"இலங்கைத் தமிழர்களின் காயங்களுக்கும், அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும், மருந்து போடுகின்ற மாநாடுதான் ஒக 12ம் திகதி சென்னையில் கூட்டவிருக்கும் டெசோ மாநாடு' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பத்திரிகைகளை அழைத்து விளம்பரம் செய்திருக்கிறார்..

 (Tamil Eelam Supporters Organaisataion – TESO)  "தமிழ் ஈழத்துக்கான ஆதரவு   அமைப்பு", என்பதன் உள்ளார்ந்த   தமிழாக்கம்,   தனித் தமிழிழத்துக்கு   நேரடியான ஆதரவு தரும் அமைப்பு, என்பதே ரெசோ என்பதன் குறியீடு, அதையும் கருணாநிதிதான 1985 கூறியிருந்தார். ஆனால்    இன்றய சந்தற்பம்     பொறுத்து டெசோவுக்கு  புதி விளக்கம் தந்து.    இலங்கைத் தமிழர்   வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு,  என்று சந்தற்பவாத  கற்பிதம்             காட்டியிருக்கிறார்      குழிபறிப்பில் கில்லாடியான  கருணாநிதி, குறைந்த பட்ஷம்            "ஈழத்தமிழர்கள்" வாழ்வில் ஏற்பட்ட   துன்ப துயரம் என்றுகூட துரோகத்தின்   உச்ச உருவமான கருணா நிதியால்  உச்சரிக்க முடியவில்லை!

ஈழத்தமிழர்களுக்கு வாழ்வுரிமை,   மற்றும் பாதுகாப்பு கொடுப்பதற்கு யார் இந்த கருணாநிதி?. இந்த கருணாநிதி அரசியலில் நடந்து வந்த                    காலங்களை தவிர்த்து, தவழ்ந்து சப்பாணியாக    தள்ளுவண்டியில் வலம்வரும் காலங்களில் நடந்த துன்பியல் நிகழ்வுகளில்     சில                  துளிகளை திரும்பிப் பார்ப்போம்.

ஆட்சியிலிருந்து தூக்கி               வீசப்பட்டு தமிழக     மக்களால் ஓரங்கட்டப்பட்டு தோல்வியின்      உச்சத்திலிருக்கும்     கருணாநிதி  சில நாட்களுக்கு முன்வரை  தப்பித்தலுக்காக தமிழ்      ஈழத்துக்காக     உயிரையும் விடுவேன், (எத்தனையோ தரம் விட்ட உயிர்தான்)      ஈழம்  காணாமல் தனது கட்டை வேகாது என்று குத்தி முறிந்து கூவிய கூற்றுக்கள்         சோனியா,           சிதம்பரத்தின் மிரட்டலின்பின் இன்றளவில்        கரைந்து, மருவி  இலங்கை தமிழர்கள் என்று ஆகியிருக்கிறது, "ஈழம்" என்ற சொல்லைக்கூட     பாவிக்க துரோகத்தின் உருவமான கருணாநிதி விரும்பவில்லை!

"""ஈழத்தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்ட அழிவு- துன்ப துயரங்களுக்கு முழு முதற்காரணி, சூத்திரதாரி நவீன நரகாசுரன்/ தந்தரசாலி கருணாநிதி என்பதை தமிழகத்து தமிழர்கள், ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல பிறநாட்டு, பிறமொழி மக்களும் நன்கு அறிவர்!""" 

2009 ல் முள்ளிவாய்க்கால் பரப்பில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது குண்டடிபட்டு செத்ததுபோக மருந்து இல்லாமல் இரத்தப்பெருக்கால் செத்தவர்களின் எண்ணிக்கை இறுதிக்கட்ட 2009 ஏப், மே மாதங்களில் மட்டும் 32 ஆயிரத்துக்கு அதிகமானவை அந்த நேரம் தமிழகத்து உணர்வுள்ள தமிழர்கள் பலர் தமது உயிரை துச்சமாக நினைத்து உயிர்காக்கும் அத்தியாவசிய  மருந்துகளும், இரத்த உறைகளையும் குழந்தைகளுக்கான பால்மா போன்ற பொருட்களை அனுப்பி ஈழத்தமிழர்களுக்கு உதவ இரகசியமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் அவர்கள் அனைவரையும் தனது விஷேட பொலிஸ் படையை ஏவி, ஈவு இரக்கமின்றி மருந்துகளை பறிமுதல் செய்து இரத்த உறைகளை அழித்து, பால்மாக்களை கடலில் வீசி ஈழத்தமிழர்களுக்கு உதவியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தி சிறையில் அடைத்த கொடுமையை காங்கிரசுடன் கூட்டுச்சேர்ந்து செய்தது  திமுக அரசுத்தலைவரான கருணாநிதி என்ற கடைந்தெடுத்த கடைசித்தனமான ஈன மனிதன்.

