Saturday, August 11, 2012

"காலத்தின் குற்றமல்ல கருவின் குற்றம்".

"காலத்தின் குற்றமல்ல கருவின் குற்றம்".
final3

என் வாழ்வில்
என்னை விட்டு விலகாத
இரண்டு நினைவுகளில்,
இந்த வரிகளும் ஒன்று..

ஏன் எதற்கென்று ஞாபகமில்லை.

ஒருபொழுது,
கருணாநிதி என்ற சுயநலவாதி
ஏகாந்தம் கலைத்து
மனக்குரங்கு கிளர்நது
ஊர்வலம் போக புறப்பட்டோது,
வஞ்சகம் கொப்பளிக்க கக்கிய
கயமையான கவிதையின் ஒருவரி.

இன்று கருணாநிதி என்ற கருங்கல்,
தன்னிச்சையாக,
எனது வாழ்வையும் எனது மண்ணையும்
மானத்தையும் விற்பனை பொருளாக்கி,
கடை விரித்து
தினம் ஒரு விளம்பரத்துடன்
"டெசோ" என்று ஏலம் கூறி கூவி விற்கும்போது,
அந்த கயமையான கவிதையின் வரிதான்
என் ஞாபகத்திற்கு வந்துபோகிறது.

உள்ளூர பெருத்த கயமை குடியிருக்க,
மேல் பூச்சுடன்
நல்லவன்போல் நடித்து
நடை வண்டியில் நகர்ந்தபோதும்,
பனைமரத்தில் ஒட்டிய அறிவிப்பு தாழாக
கருணாநிதியின் வஞ்சகம் மட்டும்
பல்லிளித்து,
என் மனக்கண்ணுள் நிர்வாணமாக சிரிக்கிறது.

எனது வாழ்வையும் எனது இனத்தையும்,
கொன்று புதைத்துவிட்டு.
குற்ற உணர்வு எதுவுமில்லாமல்
செம்மொழி மாநாடு என்று,
குடும்பதை கூட்டி இழவுக்கு விழாவெடுத்து
ஈழத்தமிழரின் முதலாம் ஆண்டு திவஷம்,
கோவையில் நடத்தி மகிழ்ந்ததை மறப்பேனா?
டெசோ, என்ற பதாதை கட்டி
மூன்றாம் ஆண்டு அஞ்சலி சென்னையில்(?)
இதை மறப்பேனா?

யாரிடம் முறையிடுவது?


செத்த இலட்சம் தமிழனுக்கு
ஒரு நிமிட அஞ்சலி செய்ய வக்கற்று
கயமையுடன்,
சோனியாவின் சுருக்குத்தடத்தில் வீழ்ந்து கிடந்த
சூழ்ச்சிக்காரன்,
ஈழத்தமிழனுக்கு வாழ்வுரிமை
விழாவெடுக்கிறாராம்?
தமிழினமே கேட்க மாட்டீர்களா??

இன்று நெருங்கி வரும்
நித்திய இருளிலிருந்து தப்பிக்க
எத்தனை நாடகங்கள்.
இது 'காலத்தின் குற்றமல்ல'
"கருவின் குற்றம்''!

"காலத்தின் குற்றமல்ல கருவின் குற்றம்".
அந்த வரி ஊற்றெடுத்த மூல இடம் அறிந்தபோது
அந்த கவிதை முழுவதையும்
ஞாபகத்தில் வைத்திருக்காதது
என் குற்றம் என்று எனக்கு படுகிறது.

மீதி ஞாபகமில்லாவிட்டாலும்
அந்த ஒருவரி
நெற்றிப்பொட்டில் ஆணி அடித்தாற்போல் நுழைந்து.
நெஞ்சுக்கூட்டில் நெருடி நிற்கிறது.
rev

அன்று எனக்கு அர்த்தம் புரியவில்லை
இன்று அர்த்தம் புரிந்தபோது
வெப்பத்துடன் ஜீரணிக்க முடியவில்லை.

இள வயதில் ஏன் எதற்கென்று,
எதுவுமே புரியாமல்
கவிதையின் நோக்கம், தாக்கம் உணராமல்
கருணாநிதியின் மீதிருந்த
அதீத ஈர்ப்பு காரணமாக
அந்தவரிகள் பசுமரத்து ஆணியாக
என் நெஞ்சில் நீட்டி படுத்துவிட்டன.

இன்று வெறுப்புடன்
வெளியேற மறுக்கின்றன.

கருணாநிதியை  விட்டு  நானும்
எனது ஒட்டுமொத்த சந்ததிகளும் (செத்தவை போக)
நெடுந்தூரம் விலகி போய்விட்டாலும்,
கயமை நிரம்பிய கருணாநிதி
என் இனத்தின் அக்குளுக்குள் துப்புவதை
என் இனத்தாலும் என்னாலும் சகிக்க முடியவில்லை.

