடியாமல் பேசு பொருளாக விவாதித்துக்கொண்டிருக்கிறது..  இங்கு வேறு விடயங்களை பேசுவதற்கு நேரமும் இல்லை சூழலும் இல்லை, ஊழல் விவாதங்களை முடிப்பதற்கே முப்பது, நாற்பது வருட விவாதம் தேவைப்படும் நிலையில் இருப்பதால் எந்த வளர்ச்சி பணிகளுக்கும் அங்கு இடமில்லை.  "பார் ஆளும் மன்றம்"  முடிவில்லாத ஊழல் விவாத மன்றமாகியிருக்கிறது.

புதிய வளர்ச்சிப்பணி உருவாகாவிட்டாலும் எதிர்பாராமல் உண்டாகும் இயற்கை சீற்றங்களால் (வெள்ளம் புயல், சுனாமி, நில நடுக்கம்) ஏற்பட்ட பாதிப்புக்கள் வந்தாலும் அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டமாகவே இருந்து வருகிறது. அனர்த்த பணிகளை சீர்செய்வதிலும் 100 % முறைகேடுகள் ஊழல்களே தலைவிரித்தாடுகின்றன. ஜனாதிபதி, பிரதமர், மந்திரிகள், எம்பி க்கள் கட்சி தலைமை அதிகாரிகள் எவரும் விதிவிலக்கல்ல,

இதுதான் இந்தியாவின் யதார்த்தமான நிலைப்பாடு. இவைகளை மூடி மறைக்கும் முகமாக மக்களை திசைதிருப்ப அவ்வப்போது சில செய்திகளை அரசாங்கம் திரைமறைவில் இருந்து வெளியிடுவதுமுண்டு. அப்படியொரு துணுக்குத்தான் இந்தியா செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்ய இருப்பதாக சமீபத்தில் இந்திய பிரதமர் திரு மான் மோஹன் சிங் அறிவித்திருந்தார். அதை அவர் நகைச்சுவையாக கூறினாரோ புரியாமல் கூறினாரோ என்பது வேறு விடயம். ஆனால் மக்களின் வயிற்றுப்பாட்டு வாழ்க்கையை ஆராயாமல் செவாய்க்கிரகத்தை ஆராய முயற்சித்திருப்பது அவரது தகுதிக்கும் வயசுக்கும் அழகானதல்ல, இச்செய்தியை மிக்க மூடத்தனமான நகைச்சுவையாகவே உலக நாடுகள் எடுத்துக்கொண்டன.  உள்ளூரில் உள்ள அடிப்படை தேவைகளை சீர்ப்படுத்த முயற்சிக்காமல் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்ய   இந்தியா முயற்சிப்பது தேவையற்றது என்று அந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆலோசனையும் வழங்கி மீறி இப்படியான செயல்களில் இந்தியா ஈடுபடுமானால் தம்மால் வழங்கப்படும் உதவி நிதி நிறுத்தப்படும் என பிரித்தானிய அரசு எச்சரித்திருந்தது.

112 கோடி மக்கள் தொகையை மிஞ்சி நிற்கும் இந்தியா 5.8 கோடி மக்கள் தொகை கொண்ட இங்கிலாந்து போன்ற நாடுகளிடம் கையேந்தி உதவிபெற்றே வாழ்க்கை நடத்தும் கட்டத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிரகத்தில் விஞ்ஞான ஆராய்ச்சி புரட்சி,. தனது சொந்த நாட்டு மக்களை அன்றாடம் கடலில் கொண்றொழித்து வரும் ஸ்ரீலங்கா இராணுவத்தை கண்டித்து கட்டுப்படுத்தாமல் அந்த இராணுவத்திற்கு ஏதோ காரணங்களினால் பணிந்து பயிற்சியும் கோடிக்கணக்கான பண உதவி செய்வது, இப்படியான மட்டரகமான செயல்களை இந்தியாவின் பாமரன் இன்னும் சரியாக அறிந்து கொள்ளவில்லை அவனும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில்த்தான் இந்த விடயங்கள் இங்கு உள்ளடக்கப்படுகின்றன,.

2009 ம் ஆண்டுக்கு முன்பும் பின்பும் பலமுறை இலங்கை இராணுவம் பயிற்சிக்காக இந்தியாவுக்கு வந்து பயிற்சி பெற்று வருகிறது. 2009 க்கு முன் இந்தியாவில் ஸ்ரீலங்கா இராணுவம் பயிற்சி பெற்றதை எவரும் எதிர்த்திருக்கவில்லை. 2009 இலங்கையில் எண்ணிலடங்கா மனித படுகொலையை நிறுவி முடித்து சர்வ தேச குற்றவாளிக்கூண்டில் நின்றுகொண்டிருக்கும் ஒரு இராணுவத்திற்கு தமிழர்கள் சார்பில் தமிழகத்தின் எதிற்புக்கு மத்தியிலும்  பயிற்சியளிக்க நடுவண் அரசுக்கு என்ன தேவையிருக்கிறது. இந்தியாவிலிருந்து தமிழ் நாடு தள்ளி வைக்கப்பட்டுருக்கிறதா என்ற கேள்வி தமிழனுக்கு எழவேண்டுமென்று நடுவண் அரசு விரும்புகிறதா?

இப்படியே இந்திய மத்திய அரசு தொடர்ச்சியாக நடந்துகொள்ளுமானால் ஒரு காலகட்டத்தில் இந்தியா என்ற ஒரு பெரிய துணைக்கண்டம்  ஸ்ரீலங்காவின் ஒரு துணைக்கண்ட மானிலமாக அல்லது சீனாவின் அதிகாரத்தின்கீழ் ஒரு சிற்றரசாக சுருங்கி கடமை செய்யும் நிலைக்கு வருவது தவிர்க்க முடியாமல் போகலாம். அல்லது வேறுவிதமான அரசியல் இந்தியத்துணைக்கண்டத்தில் தோற்றுவிக்கப்படலாம், இன்றைய ஆட்சியாளர்கள் இவற்றை புரிந்துகொண்டு  அரசியற் கொள்கை மற்றும் வெளியுறவு கொள்கைகளில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது அதுதான் இந்திய அரசியலுக்கும் நல்லது மக்களுக்கும் நல்லது.

"கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தன் கொல்லாச்சிறகை விரித்தாடினாற் போலவே கல்லாதான் கற்ற கவி",

ஈழதேசம் இணயத்திற்காக. 




கனகதரன்.

Thursday, August 16, 2012

3 ம் போர்க்குற்றவாளி கருணாநிதிக்கு புதிய டெசோ பரிமாணம் பற்றி ஒரு பகிரங்கமான பதிவு.


என்றும் எங்கள் மனதின் மறக்க முடியா நினைவில் நிறைந்து நிற்கும் மூத்த அரசியல்வாதி கருணாநிதி அவர்களுக்கு!
உங்கள் நலம், மற்றும் உங்கள் சித்தம் நாம் நன்றாக அறிவோம்.  இருந்தும், இன்னும் நீங்கள் உங்கள் குடும்பங்களுடன் இனிதே நீண்ட காலம்
வாழவேண்டும் என்பதே எமது ஆவல்!. அதற்கு நீங்கள் ஒளித்து கும்பிட்டு வணங்கும் எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரிவாராக!..

இன்றைய சூழலில் நீங்கள் வேசமிட்டு பாசாங்கு செய்து நிமிடத்துக்கு நிமிடம் மாறுவேடமிட்டு நடித்து, ஒளித்து மறைக்கும்  ஈழம் பற்றிய உங்கள்  புதிய நாடக செய்திகள் பலவற்றை, உங்களுக்கும் தமிழ்ச்சமூகத்திற்கும்  விபரணப்படுத்திக் கொண்டிருக்கவேண்டிய தேவை இருப்பதாலும்,  புதிதாக நீங்கள் மூட்டிக்கொண்ட டெசோ என்ற புகை மூட்டத்தினுள் மறைக்க முயலும் முக்கியமான சில உண்மைகளை விபரித்து சொல்லவேண்டிய கட்டாயம் இருப்பதாலும்,    இந்தப்பதிவை எழுதி உங்களுக்கும், எனது அன்பான தமிழினத்திற்கும் பகிரங்கப்படுத்தவேண்டிய  சூழ்நிலையில், இந்தப்பதிவு மூலம் உங்கள் கறைபடிந்த வரலாற்று பாதையின் சில பகுதியினை சத்தியத்துடன் பதிவு செய்து கொள்ளுகின்றேன்!.

உங்கள்மீது, எனக்கோ எனது இனத்துக்கோ தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது.  உங்களை விரோதியாக பார்க்கவேண்டிய தேவையும் அடிப்படையில் எங்களுக்கு இருந்ததில்லை.  ஆரம்பகாலங்களில் உங்களை ஒரு கதாநாயகனாக விரும்பி வரவேற்றவர்கள்தான் ஈழத்தமிழர்கள். காலமாற்றமும் உங்கள் நடத்தையும் அனைத்தையும் புரட்டி போட்டிருக்கிறது. இன்று ஈழத்தமிழினம் உங்களை துரோகியாகவே உருவகப்படுத்திவிட்டது.. டெசோ மாநாடுகள் மட்டுமல்ல நீங்கள் தூக்கு போட்டு செத்து நியாயப்படுத்தி காட்டினாலும் இனி வரும் காலத்தில் எவரும் உங்களுக்காக கவலைப்படப்போவதுமில்லை உங்களை நம்பப்போவதுமில்லை. நீங்கள் தியாகி முத்துக்குமரனின் மரணத்தின்போது கூறியதுபோலவே கருணாநிதிக்கு ஏதோ கெட்ட நோய் பிடித்து விட்டதால் தூக்கில் தொங்கி செத்துப்போனார் என்றே கூறுவர்.