இன்றும் மதிமுக, மற்றும் பெரியார் திராவிடர் கழக உறுப்பினர்களும், விடுதலை சிறுத்தைகளின் உறுப்பினர்களும், மற்றும் கட்சி சார்பில்லாதவர்கள் பலரும் சிறைக்குள் இருந்து வாடிக்கொண்டிருக்கின்றனர். அன்று உயிர்காக்கும் மருந்து, பால்மா, இரத்த உறை ஆகியவற்றை ஈழத்தமிழனுக்கு கிடைக்காமல் செய்து இவ்வளவு அனீதி இழைத்த அதே கருணாநிதி இன்றைக்கு இலங்கைத் தமிழர்களின் காயங்களுக்கும், அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும், மருந்து போட மாநாடு நடத்துகிறாராம்!?

கொன்றதும் நீயே, குதறியதும் நீயே, தமிழனின் குடிகெடுக்க விபச்சாரியாக மாறி வஞ்சகம் அனைத்தையும் விதைத்ததும் நீயே!

அன்றைக்கு செத்து அழிந்துபோன ஒவ்வொரு ஈழத்தமிழனின் எலும்புத்துகழ்களிலும் ஊனமுற்று கிடக்கும் காயப்பட்ட ஒவ்வொரு தமிழனின் காயத்தழும்புகளிலும் கருணாநிதியின் கயமையே புரையோடிக்கிடக்கிறது. இன்றைக்கு வெட்கம் மானம் துறந்து தற்காலிக தப்பித்தலுக்காக இலங்கை தமிழர்களின் காயத்துக்கு மருந்து போடுகிறேன் என்று மாநாடு நடத்த கருணாநிதிக்கு என்ன யோக்யதை இருக்கிறது? ஒரு முதுகெலும்பு இல்லாத ஈழத்தமிழனாவது இதை ஏற்றுக்கொள்ளுவானா?

உச்சக்கட்ட ஈழப்போரின்போது கருணாநிதி அவசர அவசரமாக டில்லி சென்றபோது யுத்தத்தை நிறுத்த பேசப்போகிறார் என்று தமிழகம் மகிழ்ந்து துடித்துக்கொண்டிருந்தது ஆனால் கருணாநிதி என்ற வஞ்சக மனிதன் தள்ளுவண்டியில் இருந்து இறங்கி சோனியாவின் காலில் விழுந்து சோனியாவிடம் கேட்ட யாசகம் குடும்ப அங்கத்தவர்களுக்கு பசையுள்ள மந்திரிப்பதவி!

அதற்கிடையில் ஈழத்தின் போர் வலயத்தில் உணவு மட்டுமல்லாது குடிநீர், மருந்து, காயங்களின்போது இரத்தப்பெருக்கு இல்லாமல் தடுக்க கட்டுவதற்கு பழந்துணிகூட இல்லாமல் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர் அந்த நேரம் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் உணவுப்பொருட்களையும் உயிர்காக்கும் மருந்துகளையும் சேகரித்து வணங்காமண் என்ற கப்பலில் ஏற்றி ஈழத்தமிழர்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர் அந்த கப்பலை ஓட்டி வந்தவர்கள்கூட  தமிழர் அல்லாத வேறு இனத்தவர்கள். அவ்வளவு பிரயத்தனப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட அக்கப்பலை உள் நுழைய ஸ்ரீலங்கா அரசு அனுமதிக்கவில்லை. போரும் முடிவு நிலைக்கு வந்திருந்தது. அப்போ அந்த கப்பலை ஓட்டிவந்த மாலுமிகள் கப்பலை டில்லிக்கோ, ஆந்திராவுக்கோ, கேரளாவுக்கோ,   திருப்பி கொண்டு செல்லவில்லை தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டின் முதலமைச்சரான கட்டுமரம் கருணாநிதியை நம்பி தமிழ்நாடு கடற்பரப்புக்கு திருப்பி அந்த பொருட்களை ஈழத்தமிழர்களுக்கு அனுப்பிவைக்க உதவுமாறு கருணைக்கோரிக்கை வைக்கப்பட்டது (அப்போது போரும் முடிவுபெற்றிருந்தது) தடுப்பு முகாம்களில் தத்தளித்த மக்களுக்கு அந்த பொருட்களை சேர்த்திருந்தால் பலபேர் பயன்பெற்றிருக்க முடியும். ஆனால் கருணாநிதி என்ற கல் கடுகளவும் இழகவில்லை அந்தப்பொருட்கள் காலம் கடந்து வீணாகிப்போனது! அதை ஈழத்து தமிழ் அரசியல்வாதிகளும் மறந்திருக்கக்கூடும்?