இரண்டாயிரத்து ஒன்பது,
அதிகார மிடுக்குடன்
அனைத்து படுகொலைக்கும் துணை நின்ற பாவி,
அதிகாரம் பறிக்கப்பட்டபோதும்
என்னையும் என் இனத்தையும்
விற்று விபச்சாரிபோல் வாழ்வது எதன் குற்றம்.
கருவின் குற்றமல்லாமல் வேறென்னவாக இருக்கமுடியும்?

நிரந்தரமாக ஒதுக்கப்பட்டு விடுவோம்
என்று பயந்தபோது,
நேற்றைய தினம்
ஈழம் காணாமல் உயிர் போகாது என்றாய்,
ஈழத்துக்காக சாகும்வரை போராடுவேன் என்றாய்,
மறுநாள்
தமிழ் ஈழம் இல்லையென்றாய்,
தீர்மானம் இல்லையென்றாய்,
வாழ்வுரிமை மாநாடு என்றாய்,
மருந்து போடும் மனித நலன் என்றாய்,
டெசோ, என்றாய்,
இன்று பொதுக்கூட்டம் என்கிறாய்.
நாளை என்ன சொல்வாய்?

அன்று
அரை நாள் உண்ணவிரதம் இருந்தாய்,
மனித செயின் என்றாய்,
ஒட்டு மொத்த ராஜினாமா என்றாய்,
மறுநாள்
ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு
உதவ முடியாது என்றாய்,
ராஜபக்க்ஷவை கோபப்படுத்தாதீர்கள் என்றாய்,
இன்னொரு நாட்டு பிரச்சினை என்றாய்,
சகோதர யுத்தம் என்று காறி உமிழ்ந்தாய்,
உனக்காவது ஏதாவது புரிகிறதா?
இது கருவின் குற்றமல்லாமல் எதுவின் குற்றம்?

"காலத்தின் குற்றமல்ல கருவின் குற்றம்".
உனக்கு பொருத்தமான வாக்கியம்தான்.
அருமையான இலக்கிய மணம்.
மிகவும் பொருத்தமான உயிர்ப்பான உவமை!
என் வாழ்க்கையில் மறக்க முடியாத சொல்லாடல்.

உன்னை திருவாரூரில் பிறந்த தெலுங்கன்
என்று பலர் சொல்ல கேட்டதுண்டு.
பச்சையப்பன் கல்லூரியில் இலக்கியம் படித்த என் அக்கா
அவனை மராட்டியன் என்று சொன்ன ஞாபகம்.
சிலர் குஜராத்தி என்று கூறியதுமுண்டு.
ஆனாலும் சிக்கல் இன்னும் சிலரிடம் தொடர்கிறது.

கருணா தமிழன் இல்லை என்பதுமட்டும்
கருணாவுக்கும், தமிழுக்கும் தெரியும்.
எனக்கும் தெரியும்,

உன்னையே நீ கேட்டுக்கொள்
ஏனிந்த ஒளிவு மறைவு
இதுதான் காலத்தின் குற்றமோ
அன்றி கருவின் குற்றமோ?

ஆனாலும்
உனது இரத்தம் தமிழனுக்கு எதிரானது.
என என் அந்தர அத்மா என்றைக்கும்
அறைகூவல் வைத்துக்கொண்டேயிருக்கிறது.
தமிழகமும் இறுதிக்காலத்தில்
அதை நன்கு உணர்ந்து கொண்டது.
அதனால் பிரியாவிடையும் அளித்தது
விரட்டியபோதும்
நீ அடங்க மறுப்பது எந்தக்குற்றம்?

நீண்ட கால ஓட்டத்தின் பின்
கருணாநிதியின் பயணத்தின் பாதையை
நான் சரியாக அறிந்து கொண்டபோது.
கருணாவின் அசுரத்தனமான சுயநலம்
என் நாட்டையும்-இனத்தையும்,
என் குழந்தைகளையும்,
என் இருப்பிடத்தையும் இல்லாது அழித்திருந்தது.
அது இறந்த காலம்!

அனைத்தையும் இழந்து
நான் எலும்புக்கூடாக ஓட்டமெடுத்தபோது,
இறந்துபோன எனது உறவுகள் பற்றி
மனம் அசைபோடவில்லை,
ஆனால் கருணாநிதியை மட்டும்
என்னால் மறக்க முடியவில்லை!.
இது நிகழ் காலம்!

ஒவ்வொரு அரசியல் இக்கட்டையும்
தனது குடும்பத்தையும்
இட்டுக்கட்டுவதற்காக,
கருணாநிதி எடுத்த பக்கச்சாவிகள் அனைத்துமே (பக்கச்சாவி என்பது அச்சாணி)
ஈழத்தமிழனின் உயிர்களாக மாறியிருக்கிறது.