சில பத்து வருடங்களாக உங்கள் சுயநலம் சார்ந்த சூழ்ச்சி அரசியல், எங்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கி இதயம் புண்ணாக்கியிருக்கிறது, தேவையில்லாமல் உங்கள் சுயநலச் சதி எங்கள் சமுதாயத்தை கொடுமைப்படுத்தியிருக்கிறது. எதிரியான சிங்களவனின் செயற்பாட்டை நேரிடையாக நாங்கள் எதிர்கொண்டாலும், உங்களது துரோகத்தனமான சூழ்ச்சிக்கு தப்பிப்பதே எங்களுக்கு பெரும் போராட்டமாகிவிட்டது.  உங்கள் அந்திம காலத்திலும் அது தொடர்கதையாக தொடர்வதுதான் எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இந்தியா - தமிழ்நாட்டின், மொழி, அரசியல்-பொருளாதார,  மற்றும் குடிமக்களின் சிறுமை நிலைக்கு நீங்கள்தான் முழு மூல காரணகர்த்தா. 
என்றும்,  மொழிப்பெயராலும், இனப்பெயராலும் ஏமாற்றி அரசியல் செய்து உலகத்தர பணக்கார குடும்பங்களின் தலைவன், உலகப்பிரசித்தி பெற்ற மகா ஊழல்வாதி என்றும் பல ஆதார தரவுகள் மூலம் உங்கள்மீது பெருவாரியான குற்றச்சாட்டு உண்டு,  உள்ளூர் ஊடகங்கள் மட்டுமல்லாது முன்னணியிலுள்ள VICKI LEEKS, WASHINGTON POST,  NEW YORK TIMES,  GUARDIAN , BBC,  போன்ற சர்வதேச ஊடகங்களும் அவற்றை அவ்வப்போது ஆதார பூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கின்றன.

இன்றைக்கும் நீங்கள் மக்களை குழப்பி தூண்டிவிடும் தந்திர அரசியலை சாதுரியமாக செய்து உங்கள் அழுக்குக்களை மறைக்கவே முன்னுரிமை கொடுத்து வருகிறீர்கள்.  உங்கள் கேள்வி பதில், மற்றும் உ பி கடிதங்கள், அறிக்கைகள் மூலம் சகலரும் உங்கள் மனநிலையை நன்கு அறிவர். உங்களுக்கு அந்த செயற்பாடுகள் ஒரு மன நிறைவை தந்தாலும் பொதுவில் அவை நகைச்சுவையாகி இருக்கின்றன. அவைபற்றி நான் விலாவாரியாக அறிந்திருந்தாலும் எனக்கு நேரடியான பாதிப்பு அனுபவம் இல்லாதமையினால் அதுபற்றி ஆழமாக தொட்டு செல்லுவதை விரும்பாவிட்டாலும், உங்கள் சுயநல ஊழல் சூழ்ச்சி அரசியல், கடல் கடந்து எங்களையும் எங்கள் தேசத்தையும் மோசமாக பாதித்துக் கொண்டிருக்கிறது, 

நீங்கள் உங்கள் உள்நாட்டு அரசியலை எப்படிச்செய்தாலும்  பரவாயில்லை, அதில் ஓரளவு நியாயங்களும் இருக்கக்கூடும்,  பல வருடங்களாக பாதிக்கப்பட்டு நொந்துபோய் ரணமாக இருக்கும் எங்கள்மீது நீங்கள் இடைவிடாது இனிப்பு கலந்து நஞ்சு தெளிப்பதும், சிரித்துக்கொண்டு தீயால் சுடுவதும், எவராலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உங்கள் சுய ரூபம் அனைவரும் அறிந்து கொண்டு விட்டார்கள். உங்கள் கிலிசகேடான சூழ்ச்சி வஞ்சக அரசியலால்  எனது இனம் எவருக்கும் மண்டியிடாமல் கணிசமான அளவு முள்ளிவாய்க்கால் முட்டுக்குள் உயிரை விட்டு செத்து அழிந்து போய்விட்டது,. இருக்கும் மிச்சம் சொச்சமும் உங்கள் சூழ்ச்சிக்குள் மூழ்கி அழிக்கப்பட்டுவிடுமோ, தேவையற்ற இடைச்செருகலான நீங்கள் ஏலம் கூறி எங்கள் அடையாளங்களையும் உரிமைகளையும் எங்களையும் விற்றுவிடுவீர்களோ என்ற பயம் ஒவ்வொரு ஈழத்தமிழனிடமும் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அந்த பேரபாயத்தை எதிர்நோக்கிய பயமே  வெளிப்படையான இந்த பதிவு.

நீண்டகாலமாக உங்கள் பதவிவெறி, குடும்ப நலன் காப்பதற்காக நீங்கள் நடத்தும் கபட சூழ்ச்சி அரசியல், அதற்காக உங்கள் வஞ்சக வலையை எங்கள்மீது  வீசி வந்தபோதும்  தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன், அவர்கள்  உங்கள் பிறவிக் குணமறிந்து முரண்படாத வகையில் எங்கள் அரசியல்த்தளத்தை உங்கள் சதி வலையில் சிக்காதவண்ணம் தப்பித்து எடுத்துச்செல்லவே முயன்று வந்திருக்கிறார். இருந்தும் உங்கள் கூட்டாளியான இந்திய மத்திய அரசின் விஷமமான வெளியுறவு சதி, மற்றும்  உங்கள் தலைமையிலான தமிழக அரசின் திட்டமிட்ட சதித்திட்டத்தால், இறுதியில் சர்வதேச அரசியற் களம் உங்கள் சதிவலையிலும் எங்களை சிக்க வைத்ததுண்டு, அந்த நேரங்களில் குறிப்பாக முள்ளிவாய்க்கால், முற்றுகையின்போது தமிழீழ மக்களின் மோசமான அவல உயிர் அழிவுக்கும், தமிழ் ஈழ எழுச்சி போராட்டத்தின் வீழ்ச்சிக்கும், நீங்கள்தான் முக்கிய காரணி என்பதை உலகம் அறியும், நாங்களும் வேதனையுடன் நினைவு கூருகிறோம்.

அதுபற்றி பல நலன் விருப்பிகள் பலமுறை உங்களிடம் கருணை கோரிக்கை வைத்து ஏமாந்ததும் உண்டு!.  இன்னும் பலர் நிதர்சனத்தை எடுத்து சொல்லி உங்களை நியாயமாக நடக்கும்படி கேட்டு பல  வேண்டுகோள் வைத்து உங்கள் செயலுக்காக காத்து ஏமாந்து போனதுமுண்டு!. பலர் அழுதும், திட்டியும் தீர்த்திருக்கின்றனர். தமிழ் நாடே கொதித்து போராடி தோத்துப்போனதும் நீங்கள் மறந்திருக்க முடியாது. தெருத்தெருவாக தீக்குளித்து உயிர் விட்டவர்களை நீங்கள் மனிதர்களாக கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை, இன்று நான் மட்டுமல்லாது முன்பே பல தமிழகத்து அரசியல் அறிஞர்களும், கல்விமான்களும் அதுபற்றி நேரடியாகவே சான்றுகளுடன் கடுமையான கண்டனமாக அவற்றை பதிவுசெய்திருக்கின்றனர். அதை மூடிமறைக்க நீங்கள் பற்பல அவதாரங்கள் எடுத்து புதிய சூழ்ச்சிகள் மூலம் எத்தனை நாடகங்கள் ஆடினாலும் இனியும் தமிழினம் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதே நிதர்சனம்,. அதனால் ஒட்டுமொத்த தமிழினத்தின் வெறுப்புக்கும் வெட்க்கக்கேடான பழிப்புரைக்கும் நீங்கள் ஆளாகியிருக்கிறீர்கள்.  மாபெரும்  சூழ்ச்சிக்காரன், பச்சோந்தி தனமான மனிதன் கருணாநிதி என்றே இன்றைக்கு அகில உலக தமிழ் இனம் நம்புகிறது.

இன்று மட்டும் புதிய டெசோ என்ற மயக்க புகையை மூட்டி குறளிவித்தை காட்ட இந்த வயதிலும் உங்களால் எப்படி முடிகிறது. உங்களுக்குள் இருக்கும் இதயம் மனிதனுக்குரியதுதானா என்ற கேள்வி எவரிடமும் எழுவது தவறென்று எவராவது வாதாட முடியுமா?

தமிழ் ஈழ மக்களின் தொன்மையான வரலாற்று விபரமறிந்த பலர் தமிழகத்திலிருந்தும், தமிழ் ஈழத்திலிருந்தும், ஈழமக்களின் விபரிக்க முடியாத இன்னல்களையும் எங்கள் அரசியல் சூழ்நிலைகளையும்  முக்கியமான சமையங்களில் உங்களை நம்பாவிட்டாலும் சம்பிரதாய முறைக்கேனும்  நீங்கள் ஒரு அரசியல் வியாதி என்ற முறையிலும் அப்போதய முதலமைச்சர் என்ற முறையிலும்  உங்களுக்கு தெரியப்படுத்தியே வந்திருக்கின்றனர். தவிரவும்  செய்தி ஊடகங்களும் தொலைக்காட்சிகளும்  ஈழத்து மக்களின் முள்ளிவாய்க்கால் அவலநிலையை பதட்டத்துடன்  நிமிடத்துக்கு நிமிடம் உலகத்தின் கடைசி புள்ளிவரை கொண்டு சேர்த்துமிருக்கிறது, அத்தனைக்கும் தமிழகத்தின் முதலமைச்சராக, மத்திய அரசின் நடத்துனராக, அதிகாரத்துடன் இருந்த நீங்கள் அனைத்திலும்  எதிர்மறையான செயலையே 2009 மே 19 வரை மனிதத்தன்மையில்லாமல் முள்ளிவாய்க்காலில் ஈடேற்றி முடித்தீர்கள்.

கருணாநிதி மத்திய அரசுக்கு ஒரு மிரட்டல் மூலமே  இறுதிப்போரை நிறுத்தியிருக்கலாம், அதற்கான அனைத்து அதிகாரங்களும் சக்தியும் அவரிடம் இருந்தது, மத்திய மானில அரசுப் பதவிகளை தக்க வைப்பதற்காகவும் ஊழல்களை மூடி மறைக்கவும்,  வேண்டுமென்றே காலங்கடத்தி விடுப்புக்காட்டி மத்திய அரசின் ஈழ அழிப்பு சதிக்குள் விழுந்து கருணாநிதி துணை போய்விட்டார் ஆனாலும் மத்திய அரசுதான் முக்கிய காரணி என்று விபரமறியாத பலர் கூறுவதுமுண்டு. கருணாநிதியால் இதற்குமேல் முடியவில்லை பலமுனைகளில் பாடுபட்டு தோத்துப்போனார் என்றும் திருமா போன்ற காங்கிரஸ்+ திமுக ஆதரவாளர்கள் கூறுவதுண்டு.

1) ஆனால் உண்மை என்னவென்றால் விடுதலைப்புலிகள் இயக்கம் இருந்தால் கருணாநிதி தன்னிச்சையாக சூட்டிக்கொண்ட தமிழின உலகத்தலைவர் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள முடியாது நாளடைவில் அது தன்னாரவாரம் பறிபோய்விடும் என்ற உள் எரிவும்,

2) எந்த நெருக்கடி நிலையிலும் தேசியத்தலைவன் பிரபாகரன் வந்து தனது காலடியில் விழுந்து யாசகம் கேட்கவில்லை, ஈழத்தமிழினமும் பிரபாகரனை நம்பிக்கையுடன் பின்பற்றி கருணாநிதியை மதிக்கவில்லை என்ற ஓர வஞ்சகம்.

3) 30 ஆண்டுகள் தாண்டியும் போராட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கம், ஊழல் மோசடி எதுவுமில்லாமல் நேர்மையாக ஒழுக்கமாக இருந்து முப்படைகளையும் வைத்து ஆட்சி நடத்தி வருகிறார்களே தமிழ்நாட்டு தமிழர்களும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை தார்மீக தமிழர் தலைவனாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டார்களே என்ற தாங்க முடியாத வயிற்றெரிச்சல் காழ்ப்புணர்ச்சியும்,

4) இவ்வளவு நெருக்கடியான நேரத்திலும் தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவியிலிருந்த கருணாநித்யை ஒரு பொருட்டாக மதிக்காமல் தமிழக தமிழர்கள அனைவரும்  ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அனைவரும் ஒரே அணியாக பிரபாகரனை ஆதரித்து நிற்கிறார்களே என்ற பொறாமையும்.

5)  ஈழத்தமிழர்களை காப்பாற்றப்போனால் சோனியாவை சந்திக்க நேரம் கிடைக்காமல் போகும், மத்தியில் நிச்சியம் பசையுள்ள மந்திரிப்பதவிகள் பறிக்கப்பட்டுவிடும், படிப்பறிவு குறைந்த அழகிரியை வரலாற்றில் மந்திரி ஆக்கிவிட முடியாது, செல்வ மகள் கனிமொழிக்கு மானிலங்களவை எம்பி என்ற பதவியை எதிர்பார்க்க முடியாது. அதி உச்சமாக 2G ஊழலில் சட்டச்சிக்கலிலிருந்து தப்பிக்க முடியாது. 

6)  தமிழக மக்களையும், எம்ஜீஆர் அவர்களையும், நெடுமாறனையும், வைகோவையும், சீமானையும் முன்னிலையில் மதிக்கும் ஈழத்தமிழர்கள் ஒரு பெரிய கட்சித்தலைவரான கருணாநிதியை கணக்கெடுக்கவில்லை என்ற வயிற்றெரிச்சல் தமிழீழத்தை எரிய துணை நின்றதென்பதே உண்மை.

இன மொழி இராணுவ அடக்குமுறை விரோதத்தை வென்றெடுக்க  ஈழத்தமிழன் 30 ஆண்டுகளாக சிங்களவனுடன் போராடினான் ஆனால் சிங்களவனால்  தமிழனை இலகுவாக வெல்ல முடியவில்லை,  ஆனால் கருணாநிதி  எரிச்சல், பொறாமை, இயலாமை, காழ்ப்புணர்வு  ஆகிய கீழ்த்தரமான உணர்ச்சிகழுக்காக சூழ்நிலையை சாதகமாக்கி சுயநலனுக்காக ஈழத்தை எரிக்க வஞ்சகமாக தீமூட்டினார், என்பதே உண்மை. இது ஆயிரம் ஆண்டு கடந்தும் வரலாற்றில் நிலைத்து நிற்க்கும்.

ஒருவேளை கருணாநிதி நீங்கள் உங்கள்  குறுகிய பார்வையை களைந்து சுயநலன் மறந்து மாற்றிச்சிந்தித்து செயற்பட்டு, முள்ளிவாய்க்கால் போரை நிறுத்தியிருந்தால்! இன்றல்ல என்றைக்கும் உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக, முத்தமிழ் வித்தகராக, கலைஞர் கருணாநிதியே நீங்களே திகழ்ந்திருக்க முடியும். இன்று சுயமாக கருணாநிதியும் சில ஆதரவாளர்களும் கருணாநிதியை மேற் சொன்ன அடைமொழி கொண்டு ஒரு சமாதனத்திற்க்காக விளித்தாலும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் வரலாறு இல்லை என்பதே நிதர்சனம்,..

கருணாநிதி நீங்கள் ஒரு பெருத்த கோடீஸ்வரர் என்ற முறையிலும், முக்கியமான கட்சி அரசியல் நடத்தும்  தலைவர் என்ற முறையிலும், ஈழத்தின் அயல் நாட்டின் ஒரு மானிலத்தில் முதலமைச்சராக இருந்தவர் என்ற முறையிலும், வயதில் மூத்தவர் என்ற முறையிலும் ஈழத்தமிழர்களின் சூழலை நீங்கள் கொஞ்சமேனும் அறிந்திருக்க நியாயமுண்டு, அந்த வகையில் மனிதத்தன்மையுடன் எங்கள் இடரை அவல நிலையை அறிந்து உதவி செய்யாவிட்டாலும், உபத்திரவம் செய்யாமல் விலகி நிற்பீர்கள் என நாங்கள் எதிர்பார்த்து தொடர்ச்சியாக ஏமாந்து போனோம்,. உங்களை எவராலும் இலகுவாக புரிந்து கொள்ள முடியாது என்பதும், பிடிகொடுக்காமல் பேசுவதில் அழிப்பதில் வல்லவர் என்பதும் நன்கு தெரிந்தவைதான்.

எங்கள் ஈழ அரசியல், போராட்ட விடயங்களில் இடைச்செருகலாக நீங்கள் புகுந்து தொடர்ச்சியாக செய்த சதி அரசியல், ஈழமக்களுக்கு சோதனையாகவும், வேதனையாகவும், துன்பமாகவும் அமைந்து பல இலட்சம் மனிதப் படுகொலையில் முடிந்திருக்கிறது. படுகொலைகளின் பின்னும் தப்பித்தலுக்காக  உங்களுக்கு சாதகமான நியாயப்படுத்தல்களை தொடர்ந்து வெளியிட்டபோதும் எவரும் உங்களை நம்பி உங்கள் பின்னால் வர விரும்பவில்லை,  உங்கள் வஞ்சகமான அணுகுமுறைகளால் பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதையும் நீங்கள் மறுக்க முடியாது!  அனைத்து சந்தற்பங்களிலும் உங்களை திருத்திக்கொள்ளும்படி சுட்டிக்காட்டி   கடுமையாக விமர்சித்து உண்மை நிலைகளை உங்களுக்கு புரிய வைப்பதற்காக பல மனிதாபிமான அமைப்புக்கள் மற்றும் மனித நலன் விரும்பிகள் தனி மனிதர்கள் இடைவிடாது  பலமுறை பல பகிரங்க மடல்களை எழுதி, பத்திரிகைகள் மூலமாகவும் வேறு பல ஊடகங்கள் மூலமாகவும் கடிதங்கள் மூலமாகவும், ஈழத்தின் நிதர்சனத்தை உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் சொல்லியிருக்கின்றனர். எதையும் நீங்கள் உள் வாங்கிக்கொண்டதாக தெரியவில்லை.

மனைவியின் பெயருக்கு வந்த கடிதத்தை அனுமதியில்லாமல் கணவன் பிரித்து படிப்பதும், கணவனின் நாட்குறிப்பை அனுமதியில்லாமல் மனைவி படிப்பதும் அவ்வளவு அநாகரீகம் என்பது எங்களது கருத்து.  அதேபோலத்தான் எங்கள் அரசியலில் நீங்கள் ஊடுருவி விட்டேந்தியாக தலையிடுவதாக நாங்கள் நினைக்கின்றோம். அதை நாங்கள் எவரும் விரும்பவுமில்லை உங்கள் புதிய டெசோ அரங்கத்தின் அமர்வுகளில்  அவற்றை புரிந்து கொண்டிருப்பீர்கள் என்றே நம்புகிறோம். தொல்காப்பியர் எழுதிய காப்பியத்துக்கும், வள்ளுவரின் குறளுக்கும் சிலாகித்து பூங்காவனம் எழுதிய உங்களுக்கு அவை புரியும் என்று நினைக்கிறோம்.

கடைசியாக நீங்கள் கெட்டு வீழ்ந்த வீழ்ச்சியை இட்டு கட்டி நிரப்புவதற்காக, போர் முடிந்து மூன்று வருடம் கழித்து ஈழ மக்களுக்கு மருந்து தடவுகிறேன், என இடைச்செருகலாக புகுந்து ஈழத்தமிழர்களை கலந்து ஆலோசிக்காமல்,  தமிழர்கள் அல்லதா உங்கள் வட நாட்டு வட்டத்தை கூட்டி, வஞ்சக மாநாடு நடத்தியது, திறந்த வீட்டிற்குள் ஏதோ நுழைந்துவிட்டதுபோன்ற உணர்வை எமக்கு ஏற்படுத்தி அருவருப்புடன் எரிச்சலடைய வைக்கிறது. நீங்கள் அவசரப்பட்டிருக்கவேண்டிய காலம், 2008/ 2009 ம் ஆண்டுகள், இன்று சூரிய அஸ்தமனத்தின்பின் உங்களுக்கு ஞானம் பிறந்ததுபோல் நடிப்பதால் உங்கள் பிறவிக்குணம் மாறிவிடாது என்பதும் எங்களுக்கு தெரியும்.

ஊழல் கூற்றச்சாட்டில் சிக்கி உங்கள் மகள் திஹாரில் இருந்தபோது நீங்கள் பட்ட பதகழிப்பும், பதட்டமும் இலட்சக்கணக்கான மக்கள் ஈழத்தில் செத்து சுடுகாடானபோது நீங்கள் காட்டியிருக்கவில்லை, இரும்புபோல, கருங்கல்போல, மரம் தடிபோல, செத்த பிணம் கணக்காக இதயமின்றி கிடந்தீர்கள்.  இப்போ மட்டும் எதற்காக குறளிவித்தை, அங்கே ஈழத்தில் மருந்து தடவுவதற்கு இப்பொழுது போர் நடக்கும் காலமல்ல. போர்க்குற்றவாளிகளை இனங்காட்ட நாங்கள் சர்வதேச ஆதரவை பெற்றுக்கொண்டிருக்கிறோம், நடந்த போருக்கு நீங்களும் முக்கிய சூத்திரதாரி என்பதை சர்வ தேச நீதிமன்றம்வரை கொண்டு செல்ல நாங்கள் தயாராகி போராடும் இந்த நேரத்தில், நானும் கூட என்று நீங்கள் புகுந்துகொள்வதை யாரால் அனுமதிக்க முடியும்? போர்க்குற்றவாளி (1, ராஜபக்க்ஷ, -(2 இந்திய மத்திய அரசு, -(3, அன்றைய தமிழக முதலமைச்சரான நீங்கள்தான் எங்கள் குறிக்கோள்)

எங்கள் போராட்டம் எவ்வளவு நியாயமானது என்பதை உங்களையும், உங்கள் கூட்டாளி அன்னை சோனியாவின் கட்சியும் தவிர, தமிழகத்தில் அனைவரும் அறிவர், நேற்று நீங்கள் டெசோவுக்கு விருந்தாளியாக அழைத்திருந்த உங்கள் நண்பன், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான்: இலங்கைத் தமிழர்கள் பிரச்னையை, வடமாநிலத்தவர்கள் அறிந்து கொள்ளவே இல்லை. ஈழத் தமிழர் என்றால் விடுதலைப் புலிகள்; பயங்கரவாதிகள் என்றே கருதி வருகின்றனர். எனவே, ஈழத் தமிழர்களின் உண்மை நிலையை விளக்க, வடமாநிலம் முழுவதும் கூட்டங்களை, "டெசோ' அமைப்பு நடத்த வேண்டும். "அமைதியான வழியில் போராடி அதனால் பயன் கிடைக்காமல் போகவே, விடுதலைப்புலிகள் கையில் ஆயுதங்களை எடுக்கவேண்டி இருந்தது என்ற உண்மை" தமிழக மக்களை தவிர மற்ற மாநில மக்களுக்கு தெரியவதில்லை. என்று கூறியிருந்தார் (டெசோ அரங்கில் உங்களுக்கு தெரியாமல் பஸ்வானுக்கு அந்த தகவலை யாரோ தெரிவித்திருக்கின்றனர்.) அவர் வேற்று மொழிக்காரரக இருந்தாலும் விடுதலைப்புலிகளையும் ஈழ விடுதலைப்போரையும் குறுகிய நேரத்தில் அறிந்தளவுக்கு  நீங்கள் தெலுங்கரானாலும் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழர்களால் ஐந்துமுறை முதலமைச்சராகி பல பில்லியன் கோடி சொத்து சேர்த்து வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கும்  நீங்கள் நீண்ட காலத்தில் உணரவில்லை அல்லது அறிந்திருக்கவில்லை.

நேற்றைய முன்தினம் 12-08-2012 அன்று நீங்கள் எவ்வளவோ பிரயத்தனப்பட்டு எங்களின் பெயரால் கூட்டி முடித்திருந்த அடுத்த சூழ்ச்சித்திட்ட நாடகமான புதிய டெசோ, ஈழ மக்களின் வாழ்வியல் சீரழிப்பு, மாநாடுபற்றி நாங்கள் உள்ளூர விரும்பாவிட்டாலும், எதுவும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஏனென்றால் நாங்கள் இதைவிட பல பெரிய எதிர்ப்புக்களையும் சிறுமைகளையும் சந்தித்து வந்தவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அத்துடன் நீங்கள் சாகும்வரை எமக்கு எதிராக இப்படி ஏதாவது செய்து கொண்டிருப்பீர்கள் என்பதும் நாங்கள் எதிர்பார்த்ததுதான். அது இன்று நேற்று உள்ள கதையல்லவே நீங்கள் பிறந்ததே எங்களுக்கு வலிதானே.  மறைந்த மாமனிதன் எம்ஜீஆர் அவர்கள் எவ்வளவு தீர்க்க தரிசனமாக உங்களை தீய சக்தி என்று வர்ணித்து மிகச்சரியாக பட்டஞ்சூட்டியிருந்தார்,

பண்டாரவன்னியனுக்கு காக்கை வன்னியன்போல, கட்டபொம்மனுக்கு எட்டப்பன்போல, எங்களுக்கு நீங்கள் வந்து பிறந்திருக்கிறீர்கள்.   எட்டப்பன், காக்கை வன்னியன் என்ற பெயரை தமிழர்கள் எவரும் குழந்தைகளுக்கு சூட்டுவதில்லை அதுபோல உங்கள் பெயரையும் இப்போ ஈழத்தமிழர்கள் எவரும் குழந்தைகளுக்கு சூட்டுவதில்லை. வருங்காலத்தில் எட்டப்பன், காக்கை வன்னியன், என்ற பெயர்கள் வரிசையில் கருணாநிதி என்ற பெயர்கள் தமிழ்த்துரோகிகளின் பெயர்களாக நிலைத்து நிற்கும் என்பதை உங்கள் உள் உணர்வாகுதல் ஏற்றுக்கொண்டிருக்கும். என்று நம்புகிறோம். உங்கள் பெயரை சொன்னாலே எமது மக்கள் காறித்துப்புகிறார்கள். சிலபேர் உங்களின் செயற்பாட்டால் தமக்கு தாய் தந்தையரால் பிறந்தபோது சூட்டப்பட்ட கருணாநிதி என்ற பெயரை மாற்றிக்கொண்டு விட்டனர்  கருணாநிதி என்ற பெயரை உடைய சிலர் ஈழத்தில் தற்கொலை செய்து கொண்டதுமுண்டு. அவ்வளவுக்கு உங்கள் பெயர் ஈழதமிழர் மத்தியில் அருவருப்பையும் வெறுப்பையும் தோற்றுவித்திருக்கிறது. 