அடுத்ததாக ஈழ செத்தவீடு முடிந்தும் முடியாமலும் மக்கள் புலம்பிக்கொண்டிருக்கும் சமயத்தில் எந்த குற்ற உணர்வுமில்லாமல் தமிழனின் வரிப்பணத்தை தண்ணீராக செலவழித்து 400 கோடி ரூபா செலவில் 2010ல் யூனில் செம்மொழி மாநாடு என்ற பெயரில் குடும்ப விழா மாநாடு நடத்தினார் அந்த விழா ஈழத்தமிழனிம் 1ம் ஆண்டு திவஷம் கணக்காக ஒரு வேடிக்கை வினோத நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. கட்டுமரம் கருணா,, அந்த வேடிக்கை வினோத நிகழ்ச்சியில்  செத்து அழிந்துபோன ஈழத்து தமிழருக்கு ஒரு நிமிட அஞ்சலிகூட செய்யவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியின்போது கருணாவின் கூட்டாளியான திருமாவளவன் ஈழத்தமிழர்களுக்காக ஒப்புக்கேனும் குரல் கொடுத்து அந்த மக்களை கம்பி சிறைக்குள்ளிருந்து மீட்பதற்கு உதவும்படி யாசகம் கேட்டு உருக்கமான வேண்டுகோள் வைத்தார் ஆனால் கருணாநிதி எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் கருங்கல்லாக அமர்ந்திருந்தார். அவரது கண்கள் கறுப்பு கண்ணாடிக்குள் இருந்ததால்  அவரது வஞ்சகமான உணர்வின் பிரதிபலிப்புக்கூட எவராலும் இன்றுவரை அறிய முடியவில்லை,

2008 ம் ஆண்டு தொடக்கத்தில் போர் உச்சத்தை அடைந்துகொண்டிருந்த நேரம் போரை நிறுத்துவதற்கு  தமிழர் தேசியக்கூட்டமைப்பு இராசதந்திர முறைமையில் தேசியத்தலைவரின் ஒப்புதலுடன் இந்திய அரசுடன் கலந்து ஆலோசித்து போர் நிறுத்தம் ஏற்ப்படுத்த விரும்பி இந்தியா சென்றனர். கருணா தமிழக முதலமைச்சராக இருப்பதால் கருணாவை உதாசீனப்படுத்திவிட்டு டில்லி சென்று இந்திய மத்திய அரசை சந்திக்க முயற்சிப்பது முறையல்ல என்ற எண்ணத்துடன் தமிழகத்தில் தங்கி முதலமைச்சரான கருணாவை சந்திக்க குறைந்தது இரண்டு மாதங்கள் முயற்சித்திருக்கின்றனர், ஆனால் கருணாவை சந்திக்க கூட்டமைப்பினருக்கு அனுமதி கிடைக்கவில்லை. கூட்டமைப்பினர் ஏமாற்றத்துடன் நாடு திரும்பியதும் கருணாநிதி கூறிய வார்த்தை ராஜபக்க்ஷவை கோபப்படுத்தாமல் அணுசரித்து போவதை விட்டுவிட்டு இங்கு ஏன் வருகிறார்கள் என்று நக்கலடித்திருந்தார்.

"நல் மாட்டுக்கு ஒரு சூடு நற் பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை"  இந்த சூட்டின் பின் தமிழர் கூட்டமைப்பு கருணாநிதியின் கயமையை நன்கு உணர்ந்திருக்கும் என நம்பலாம் எனவே ஈழத்தமிழினத்தின்மேல் அக்கறையும் இரத்தத்தில் மானமும் இருந்தால் கூட்டமைப்பு கருணாவின் வேடிக்கை வினோத ஏமாற்று மாநாட்டை நிச்சியம் நிராகரிக்கும் என்றே நம்பலாம்.