இன்று
வாரிசுகளும், மனைவிமார்களும்,
தோற்றுவித்த வில்லங்கம் போக்க,
கருணாநிதி கையில் எடுத்திருப்பதும்
எனது ஈழத்து வாழ்வையும், எதிர்காலத்தையும்
என்னும்போது,
எப்படி என்னால் பொறுத்துக்கொள்ள முடியும்.

யார் நீ
எனது மண்ணுக்கும்
எனது வாழ்வுக்கும் மாநாடு கூட்ட
உனக்கு யார் அதிகாரத்தை தந்தது?
2

பச்சோந்தியான கருணாநிதியின் குணத்தை
ஏற்கெனவே நான் அறிந்திருந்தாலும்,
மறைந்த தமிழ்ச்செல்வனின், மரணத்தின்போது
வஞ்சகத்துடன் ஆதார சுருதி கூட்டி
இரங்கல் எழுதிய போதுதான்
நான் அறிந்து கொண்டேன்.

கருணா கவிதை எழுதினாலும்,
திரைப்படத்துக்கு வசனம் எழுதினாலும்,
காலாற (உண்ணாவிரதமல்ல)
கடற்கரைக்கு காற்று வாங்க
தள்ளு வண்டியில் போனாலும்
காரணம் இல்லாமல் இருக்காது
என்ற விஞ்ஞான உண்மை.

நான்
என் அறிவுக்கு எட்டிய மட்டில்
சிந்தித்துப் பார்க்கிறேன்.
கவியரசு கண்ணதாசனை விட,
தண்டோரா வைரமுத்துவை விட,
முக்காலா கவிஞன் வாலியை விட
பாரதி, கம்பனையும் விட,,
பொய்க்கவிதை புனைய வஞ்சகம் வரைய,
கருணாநிதியளவுக்கு எவராலும் முடிந்திருக்கவில்லை

சுயநல சுரப்பி
உயர் அழுத்தம் கொள்ளும்போது,
நூதனமான வழிகளில்
விஞ்ஞானத்தாலும் கண்டுபிடிக்க முடியாத
வித்தையை,
வித விதமாக
வினோதமான விளக்கவுரைகளாக,
விதைத்து அறுவடைசெய்ய
கருணாநிதியைப்போல் இன்னும் எவரும் பிறக்கவில்லை!

கோயபல்ஸை'யும் வென்ற
கெட்டிக்காரன் கருணாநிதி.

"டெசோ" என்ற இத்துப்போன விஷவித்தை விதைத்து,
செத்துப்போன ஈழத்துக்கு மாநாடு கட்டி
ஈழத்தமிழர் பெயரால்
தப்பிப்பிறந்த மகளுக்கும்,
தறுதலை மகன்களுக்கும்,
வாழ்வுரிமை மாநாடும்,
திமுக, வின் மீழெழுச்சிக்கான ஆய்வரங்கமும், நடத்த
வெட்கமில்லையா கருணாநிதி?

கோடரிக்காம்பு என்பது
உனக்கு எவ்வளவு பொருந்தியிருக்கிறது,
தீட்டிய மரத்தில் கருத்து கூர் பார்த்து
எத்தனை குழந்தைகள் சாக துணை நின்றாய்,
வைத்தியத்துக்கு வந்த என் அன்னை
பார்வதியை திருப்பி அனுப்பினாய்.
இதைவிட ராஜபக்க்ஷ என்ன பெரிதாக செய்துவிட்டான்.
அவை காலத்தின் குற்றமா, கருவின் குற்றமா.

2011 உனது படுதோல்வியின் பின்னாவது
நீ திருந்தியிருப்பாய் என்று
உன் வயதை மதிப்பிட்டு ஏமாந்து போனேன்.
மோனப் பெருவெளியில்
சொற்பமாவது ஞானம் பிறந்திருக்கும் என்று
வீணாகிப்போனேன்,

வாய்க்கரிசியாக வஞ்சகம் செய்தவனை,
ஏமாற்றி சொகுசாக வாழ்பவனை,
மனச்சாட்சியின் எதிர்நிலையை,
எந்த கவிதை வரிகளில்
விதந்துரைக்க முடியும்.

நாளை குஞ்சாமணியும், சூனா வீயன்னா பாண்டியும்
உன்னுடன் இருப்பார்கள் என்பதற்கு
யார் உத்தரவாதம்?
உன்னைத்தவிர உதவிக்கு உனக்கு
எவருமில்லை.
இதுதான் காலத்தின் கோலம்.

-ஊர்க்குருவி-
  நன்றி சவுக்கு, இணையம்.

No comments: