சாதாரண குடிமகனுக்கு அநீதி இழைக்கப் படும் போதும், அரசுநிர்வாகம் தவறிழைக்கும் போதும், அந்ததவறை திருத்தி, நீதியை நிலைநாட்டுவதுதான்
நீதிமன்றத்தின் பணி.
ஆனால் இந்திய அரசு இழைக்கும் அநீதியை சரி என்று நீதிமன்றம் சொல்லும் போது, ஜனநாயகத்தின் கடைசிப்பக்கமும் கிழித்தெறியப்படுகிறது.
நேற்றய முந்தினம் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பு அப்படி மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்கி,, சர்வாதிகாரமான ஒரு நிலையை மத்திய அரசு எடுப்பதற்கு துணையாக சென்னை நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியிருப்பதாக ஊடகங்கள் கவலைப்படுகின்றன,
மத்திய அரசு அறிவிப்பின் படி, சிபிஐ அமைப்பின் விசாரணையில் உள்ள தகவல்கள் பெரும்பாலானவை. இனிமேல் பொதுமக்கள் தகவல் அறியும்
உரிமைச் சட்ட வரம்பில் வராது.
இத்தனை நாட்களாக இச்சட்டத்தின் கீழ் தகவல்களை அளித்துக் கொண்டிருந்த சிபிஐ, க்கு திடீரென்று விதிவிலக்கு அளிக்கப் பட்டது, வெளிப்படையான நிர்வாகம் வேண்டும் என்று நினைக்கும் பலரை ஆச்சரியப் பட வைத்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயலட்சுமி என்ற வழக்கறிஞர், சிபிஐக்கு விலக்கு அளிக்கும் ஆணையை எதிர்த்து பொது நல வழக்கொன்றை தொடுத்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், சிபிஐக்கு விலக்கு அளித்தது "சரியே" என்று தீர்ப்பளித்துள்ளது. என்று செய்தி வந்திருக்கு.
# கூ கு>>: ஜனநாயகத்தை பேணும் ஒருநாட்டில். ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை மனித உரிமைச் சுதந்திரம் உண்டு. ''எல்லோரும் இந்நாட்டு
மன்னர்கள்'' என்ற சுலோகத்தை தூக்கி வைத்திருக்கும் இந்தியாவில், நாட்டில் நடக்கும் முக்கிய தகவல்களை அறிந்துகொள்வதற்கு அனைவருக்கும் பூரண சுதந்திரம் உண்டு.
அது முடியாதுன்னு மறுப்பது மனித உரிமையை காலில் போட்டு மிதிப்பது போன்ற அராஜகமா தெர்யல்லையாங்க.
அறிந்த தகவல்களை துஷ்பிரையோகம் செய்யாமல் மேன் நோக்கோடு பயன்படுத்தவேண்டும் என்பது, ஒவ்வொரு தனிமனிதனின் கட்டாய கடமை பொறுப்பு, இதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அப்படி இருக்கவும் கூடாது. அதுதானே நாயமுங்க,
அதை விட்டுப்போட்டு, எல்லாவற்றையும் மூடி மறைத்து, பொதுமக்கள் தகவல் அறிந்துகொள்ளும் உரிமையை தடுத்திருப்பது. தப்பல்ல சரிதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இது ஜனநாயகத்தில நாயங்களா?
இது கிட்டத்தட்ட ஒரு கொம்யூனிஸ நாட்டின் சர்வாதிகாரச் சட்டத்திற்கொப்பான செயலாக கருதலாம்ங்க.
அப்படித்தானே படிச்ச ஒருவனோட மனசில இந்த விசயம் பாதிப்பை உண்டுபண்ணும், இல்லீங்களா? ஒரு உயர்ந்த நீதிமன்றத்தின் நீதிமானே யோசிக்காம இப்படி நடந்துக்கலாமா ன்னு கவலைப்பட வைக்குதுங்க.
சிபிஐ என்கிற அமைப்பு இதுவரையில் விசாரணை நடத்திய வழக்குகள் எல்லாம் திறம்பட விசாரிக்ப்பட்டு, இல்லாங்காட்டி ஒண்ணு ரண்டு வழக்கிலாச்சும். அரசியல் தலையீடு இல்லாமல். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட சான்று இந்திய வரலாற்றில் ஏதாவது இருந்திச்சுன்னா. இரண்டு கையும் எடுத்து கும்பிட்டு அவங்க நடைமுறையை வரவேற்கலாம்.