இன்று காலம் கடந்து சிங்கள இனப்படுகொலையாளி ராஜபக்க்ஷ சொல்லும் ஆதே ஒப்புவித்தலை ஒரு எழுத்து பிசகாமல் பின்பற்றி கருணாநிதியும் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு வாழ்வுரிமை? பேசுவதற்கு மாநாடு கூட்டுகிறார். இதை ஈர நெஞ்சமுள்ள, உணர்வுள்ள, நேர்மையுள்ள ரோசமுள்ள தமிழர்கள எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். மனிதனாக பிறந்த எவரும் சுயநலன் இல்லாமல் இல்லை ஆனால் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மிருகத்தனமான அயோக்கிய சுயநலவாதி கருணாநிதி என்பது ஈழத்தமிழர்களின் 2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேர் அழிவிலிருந்து காலம் இனங்காட்டியிருக்கிறது.

இனப்படுகொலை அனைத்தும் முடிந்தும் கருணாநிதி திருப்திப்படவில்லை ஏப் 16 2010 அன்று வயோதிபத்துடன்  பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு கிடந்த "தேசத்தின் அன்னை" பார்வதி அம்மா, அவர்கள் பராமரிப்பதற்க்குக்கூட உறவினர்கள் அருகில் இல்லாமல் இலங்கையில் அவதிப்பட்டு மாற்று சிகிச்சைக்காக மலேசியா சென்று தங்கியிருந்தார். சில அனுசரணைகளை கருதி தமிழகத்தில் சிகிச்சை பெறுவதற்காகவும் பெற்ற பிள்ளையின் ஆதரவை பெறுவதற்காகவும் மலேசியாவிலிருந்து தமிழகம் வந்த  தேசியத்தலைவரின் தாயாரை விமான நிலையத்தில் வைத்து கருணாநிதியின் அரசு திருப்பி அனுப்பியது. பல மணி நேரங்கள் நெடுமாறன் ஐயா அவர்களும், வைகோ அவர்களும் போராடி வாதாடியும் எந்த அசைவையும் மனிதாபிமானத்தையும் கருணாநிதியின் ஆட்சியில் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஈழத்தமிழர்கள் வரலாற்றின் இந்த நிகழ்வை கோபமாகவும், கரும்புள்ளியாகவும் பதிவு செய்தது தவிர வேறு எதையும் ஈட்ட முடியவில்லை.

கருணாநிதியின் கள்ளக்காதல் கருவில் பிறந்த மகள் கனிமொழி,. அந்த ஒருவரின் வாழ்வுக்காக ஈழத்தில் எண்ணிலடங்காத தாய்மார்கள் வயிற்றில் கருவுடன் கொன்றொழிக்கப்பட்டனர். கருணாநிதியின் ஒரு குடும்பம் விருட்ஷமாக வாழவேண்டும் என்பதற்காக ஈழத்தில் பல இலட்சம் குடும்பங்கள் எரிகுண்டில் எரிந்து சாம்பலாகினர். மழைவிட்டுவிட்டது தூவானம் மாறவில்லை என்று எந்த உறுத்தலுமில்லாமல் கருணா என்ற கொடிய மனிதன் பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்த செய்தி மட்டும் வரலாற்றில் நிற்கிறது.

நித்தம் ஒரு ஏமாற்று, நிமிடம் ஒரு விடுகதை, பொய்யின்மேல் பொய், வேடிக்கை வினோதம் என்று ஏமாற்று வித்தைகளைஏற்றுக்கொள்ளலாமா.? டெசோ'வால்/ கருணாநிதியால்' ஏதாவது நல்லது நடக்குமென்றால் அவரது அரசியல் வாழ்க்கையில்  ஒருநம்பிக்கையூட்டக்கூடிய சிறு வரலாற்று தரவு யாராவது எடுத்து வையுங்கள். ஏற்றுக்கொள்ளமுடியும்!,, இல்லையென்றால் இந்த துரோகத்தை ஒட்டு மொத்தமாக நிராகரியுங்கள்.  திமுக என்ற ஒரு கட்சியை வைத்து மிக மோசமாக கேவலமான அரசியல் செய்து அதின் நிழலில் குளிர்காயும் கருணாநித்தியை தண்டிக்காமல் விடலாகுமா? இலங்கைத் தமிழர்களின் காயங்களுக்கும், அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும், மருந்து போடுகின்ற மாநாடா?  அல்லது கருணாநிதி குடும்பத்துக்கும் அவரது வீழ்ச்சிக்கும் மருந்துபோடும் மாநாடா? இணையத்தளங்களே! ஊடகங்களே! பத்திரிகைகளே உங்களை நம்பித்தான் உலகம் இருக்கிறது ஒரு பெருத்த சமூக வரலாற்று பிழையை பர்த்து மௌனம் காக்கலாமா? தயவு செய்து உண்மையை பறைசாற்றுங்கள்.

ஈழதேசம் இணையத்திற்காக ஊர்க்குருவி.