நீங்கள் சாகும்வரை உண்ணாவிரத நாடகம் நடத்தியபோது அது பச்சைப்பொய் என்பதை எல்லோரும் அறிந்தே இருந்தனர். ஆனால் எனது ஊரில் ஒரு சில சிறுவர்கள் நீங்கள் உண்ணாவிரதம் இருந்தபோது தியாகி திலீபனைபோல நீங்களும் உண்ணாவிரதமிருந்து செத்துப்போவீர்கள் என எண்ணி கவலைப்பட்டு வீணாகிப்போனதுமுண்டு. சில விபரமறியாத தாய்மார்கள் இந்த சந்தற்பத்திலாவது நாசமாப்போவான்  செத்துப்போகட்டும் என்று மகிழ்ந்ததையும் நான் கண்ணார கண்டிருக்கிறேன். ஏமாளியான நான் கூட நீங்கள் ஒரு 24 மணி நேரமாவது ஊண் ஒறுத்து உட்காருவீர்கள் என நம்பி ஏமாந்துபோனேன்.

இறுதியாக ஒன்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன் என்ன நடந்தாலும் ஏது நடந்தாலும் எங்கள் தலைவர் பிரபாகரன் அவர்கள் என்பதை உங்களுக்கு மட்டுமல்லை உலகத்திற்கும் நாங்கள் சொல்லிக்கொள்ளுகின்றோம் ஈழ மக்கள் வேறு விடுதலைப்புலிகள் வேறல்ல, லண்டனில் கோபி சிவந்தன் உண்ணாவிரதம் இருந்தாலும் அதன் முன்புறமும் பின்புறமும் விடுதலைப்புலிகள்தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள். நடைப்பயணம் தொடர்ந்தாலும், பேரணி நடந்தாலும், விமான நிலைய போராட்டம் நடத்தினாலும், எங்கள் கையில் புலிக்கொடியே தவழும் அது எங்கள் இலட்சியம், எங்கள் தேசியக்கொடி என்றால் அது புலிக்கொடிதான் அதை எமது சர்வதேச போராட்டங்களில் நீங்கள் கண்கூடாக கவனித்திருக்க முடியும் இந்தியா தடை செய்திருக்கிறது என்பதற்காக நாங்கள் வேறு கொடி பிடிக்கவோ வேறு பெயரைச்சொல்லவோ நாம் தயாராகவில்லை. தமிழகத்தில் சீமான், அண்ணன் வைகோ, நெடுமாறன் ஐயா அவர்களுமே தயாராக இல்லை என்பதை நீங்கள் அறிந்தே இருப்பீர்கள் சகோதர யுத்தம் என்று குளப்பிவிடும் தீய் சக்தியே நீங்கள்தான். தயவு செய்து எங்களை விட்டு தூர விலகிவிடுங்கள் புண்ணியமாப்போகும்.

அடுத்த அதிர்ச்சி செய்தியாக உங்கள் புதிய டெசோவை ஆர்ஜண்டீனாவில் கூட்டுவதற்கு நீங்கள் முயற்சிப்பதாக அறிந்தேன் உள்ளூரில் விலைபோகத சரக்கை வெளியூரில் விற்கலாம் என்பது அறிவீனம், ராஜபக்க்ஷவுக்கு லண்டன் விமானநிலையத்தில் அடித்த ஆப்பு உங்களுக்கு நினைவிருக்கலாம். இருந்தும் ரஜபக்க்ஷ ஓடி தப்பிக்கக்கூடிய ஆரோக்கியம் உள்ளவர் உங்கள் நிலையையும் ஐயோ கொல்றாங்களே என்று ஒரு இரவு நீங்கள் அலறிய காட்சிமட்டும் எனது ஞாபகத்திற்கு வருகிறது நீங்கள் வேண்டுமானால் டில்லிக்கும் சென்னைக்கும் விமானப்பயணம் செய்யுங்கள் ஐரோப்பா அமெரிக்க நாடுகளுக்கு பயணம் செய்ய யோசிப்பீர்களானால் அது உங்களுக்கு மிகுந்த சவாலாகவே அமையும்  சிலவேளை போர்க்குற்றவாளி 3, என்று சர்வதேச பொலிசாரால் கைது செய்யப்படவும் கூடும்.

ஈழதேசம் இணையத்திற்காக ஊர்க்குருவி.

Saturday, August 11, 2012

"காலத்தின் குற்றமல்ல கருவின் குற்றம்".

"காலத்தின் குற்றமல்ல கருவின் குற்றம்".
final3

என் வாழ்வில்
என்னை விட்டு விலகாத
இரண்டு நினைவுகளில்,
இந்த வரிகளும் ஒன்று..

ஏன் எதற்கென்று ஞாபகமில்லை.

ஒருபொழுது,
கருணாநிதி என்ற சுயநலவாதி
ஏகாந்தம் கலைத்து
மனக்குரங்கு கிளர்நது
ஊர்வலம் போக புறப்பட்டோது,
வஞ்சகம் கொப்பளிக்க கக்கிய
கயமையான கவிதையின் ஒருவரி.

இன்று கருணாநிதி என்ற கருங்கல்,
தன்னிச்சையாக,
எனது வாழ்வையும் எனது மண்ணையும்
மானத்தையும் விற்பனை பொருளாக்கி,
கடை விரித்து
தினம் ஒரு விளம்பரத்துடன்
"டெசோ" என்று ஏலம் கூறி கூவி விற்கும்போது,
அந்த கயமையான கவிதையின் வரிதான்
என் ஞாபகத்திற்கு வந்துபோகிறது.

உள்ளூர பெருத்த கயமை குடியிருக்க,
மேல் பூச்சுடன்
நல்லவன்போல் நடித்து
நடை வண்டியில் நகர்ந்தபோதும்,
பனைமரத்தில் ஒட்டிய அறிவிப்பு தாழாக
கருணாநிதியின் வஞ்சகம் மட்டும்
பல்லிளித்து,
என் மனக்கண்ணுள் நிர்வாணமாக சிரிக்கிறது.

எனது வாழ்வையும் எனது இனத்தையும்,
கொன்று புதைத்துவிட்டு.
குற்ற உணர்வு எதுவுமில்லாமல்
செம்மொழி மாநாடு என்று,
குடும்பதை கூட்டி இழவுக்கு விழாவெடுத்து
ஈழத்தமிழரின் முதலாம் ஆண்டு திவஷம்,
கோவையில் நடத்தி மகிழ்ந்ததை மறப்பேனா?
டெசோ, என்ற பதாதை கட்டி
மூன்றாம் ஆண்டு அஞ்சலி சென்னையில்(?)
இதை மறப்பேனா?

யாரிடம் முறையிடுவது?


செத்த இலட்சம் தமிழனுக்கு
ஒரு நிமிட அஞ்சலி செய்ய வக்கற்று
கயமையுடன்,
சோனியாவின் சுருக்குத்தடத்தில் வீழ்ந்து கிடந்த
சூழ்ச்சிக்காரன்,
ஈழத்தமிழனுக்கு வாழ்வுரிமை
விழாவெடுக்கிறாராம்?
தமிழினமே கேட்க மாட்டீர்களா??

இன்று நெருங்கி வரும்
நித்திய இருளிலிருந்து தப்பிக்க
எத்தனை நாடகங்கள்.
இது 'காலத்தின் குற்றமல்ல'
"கருவின் குற்றம்''!

"காலத்தின் குற்றமல்ல கருவின் குற்றம்".
அந்த வரி ஊற்றெடுத்த மூல இடம் அறிந்தபோது
அந்த கவிதை முழுவதையும்
ஞாபகத்தில் வைத்திருக்காதது
என் குற்றம் என்று எனக்கு படுகிறது.

மீதி ஞாபகமில்லாவிட்டாலும்
அந்த ஒருவரி
நெற்றிப்பொட்டில் ஆணி அடித்தாற்போல் நுழைந்து.
நெஞ்சுக்கூட்டில் நெருடி நிற்கிறது.
rev

அன்று எனக்கு அர்த்தம் புரியவில்லை
இன்று அர்த்தம் புரிந்தபோது
வெப்பத்துடன் ஜீரணிக்க முடியவில்லை.

இள வயதில் ஏன் எதற்கென்று,
எதுவுமே புரியாமல்
கவிதையின் நோக்கம், தாக்கம் உணராமல்
கருணாநிதியின் மீதிருந்த
அதீத ஈர்ப்பு காரணமாக
அந்தவரிகள் பசுமரத்து ஆணியாக
என் நெஞ்சில் நீட்டி படுத்துவிட்டன.

இன்று வெறுப்புடன்
வெளியேற மறுக்கின்றன.

கருணாநிதியை  விட்டு  நானும்
எனது ஒட்டுமொத்த சந்ததிகளும் (செத்தவை போக)
நெடுந்தூரம் விலகி போய்விட்டாலும்,
கயமை நிரம்பிய கருணாநிதி
என் இனத்தின் அக்குளுக்குள் துப்புவதை
என் இனத்தாலும் என்னாலும் சகிக்க முடியவில்லை.

இரண்டாயிரத்து ஒன்பது,
அதிகார மிடுக்குடன்
அனைத்து படுகொலைக்கும் துணை நின்ற பாவி,
அதிகாரம் பறிக்கப்பட்டபோதும்
என்னையும் என் இனத்தையும்
விற்று விபச்சாரிபோல் வாழ்வது எதன் குற்றம்.
கருவின் குற்றமல்லாமல் வேறென்னவாக இருக்கமுடியும்?

நிரந்தரமாக ஒதுக்கப்பட்டு விடுவோம்
என்று பயந்தபோது,
நேற்றைய தினம்
ஈழம் காணாமல் உயிர் போகாது என்றாய்,
ஈழத்துக்காக சாகும்வரை போராடுவேன் என்றாய்,
மறுநாள்
தமிழ் ஈழம் இல்லையென்றாய்,
தீர்மானம் இல்லையென்றாய்,
வாழ்வுரிமை மாநாடு என்றாய்,
மருந்து போடும் மனித நலன் என்றாய்,
டெசோ, என்றாய்,
இன்று பொதுக்கூட்டம் என்கிறாய்.
நாளை என்ன சொல்வாய்?

அன்று
அரை நாள் உண்ணவிரதம் இருந்தாய்,
மனித செயின் என்றாய்,
ஒட்டு மொத்த ராஜினாமா என்றாய்,
மறுநாள்
ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு
உதவ முடியாது என்றாய்,
ராஜபக்க்ஷவை கோபப்படுத்தாதீர்கள் என்றாய்,
இன்னொரு நாட்டு பிரச்சினை என்றாய்,
சகோதர யுத்தம் என்று காறி உமிழ்ந்தாய்,
உனக்காவது ஏதாவது புரிகிறதா?
இது கருவின் குற்றமல்லாமல் எதுவின் குற்றம்?

"காலத்தின் குற்றமல்ல கருவின் குற்றம்".
உனக்கு பொருத்தமான வாக்கியம்தான்.
அருமையான இலக்கிய மணம்.
மிகவும் பொருத்தமான உயிர்ப்பான உவமை!
என் வாழ்க்கையில் மறக்க முடியாத சொல்லாடல்.

உன்னை திருவாரூரில் பிறந்த தெலுங்கன்
என்று பலர் சொல்ல கேட்டதுண்டு.
பச்சையப்பன் கல்லூரியில் இலக்கியம் படித்த என் அக்கா
அவனை மராட்டியன் என்று சொன்ன ஞாபகம்.
சிலர் குஜராத்தி என்று கூறியதுமுண்டு.
ஆனாலும் சிக்கல் இன்னும் சிலரிடம் தொடர்கிறது.

கருணா தமிழன் இல்லை என்பதுமட்டும்
கருணாவுக்கும், தமிழுக்கும் தெரியும்.
எனக்கும் தெரியும்,

உன்னையே நீ கேட்டுக்கொள்
ஏனிந்த ஒளிவு மறைவு
இதுதான் காலத்தின் குற்றமோ
அன்றி கருவின் குற்றமோ?

ஆனாலும்
உனது இரத்தம் தமிழனுக்கு எதிரானது.
என என் அந்தர அத்மா என்றைக்கும்
அறைகூவல் வைத்துக்கொண்டேயிருக்கிறது.
தமிழகமும் இறுதிக்காலத்தில்
அதை நன்கு உணர்ந்து கொண்டது.
அதனால் பிரியாவிடையும் அளித்தது
விரட்டியபோதும்
நீ அடங்க மறுப்பது எந்தக்குற்றம்?

நீண்ட கால ஓட்டத்தின் பின்
கருணாநிதியின் பயணத்தின் பாதையை
நான் சரியாக அறிந்து கொண்டபோது.
கருணாவின் அசுரத்தனமான சுயநலம்
என் நாட்டையும்-இனத்தையும்,
என் குழந்தைகளையும்,
என் இருப்பிடத்தையும் இல்லாது அழித்திருந்தது.
அது இறந்த காலம்!

அனைத்தையும் இழந்து
நான் எலும்புக்கூடாக ஓட்டமெடுத்தபோது,
இறந்துபோன எனது உறவுகள் பற்றி
மனம் அசைபோடவில்லை,
ஆனால் கருணாநிதியை மட்டும்
என்னால் மறக்க முடியவில்லை!.
இது நிகழ் காலம்!

ஒவ்வொரு அரசியல் இக்கட்டையும்
தனது குடும்பத்தையும்
இட்டுக்கட்டுவதற்காக,
கருணாநிதி எடுத்த பக்கச்சாவிகள் அனைத்துமே (பக்கச்சாவி என்பது அச்சாணி)
ஈழத்தமிழனின் உயிர்களாக மாறியிருக்கிறது.

இன்று
வாரிசுகளும், மனைவிமார்களும்,
தோற்றுவித்த வில்லங்கம் போக்க,
கருணாநிதி கையில் எடுத்திருப்பதும்
எனது ஈழத்து வாழ்வையும், எதிர்காலத்தையும்
என்னும்போது,
எப்படி என்னால் பொறுத்துக்கொள்ள முடியும்.

யார் நீ
எனது மண்ணுக்கும்
எனது வாழ்வுக்கும் மாநாடு கூட்ட
உனக்கு யார் அதிகாரத்தை தந்தது?
2

பச்சோந்தியான கருணாநிதியின் குணத்தை
ஏற்கெனவே நான் அறிந்திருந்தாலும்,
மறைந்த தமிழ்ச்செல்வனின், மரணத்தின்போது
வஞ்சகத்துடன் ஆதார சுருதி கூட்டி
இரங்கல் எழுதிய போதுதான்
நான் அறிந்து கொண்டேன்.

கருணா கவிதை எழுதினாலும்,
திரைப்படத்துக்கு வசனம் எழுதினாலும்,
காலாற (உண்ணாவிரதமல்ல)
கடற்கரைக்கு காற்று வாங்க
தள்ளு வண்டியில் போனாலும்
காரணம் இல்லாமல் இருக்காது
என்ற விஞ்ஞான உண்மை.

நான்
என் அறிவுக்கு எட்டிய மட்டில்
சிந்தித்துப் பார்க்கிறேன்.
கவியரசு கண்ணதாசனை விட,
தண்டோரா வைரமுத்துவை விட,
முக்காலா கவிஞன் வாலியை விட
பாரதி, கம்பனையும் விட,,
பொய்க்கவிதை புனைய வஞ்சகம் வரைய,
கருணாநிதியளவுக்கு எவராலும் முடிந்திருக்கவில்லை

சுயநல சுரப்பி
உயர் அழுத்தம் கொள்ளும்போது,
நூதனமான வழிகளில்
விஞ்ஞானத்தாலும் கண்டுபிடிக்க முடியாத
வித்தையை,
வித விதமாக
வினோதமான விளக்கவுரைகளாக,
விதைத்து அறுவடைசெய்ய
கருணாநிதியைப்போல் இன்னும் எவரும் பிறக்கவில்லை!

கோயபல்ஸை'யும் வென்ற
கெட்டிக்காரன் கருணாநிதி.

"டெசோ" என்ற இத்துப்போன விஷவித்தை விதைத்து,
செத்துப்போன ஈழத்துக்கு மாநாடு கட்டி
ஈழத்தமிழர் பெயரால்
தப்பிப்பிறந்த மகளுக்கும்,
தறுதலை மகன்களுக்கும்,
வாழ்வுரிமை மாநாடும்,
திமுக, வின் மீழெழுச்சிக்கான ஆய்வரங்கமும், நடத்த
வெட்கமில்லையா கருணாநிதி?

கோடரிக்காம்பு என்பது
உனக்கு எவ்வளவு பொருந்தியிருக்கிறது,
தீட்டிய மரத்தில் கருத்து கூர் பார்த்து
எத்தனை குழந்தைகள் சாக துணை நின்றாய்,
வைத்தியத்துக்கு வந்த என் அன்னை
பார்வதியை திருப்பி அனுப்பினாய்.
இதைவிட ராஜபக்க்ஷ என்ன பெரிதாக செய்துவிட்டான்.
அவை காலத்தின் குற்றமா, கருவின் குற்றமா.

2011 உனது படுதோல்வியின் பின்னாவது
நீ திருந்தியிருப்பாய் என்று
உன் வயதை மதிப்பிட்டு ஏமாந்து போனேன்.
மோனப் பெருவெளியில்
சொற்பமாவது ஞானம் பிறந்திருக்கும் என்று
வீணாகிப்போனேன்,

வாய்க்கரிசியாக வஞ்சகம் செய்தவனை,
ஏமாற்றி சொகுசாக வாழ்பவனை,
மனச்சாட்சியின் எதிர்நிலையை,
எந்த கவிதை வரிகளில்
விதந்துரைக்க முடியும்.

நாளை குஞ்சாமணியும், சூனா வீயன்னா பாண்டியும்
உன்னுடன் இருப்பார்கள் என்பதற்கு
யார் உத்தரவாதம்?
உன்னைத்தவிர உதவிக்கு உனக்கு
எவருமில்லை.
இதுதான் காலத்தின் கோலம்.

-ஊர்க்குருவி-
  நன்றி சவுக்கு, இணையம்.

Thursday, August 2, 2012

இலங்கை தமிழர்களின் துன்பங்களுக்கு மருந்து போட யார் இந்த கருணாநிதி?

"இலங்கைத் தமிழர்களின் காயங்களுக்கும், அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும், மருந்து போடுகின்ற மாநாடுதான் ஒக 12ம் திகதி சென்னையில் கூட்டவிருக்கும் டெசோ மாநாடு' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பத்திரிகைகளை அழைத்து விளம்பரம் செய்திருக்கிறார்..

 (Tamil Eelam Supporters Organaisataion – TESO)  "தமிழ் ஈழத்துக்கான ஆதரவு   அமைப்பு", என்பதன் உள்ளார்ந்த   தமிழாக்கம்,   தனித் தமிழிழத்துக்கு   நேரடியான ஆதரவு தரும் அமைப்பு, என்பதே ரெசோ என்பதன் குறியீடு, அதையும் கருணாநிதிதான 1985 கூறியிருந்தார். ஆனால்    இன்றய சந்தற்பம்     பொறுத்து டெசோவுக்கு  புதி விளக்கம் தந்து.    இலங்கைத் தமிழர்   வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு,  என்று சந்தற்பவாத  கற்பிதம்             காட்டியிருக்கிறார்      குழிபறிப்பில் கில்லாடியான  கருணாநிதி, குறைந்த பட்ஷம்            "ஈழத்தமிழர்கள்" வாழ்வில் ஏற்பட்ட   துன்ப துயரம் என்றுகூட துரோகத்தின்   உச்ச உருவமான கருணா நிதியால்  உச்சரிக்க முடியவில்லை!

ஈழத்தமிழர்களுக்கு வாழ்வுரிமை,   மற்றும் பாதுகாப்பு கொடுப்பதற்கு யார் இந்த கருணாநிதி?. இந்த கருணாநிதி அரசியலில் நடந்து வந்த                    காலங்களை தவிர்த்து, தவழ்ந்து சப்பாணியாக    தள்ளுவண்டியில் வலம்வரும் காலங்களில் நடந்த துன்பியல் நிகழ்வுகளில்     சில                  துளிகளை திரும்பிப் பார்ப்போம்.

ஆட்சியிலிருந்து தூக்கி               வீசப்பட்டு தமிழக     மக்களால் ஓரங்கட்டப்பட்டு தோல்வியின்      உச்சத்திலிருக்கும்     கருணாநிதி  சில நாட்களுக்கு முன்வரை  தப்பித்தலுக்காக தமிழ்      ஈழத்துக்காக     உயிரையும் விடுவேன், (எத்தனையோ தரம் விட்ட உயிர்தான்)      ஈழம்  காணாமல் தனது கட்டை வேகாது என்று குத்தி முறிந்து கூவிய கூற்றுக்கள்         சோனியா,           சிதம்பரத்தின் மிரட்டலின்பின் இன்றளவில்        கரைந்து, மருவி  இலங்கை தமிழர்கள் என்று ஆகியிருக்கிறது, "ஈழம்" என்ற சொல்லைக்கூட     பாவிக்க துரோகத்தின் உருவமான கருணாநிதி விரும்பவில்லை!

"""ஈழத்தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்ட அழிவு- துன்ப துயரங்களுக்கு முழு முதற்காரணி, சூத்திரதாரி நவீன நரகாசுரன்/ தந்தரசாலி கருணாநிதி என்பதை தமிழகத்து தமிழர்கள், ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல பிறநாட்டு, பிறமொழி மக்களும் நன்கு அறிவர்!""" 

2009 ல் முள்ளிவாய்க்கால் பரப்பில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது குண்டடிபட்டு செத்ததுபோக மருந்து இல்லாமல் இரத்தப்பெருக்கால் செத்தவர்களின் எண்ணிக்கை இறுதிக்கட்ட 2009 ஏப், மே மாதங்களில் மட்டும் 32 ஆயிரத்துக்கு அதிகமானவை அந்த நேரம் தமிழகத்து உணர்வுள்ள தமிழர்கள் பலர் தமது உயிரை துச்சமாக நினைத்து உயிர்காக்கும் அத்தியாவசிய  மருந்துகளும், இரத்த உறைகளையும் குழந்தைகளுக்கான பால்மா போன்ற பொருட்களை அனுப்பி ஈழத்தமிழர்களுக்கு உதவ இரகசியமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் அவர்கள் அனைவரையும் தனது விஷேட பொலிஸ் படையை ஏவி, ஈவு இரக்கமின்றி மருந்துகளை பறிமுதல் செய்து இரத்த உறைகளை அழித்து, பால்மாக்களை கடலில் வீசி ஈழத்தமிழர்களுக்கு உதவியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தி சிறையில் அடைத்த கொடுமையை காங்கிரசுடன் கூட்டுச்சேர்ந்து செய்தது  திமுக அரசுத்தலைவரான கருணாநிதி என்ற கடைந்தெடுத்த கடைசித்தனமான ஈன மனிதன்.

இன்றும் மதிமுக, மற்றும் பெரியார் திராவிடர் கழக உறுப்பினர்களும், விடுதலை சிறுத்தைகளின் உறுப்பினர்களும், மற்றும் கட்சி சார்பில்லாதவர்கள் பலரும் சிறைக்குள் இருந்து வாடிக்கொண்டிருக்கின்றனர். அன்று உயிர்காக்கும் மருந்து, பால்மா, இரத்த உறை ஆகியவற்றை ஈழத்தமிழனுக்கு கிடைக்காமல் செய்து இவ்வளவு அனீதி இழைத்த அதே கருணாநிதி இன்றைக்கு இலங்கைத் தமிழர்களின் காயங்களுக்கும், அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும், மருந்து போட மாநாடு நடத்துகிறாராம்!?

கொன்றதும் நீயே, குதறியதும் நீயே, தமிழனின் குடிகெடுக்க விபச்சாரியாக மாறி வஞ்சகம் அனைத்தையும் விதைத்ததும் நீயே!

அன்றைக்கு செத்து அழிந்துபோன ஒவ்வொரு ஈழத்தமிழனின் எலும்புத்துகழ்களிலும் ஊனமுற்று கிடக்கும் காயப்பட்ட ஒவ்வொரு தமிழனின் காயத்தழும்புகளிலும் கருணாநிதியின் கயமையே புரையோடிக்கிடக்கிறது. இன்றைக்கு வெட்கம் மானம் துறந்து தற்காலிக தப்பித்தலுக்காக இலங்கை தமிழர்களின் காயத்துக்கு மருந்து போடுகிறேன் என்று மாநாடு நடத்த கருணாநிதிக்கு என்ன யோக்யதை இருக்கிறது? ஒரு முதுகெலும்பு இல்லாத ஈழத்தமிழனாவது இதை ஏற்றுக்கொள்ளுவானா?

உச்சக்கட்ட ஈழப்போரின்போது கருணாநிதி அவசர அவசரமாக டில்லி சென்றபோது யுத்தத்தை நிறுத்த பேசப்போகிறார் என்று தமிழகம் மகிழ்ந்து துடித்துக்கொண்டிருந்தது ஆனால் கருணாநிதி என்ற வஞ்சக மனிதன் தள்ளுவண்டியில் இருந்து இறங்கி சோனியாவின் காலில் விழுந்து சோனியாவிடம் கேட்ட யாசகம் குடும்ப அங்கத்தவர்களுக்கு பசையுள்ள மந்திரிப்பதவி!

அதற்கிடையில் ஈழத்தின் போர் வலயத்தில் உணவு மட்டுமல்லாது குடிநீர், மருந்து, காயங்களின்போது இரத்தப்பெருக்கு இல்லாமல் தடுக்க கட்டுவதற்கு பழந்துணிகூட இல்லாமல் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர் அந்த நேரம் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் உணவுப்பொருட்களையும் உயிர்காக்கும் மருந்துகளையும் சேகரித்து வணங்காமண் என்ற கப்பலில் ஏற்றி ஈழத்தமிழர்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர் அந்த கப்பலை ஓட்டி வந்தவர்கள்கூட  தமிழர் அல்லாத வேறு இனத்தவர்கள். அவ்வளவு பிரயத்தனப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட அக்கப்பலை உள் நுழைய ஸ்ரீலங்கா அரசு அனுமதிக்கவில்லை. போரும் முடிவு நிலைக்கு வந்திருந்தது. அப்போ அந்த கப்பலை ஓட்டிவந்த மாலுமிகள் கப்பலை டில்லிக்கோ, ஆந்திராவுக்கோ, கேரளாவுக்கோ,   திருப்பி கொண்டு செல்லவில்லை தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டின் முதலமைச்சரான கட்டுமரம் கருணாநிதியை நம்பி தமிழ்நாடு கடற்பரப்புக்கு திருப்பி அந்த பொருட்களை ஈழத்தமிழர்களுக்கு அனுப்பிவைக்க உதவுமாறு கருணைக்கோரிக்கை வைக்கப்பட்டது (அப்போது போரும் முடிவுபெற்றிருந்தது) தடுப்பு முகாம்களில் தத்தளித்த மக்களுக்கு அந்த பொருட்களை சேர்த்திருந்தால் பலபேர் பயன்பெற்றிருக்க முடியும். ஆனால் கருணாநிதி என்ற கல் கடுகளவும் இழகவில்லை அந்தப்பொருட்கள் காலம் கடந்து வீணாகிப்போனது! அதை ஈழத்து தமிழ் அரசியல்வாதிகளும் மறந்திருக்கக்கூடும்?

அடுத்ததாக ஈழ செத்தவீடு முடிந்தும் முடியாமலும் மக்கள் புலம்பிக்கொண்டிருக்கும் சமயத்தில் எந்த குற்ற உணர்வுமில்லாமல் தமிழனின் வரிப்பணத்தை தண்ணீராக செலவழித்து 400 கோடி ரூபா செலவில் 2010ல் யூனில் செம்மொழி மாநாடு என்ற பெயரில் குடும்ப விழா மாநாடு நடத்தினார் அந்த விழா ஈழத்தமிழனிம் 1ம் ஆண்டு திவஷம் கணக்காக ஒரு வேடிக்கை வினோத நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. கட்டுமரம் கருணா,, அந்த வேடிக்கை வினோத நிகழ்ச்சியில்  செத்து அழிந்துபோன ஈழத்து தமிழருக்கு ஒரு நிமிட அஞ்சலிகூட செய்யவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியின்போது கருணாவின் கூட்டாளியான திருமாவளவன் ஈழத்தமிழர்களுக்காக ஒப்புக்கேனும் குரல் கொடுத்து அந்த மக்களை கம்பி சிறைக்குள்ளிருந்து மீட்பதற்கு உதவும்படி யாசகம் கேட்டு உருக்கமான வேண்டுகோள் வைத்தார் ஆனால் கருணாநிதி எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் கருங்கல்லாக அமர்ந்திருந்தார். அவரது கண்கள் கறுப்பு கண்ணாடிக்குள் இருந்ததால்  அவரது வஞ்சகமான உணர்வின் பிரதிபலிப்புக்கூட எவராலும் இன்றுவரை அறிய முடியவில்லை,

2008 ம் ஆண்டு தொடக்கத்தில் போர் உச்சத்தை அடைந்துகொண்டிருந்த நேரம் போரை நிறுத்துவதற்கு  தமிழர் தேசியக்கூட்டமைப்பு இராசதந்திர முறைமையில் தேசியத்தலைவரின் ஒப்புதலுடன் இந்திய அரசுடன் கலந்து ஆலோசித்து போர் நிறுத்தம் ஏற்ப்படுத்த விரும்பி இந்தியா சென்றனர். கருணா தமிழக முதலமைச்சராக இருப்பதால் கருணாவை உதாசீனப்படுத்திவிட்டு டில்லி சென்று இந்திய மத்திய அரசை சந்திக்க முயற்சிப்பது முறையல்ல என்ற எண்ணத்துடன் தமிழகத்தில் தங்கி முதலமைச்சரான கருணாவை சந்திக்க குறைந்தது இரண்டு மாதங்கள் முயற்சித்திருக்கின்றனர், ஆனால் கருணாவை சந்திக்க கூட்டமைப்பினருக்கு அனுமதி கிடைக்கவில்லை. கூட்டமைப்பினர் ஏமாற்றத்துடன் நாடு திரும்பியதும் கருணாநிதி கூறிய வார்த்தை ராஜபக்க்ஷவை கோபப்படுத்தாமல் அணுசரித்து போவதை விட்டுவிட்டு இங்கு ஏன் வருகிறார்கள் என்று நக்கலடித்திருந்தார்.

"நல் மாட்டுக்கு ஒரு சூடு நற் பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை"  இந்த சூட்டின் பின் தமிழர் கூட்டமைப்பு கருணாநிதியின் கயமையை நன்கு உணர்ந்திருக்கும் என நம்பலாம் எனவே ஈழத்தமிழினத்தின்மேல் அக்கறையும் இரத்தத்தில் மானமும் இருந்தால் கூட்டமைப்பு கருணாவின் வேடிக்கை வினோத ஏமாற்று மாநாட்டை நிச்சியம் நிராகரிக்கும் என்றே நம்பலாம்.

இன்று காலம் கடந்து சிங்கள இனப்படுகொலையாளி ராஜபக்க்ஷ சொல்லும் ஆதே ஒப்புவித்தலை ஒரு எழுத்து பிசகாமல் பின்பற்றி கருணாநிதியும் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு வாழ்வுரிமை? பேசுவதற்கு மாநாடு கூட்டுகிறார். இதை ஈர நெஞ்சமுள்ள, உணர்வுள்ள, நேர்மையுள்ள ரோசமுள்ள தமிழர்கள எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். மனிதனாக பிறந்த எவரும் சுயநலன் இல்லாமல் இல்லை ஆனால் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மிருகத்தனமான அயோக்கிய சுயநலவாதி கருணாநிதி என்பது ஈழத்தமிழர்களின் 2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேர் அழிவிலிருந்து காலம் இனங்காட்டியிருக்கிறது.

இனப்படுகொலை அனைத்தும் முடிந்தும் கருணாநிதி திருப்திப்படவில்லை ஏப் 16 2010 அன்று வயோதிபத்துடன்  பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு கிடந்த "தேசத்தின் அன்னை" பார்வதி அம்மா, அவர்கள் பராமரிப்பதற்க்குக்கூட உறவினர்கள் அருகில் இல்லாமல் இலங்கையில் அவதிப்பட்டு மாற்று சிகிச்சைக்காக மலேசியா சென்று தங்கியிருந்தார். சில அனுசரணைகளை கருதி தமிழகத்தில் சிகிச்சை பெறுவதற்காகவும் பெற்ற பிள்ளையின் ஆதரவை பெறுவதற்காகவும் மலேசியாவிலிருந்து தமிழகம் வந்த  தேசியத்தலைவரின் தாயாரை விமான நிலையத்தில் வைத்து கருணாநிதியின் அரசு திருப்பி அனுப்பியது. பல மணி நேரங்கள் நெடுமாறன் ஐயா அவர்களும், வைகோ அவர்களும் போராடி வாதாடியும் எந்த அசைவையும் மனிதாபிமானத்தையும் கருணாநிதியின் ஆட்சியில் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஈழத்தமிழர்கள் வரலாற்றின் இந்த நிகழ்வை கோபமாகவும், கரும்புள்ளியாகவும் பதிவு செய்தது தவிர வேறு எதையும் ஈட்ட முடியவில்லை.

கருணாநிதியின் கள்ளக்காதல் கருவில் பிறந்த மகள் கனிமொழி,. அந்த ஒருவரின் வாழ்வுக்காக ஈழத்தில் எண்ணிலடங்காத தாய்மார்கள் வயிற்றில் கருவுடன் கொன்றொழிக்கப்பட்டனர். கருணாநிதியின் ஒரு குடும்பம் விருட்ஷமாக வாழவேண்டும் என்பதற்காக ஈழத்தில் பல இலட்சம் குடும்பங்கள் எரிகுண்டில் எரிந்து சாம்பலாகினர். மழைவிட்டுவிட்டது தூவானம் மாறவில்லை என்று எந்த உறுத்தலுமில்லாமல் கருணா என்ற கொடிய மனிதன் பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்த செய்தி மட்டும் வரலாற்றில் நிற்கிறது.

நித்தம் ஒரு ஏமாற்று, நிமிடம் ஒரு விடுகதை, பொய்யின்மேல் பொய், வேடிக்கை வினோதம் என்று ஏமாற்று வித்தைகளைஏற்றுக்கொள்ளலாமா.? டெசோ'வால்/ கருணாநிதியால்' ஏதாவது நல்லது நடக்குமென்றால் அவரது அரசியல் வாழ்க்கையில்  ஒருநம்பிக்கையூட்டக்கூடிய சிறு வரலாற்று தரவு யாராவது எடுத்து வையுங்கள். ஏற்றுக்கொள்ளமுடியும்!,, இல்லையென்றால் இந்த துரோகத்தை ஒட்டு மொத்தமாக நிராகரியுங்கள்.  திமுக என்ற ஒரு கட்சியை வைத்து மிக மோசமாக கேவலமான அரசியல் செய்து அதின் நிழலில் குளிர்காயும் கருணாநித்தியை தண்டிக்காமல் விடலாகுமா? இலங்கைத் தமிழர்களின் காயங்களுக்கும், அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும், மருந்து போடுகின்ற மாநாடா?  அல்லது கருணாநிதி குடும்பத்துக்கும் அவரது வீழ்ச்சிக்கும் மருந்துபோடும் மாநாடா? இணையத்தளங்களே! ஊடகங்களே! பத்திரிகைகளே உங்களை நம்பித்தான் உலகம் இருக்கிறது ஒரு பெருத்த சமூக வரலாற்று பிழையை பர்த்து மௌனம் காக்கலாமா? தயவு செய்து உண்மையை பறைசாற்றுங்கள்.

ஈழதேசம் இணையத்திற்காக ஊர்க்குருவி.