அப்படியான பெருமை ஏதாச்சும் இருந்தால், மக்களும் திருப்திகரமா நிர்வாகங்களில் நம்பிக்கைவச்சி, மதிப்புகுடுத்து தகவல் கேட்டு குடைஞ்சுகிட்டும் இருக்க மாட்டாய்ங்க. சனங்களுக்கு அப்பிடியான ஒரு தேவையும் இருக்காது.
யாராயிருந்தாலும் ஒரு விசயத்தில நம்பிக்கையற்று உள்ளூர ஐயுறவு இருந்திச்சு ன்னாத்தானே கேள்வி கேட்பானுவ.
சிபிஐ சுத்தமா சுகாதாரமா, இருக்குதுன்னு இமேச் இருந்திச்சுன்னா. ரபிக் ராமசாமி போல பொது பெட்டீசக்காரய்ங்க கூட கேள்வி கேக்க கூச்சப்படுவானுக.
உதாரணத்துக்கு சிபிஐ தலையிட்டு விசாரிச்சதா சொல்லப்படும் விசாரணைகள்ல., என் கூமுட்டை மண்டைக்கு தெரிஞ்ச மூணு நாலு வழக்கை எடுத்து வைக்கிறேங்க.
நான் பேப்பர் படிக்க துவங்கின காலத்தில, சினிமாதான் நம்பளோட மொதலாவது சொய்ஸ், அததாண்டித்தான் புதினம் படிக்குறதுங்க.
இருந்தும் போபர்ஸ் பீரங்கி ஊழல் விசாரணைன்னு ஒண்ணு அப்போவே ஓடிக்கிட்டிருந்திச்சு. ஸ்வீடன் நாட்டில பீரங்கி வாங்கி கமிஷன் அடிச்சு இந்தியப் பிரதமர் ராஜீவ் சுத்துமாத்து பண்ணியிட்டார்ன்னு, வீட்டில பெரியவங்க பேசிக்கிட்டாய்ங்க.
ஊழல்ன்னா என்னன்னு சரியா புரிஞ்சுக்காத எனக்கு, அப்போ அந்த செய்தி பெரிய விஷயமாயும் பட்டுக்கல்லீங்க.
ஆனா பாருங்க நான் வளர வளர, அந்த பீரங்கி ஊழலும் எந்த விசாரணை செஞ்சும் முடிவில்லாம. வளந்து வந்திட்டே இருந்திச்சு, அப்பொறம்தான் அத படிச்சு அறியணுமுன்னு எனக்கும் கொஞ்சூண்டு ஆர்வம் வந்திச்சு.
இன்னும்தான் அதுக்கு முடிவ எவனும் கண்டுபிடிச்சி தீர்ப்பு எழுதல்லீங்க.
அதே நேரம் இந்தியாவின் 'போபால்', ங்கிற எடத்தில நச்சுவாயு கசிவு ஏற்பட்டதாயும். நிறைய மக்கள் செத்துப்போனதாவும் நிறையப்பேர் உடல்
ஊனமுற்று போய்க்கொண்டிருப்பதாயும், ஆல் இந்தியா றேடியோ, ஆகாசவாணி செய்திகள்ள சொல்லிக்கொண்டிருந்தாய்ங்க,
உயிர் சம்பந்தப்பட்ட விசயமாச்சே அந்தச்செய்தி டக் கினு மனதில பதிஞ்சுபோச்சு.
யூனியன் கார்பைட் கொம்பனி ன்னா எனக்கு தெரிஞ்சு. அந்தக்கொம்பனி "எவரெடி" ங்கிற (eveready) பற்றறி தயாரிக்கிற புகழ் பெற்ற கொம்பனி ங்கிறதுதான் தெரிஞ்ச விசயம். (எவரெடி பற்ரறி, எவெரெடி டார்ச் லைட், நம்ப(கிராமத்தில) நாட்டில நல்ல மவுசா இருந்த காலம். எங்க வீட்லையும் எவறெடி லைட் தான் பாவனையில் இருந்திச்சு. இதில எனக்கு கொஞ்சம் பெருமையும் கூட.)
அப்பொறம்தான் புரிஞ்சிச்சு, இது யப்பானோட கிரோசிமா, நாகசாகி நகரங்கள்ள, அமெரிக்கா போட்டுத்தாக்கின, ரசாயினத்த ஒத்த "மிதைல் ஐஸோ சயனட்" என்ற பயங்கர இரசாயனம் என்றும். போபால்,ல பல ஆயிரம் மக்கள நாசம்பண்ணியிருக்கின்னு. திகைச்சுப்போயிட்டேன்,
அந்தக்கதையும் நீண்டகாலமா மேஹா சீரியலாட்டம், சாண்டில்யனோட தொடர்கதையாட்டம் முடிவில்லாம ஓடிக்கிட்டிருந்திச்சு. அந்த வழக்கும் கால்
நூற்றாண்டுக்கு மேல ஓடியும் குத்தவாளிய தப்பவைச்சிட்டு ஒப்புக்கு வழக்க நடத்தினாய்ங்கன்னு அந்த ஊர் மக்கள் திட்டுறாய்ங்கன்னு கேள்வி,
அத அதிகாரத்தில உள்ள எவனும் காதில வாங்கினாப்போல தெர்யல்ல. கடசியா ஏதோ ஜில்மால் பண்ணி வழக்க முடிச்சிட்டாய்ங்க என்று பேசிக்கிறாய்ங்க,
செத்தவன் செத்ததுதான், உடல் ஊனமுற்றவன் ஊனமுற்றதுதான். ஊனமுற்ற ஒரு அரசு நாட்ட ஆண்டுகிட்டு இருக்கும்வரை நாடும் ஊனமாத்தானே இருக்கும், யாரு இத கேக்கப்போறா ன்னுதான் நினைக்க தோணுது.?
அப்பொறம் வந்திச்சு நம்ப ராஜீவ் கொலை வழக்கு. அதுவும் ஓடி 21 ஆண்டை கடந்து மர்மக்கதையாட்டம் முடிவுக்கு வராம முடிஞ்சிருச்சு.
இடையில ஹர்சத் மேத்தா பங்குச்சந்தை ஊழல். சத்யம் ஊழல் ன்னு ஏகப்பட்ட சமாச்சாரம் ஓடிக்கிட்டிருந்திச்சி..
சினிமா படங்கள்ள ஒரு கட்டத்தில பெருத்த மோசடி அதிகாரிங்களா இருக்கிற வில்லன்கள புடிக்க சிபிஐ அதிகாரிகள் வருவாய்ங்க, அந்தநேரம் ஒடம்பு புல்லரிக்கும், தியேட்டரே கடகடக்கிறாப்போல எபெக்ட் குடுப்பாய்ங்க'
நானும் சினிமா பார்க்கும்போது நிமிர்ந்து முன்னாடி நகர்ந்து ஒக்காந்து திருப்திப்பட்டதுண்டு, சிபிஐ ன்னா இம்மாம் பெரிய சக்தி படைச்சதென்னு நானும் புல்லரிச்சு போனதுண்டுங்க.
அப்பொறமாத்தான் புரிஞ்சுக்கிட்டேன் அல்லாமே மாயை. (சும்மா) ஆளும் வர்க்கத்தின் சுத்து வட்டத்திலதான் சிபிஐ, றோ, எக்ஸ்ரா எக்ஸ்ரா அத்தினியும் அடக்கம் ன்னு புரிஞ்சு வெறுத்துப்போனேனுங்க.
அல்லாத்தையும் தள்ளி வைச்சிட்டு, சிபிஐ தலையிட்டு விசாரிச்சும், இன்னும் மர்மமா இருக்கிற, ராஜீவ் கொலை வழக்க எடுத்தாலே தலை சுத்துதுங்க.
அண்மையில திருச்சி வேலுச்சாமி ஐயா அவங்க. குமுதம் இணையத்தளத்து ஒரு நேர்காணல்ல பகிரங்கமா புட்டு புட்டு வைச்ச ராஜீவ் கொலை பத்திய இம்போட்டன் விசயங்கள், இந்த ஆட்சியாளன்கிட்டயும் சிபிஐ காரங்க கிட்டயும் போய் சேரல்லியோ ன்னு டவுட்டா இருக்கு.
திருச்சி வேலுச்சாமி சொல்லுறாரு. தூக்கில போடவேண்டியவைங்க முருகன், சாந்தன், பேரறிவாளன், இல்லையின்னும். தூக்கில போடப்படவேண்டிய மூணு பேரும். வெளியில சூதானமா சுத்திக்கிட்டு திரியிறாய்ங்கன்னும். பகிரங்கமா குத்தஞ்சாட்டியிருக்காரு.
அவைய்ங்கள்ள ஒண்ணு சுப்பிரமண்யன் சுவாமி. அடுத்தவரு சந்திரா சுவாமி, மத்தவரு சிறப்பு புலனாய்வு தலிவர் கார்த்திகேயன், அப்பிடின்னு அடிச்சு சொன்னாருங்க.
எனக்கு திகைப்பூண்டில மிரிச்ச மாதிரி ஒடம்பு கிறு கிறுத்துப்போச்சு.
அதோட நில்லாம ஆயுள் தண்டனை குடுத்து சாவறுதிகாலம் சிறையில கைதியா இருக்கவேண்டியவரு, நம்மளோட பசி, அதுதான் உள்த்துறை அமிச்சர் சிதம்பரம், அவிங்கதான் ன்னு நிறைய புத்தக ஆதாரங்களோட விலாவாரியா வெளக்கினாருங்க,
இப்போ தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில 21 வருஷமா வாடிக்கிட்டிருக்கிற சாந்தன் ங்கிறவரு மேல சுமத்தப்பட்ட குத்தம் அவரோட பெயர் சாந்தன், ன்னு இருந்தது தவிர வேற ஆதாரமே இல்லன்னு அடிச்சு சொல்லுறாரு.
இதென்ன கொடுமடா சரவணா' எங்கிற காமடிதான் மின்னாடி வந்து நின்னு மின்னுதுங்க.
இன்னிக்கு நேத்திக்கு இல்லீங்க, திருச்சி வேலுச்சாமி அவங்க நீண்டகாலமா இதுபற்றி பேசிக்கிட்டிருந்தாலும். காங்கிரஸுக்காரன்கிட்ட உள் நோக்கம் இருக்கிறதால செவிடன் காதில ஊதின சங்காட்டம் எவனும் கேக்கிறாப்புல இல்லீங்க.
நீதி சாகாதுன்னு நீண்டகாலமா சொல்லுறாய்ங்க பொறுத்துத்தான் பாப்போம்.
வேலுச்சாமி ஐயா அவய்ங்க சொல்லுறது ஒரு பக்கம் இருக்க. "புதிய தலைமுறை" அப்பிடின்னு ஒரு தொலைக்காட்சி. ஒரு முக்கியமான விவாதத்தை நடத்தினாங்க.
அதில சுப வீரபாண்டியனும். சு சுவாமியும் உண்டு இல்லைன்னு பண்ணிட்டாய்ங்க.
சுப வீரபாண்டியன் ன்னாலே கொஞ்சகாலமா நம்பளுக்கு கொஞ்சம் கசப்புத்தான். இருந்தாலும் "புதிய தலைமுறை" தொலைக்காட்சில விடியோ கொண்பரன்ஸ் மூலியமா. சு சுவாமியயும் சுப வீர பாண்டியனும் விவாதிச்சாங்க. என்னதான் நடக்குதுன்னு பாத்துக்கிட்டிருந்தேன்.
சு சுவாமி ஒரு அட்வக்கேட் ன்னு சொல்றாய்ங்க. அதோட அமெரிக்கா கேம்பிறிச் யூனிவசிற்றியில வகுப்பெடுக்கிறதாவும் ஒரு வதந்தி உலாவிச்சு, ஆனா சுவாமியால, சுபவீ அவங்களுக்கு ஒண்ணுமே பதில் சொல்ல முடியல்லங்க, சு சு, அல்லாடிப்போனாரு.
சுப வீரபாண்டியன் அவங்க எடுத்து வச்ச கேள்விய்ங்களுக்கு சு சுவாமியால பதில் சொல்ல முடியல்லீங்க. ஒரு கட்டத்தில சு சு, விதண்டாவாதம் பண்ணியும் பாத்தாரு. சுப வீ அவங்களோட நறுக்கான கேள்விக்கு பதில் சொல்லிக்க முடியாம, சு சு, எந்திரிச்சு ஓடிட்டாரு.
இப்ப பாத்தா சகட்டுமேனிக்கு காங்கிரஸை தமிழ் நாட்டில அல்லாரும் விமர்சிச்சுட்டுத்தான் இருக்காய்ங்க, தாத்தா கருணா அவிங்களும் வேண்டா
வெறுப்பா கூட்டணி தொடரும் ங்கிறாரு.
கனிமொழியோட வழக்கில பிணை கெடைக்கும். ஜாமீனில் வெளிய வருவாங்கன்னு பேசிக்கிறாய்ங்க, கனிமொழி வெளியில வந்திட்டாய்ங்கன்னா தாத்தாவும் காங்கிரஸை தலை முழுகிடுவாரு போலத்தான் தெரியுது.
ஊழல் வழக்குகளாகட்டும், ராஜீவ் கொலை வழக்காகட்டும், காங்கிரஸின் நடவடிக்கைகள் தப்புன்னு சொல்றவங்க அத்தின பேரும் நன்கு படிச்ச முன்னைநாள் காங்கிரஸுக்காரங்கதான், எங்கிறத கவனிக்கணுமுங்க.
நெடுமாறன் ஐயா அவங்க ஆரம்ப காங்கிரஸுக்காராரு. தமிழருவி மணியன் அவங்களும் காங்கிரஸில நீண்டநாள் இருந்தவரு. திருச்சி வேலுச்சாமி அவங்களும் அப்பழுக்கற்ற காங்கிரஸுக்காரரு, சீமான் அவங்கள எடுத்தாலும் அவங்க அப்பா காங்கிரஸு காரர்ன்னுதான் சீமான் சொல்றாரு.
தங்கம்பாலு அண்ணனையும். எளங்கோவனையும் வச்சி தமிழ்நாட்டில காங்கிரஸை நிமித்திடலாம்ன்னு நெனைச்சா அது வடிவேலுவை வச்சி திமுகவை நிமித்திடலாம்ன்னு கருணா நெனைச்ச மாதிரியான காமடிதானுங்க.
தகவல் அறியும் உரிமையை பறிச்சிட்டா பொதுசனம் கேள்வி கேக்க முடியாது நம்மபாட்டுக்கு நாம நினைச்ச சட்டத்தப்போட்டு ஆட்சி பண்ணிடலம்ன்னு கணக்குப்போட்டா தப்புக்கணக்காயிடுமுங்க.
ஆட்சியில இருக்கிற இவங்களோட ஐஞ்சு வருஷம் முடிஞ்சப்பொறம் தேர்தல்
வரும்போது தீர்மானம் மக்களிடம் போயிடும் என்பத மறந்திடாதீங்க.
சமீபத்திய தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தல் ஒங்களுக்கு நிறைய பாடம் கத்து தந்திருக்கு, ஒங்களோட சேர்ந்த தாத்தா, மருத்துவர் ஐயா, தெருமா அண்ணன் அத்தினி பேரும் தெருவில நிக்கிறாய்ங்க, அதுக்கப்பொறமும் நாண்டுக்கிட்டு நின்னீங்கன்னா. நல்லாவா இருக்குமுங்க.
மண்மோகன் சிங்கம் ஐயாவும், பசி மாமாவும், பிரணாப் ஐயாவும், சிவ்சங்கர் மேனும். சோனியா அம்மாவ சுத்தி இருந்து, சோனியா அம்மா அவிங்க என்ன சொல்றாங்களோ அத மக்கள் ஏத்துக்கொள்ள வேணுங்கிறீங்க, நாயமா இருந்தா யார் வாணாங்கிறா.
ரோசனை பண்ணுங்க, தப்ப திருத்துங்க, மக்கள் சந்தோசமா இருந்தா அடுத்தவாட்டியும் ஆட்சிக்கு வரலாமுங்க. இல்லேன்னா தமிழ்நாடு தாத்தாவோட கதிதான். ஆமா!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment