பொதுநலவாய
அமைப்பு நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தினை இலங்கையில் தந்தரமாக நடந்தி
முடித்து, பங்குபற்றும் தலைவர்களை தலை கழுவி தன்மீதுள்ள இனப்படுகொலைப்
பழியை தாண்டிவிட முயன்ற ஶ்ரீலங்காவின் ஜனாதிபதி ராஜபக்ஷ மிகப்பெரிய
சர்வதேச பொறியில் சிக்கியிருக்கிறார்.
கொமன்வெல்த் சாரலில் நடந்த, நடந்துகொண்டிருக்கும் விமர்சனங்களுக்கு
ராஜபக்ஷவால் பதிலளிக்க முடியவில்லை. விமர்சனக் கேள்விகள் ஒன்றின்மேல்
ஒன்றாகி உள்ளேயும் வெளியேயும் இடியப்பச் சிக்கலை தோற்றுவித்து நிற்கிறது.
இனப்படுகொலை
சம்பந்தமாக எழுந்திருக்கும் உயர்மட்ட விமர்சனங்கள் பூசி மெழுகி
அமுக்கிவிடக்கூடியதல்ல என்பது மட்டும் அரசியல் தெரியாத என்போன்ற
பதர்களுக்கு புரிகிறது, அதே நிலையையில்தான் இனப்படுகொலை சூத்திரதாரியான
ராஜபக்ஷவும், ராஜபக்ஷவின் இடக்கரம் வலக்கரமான இந்தியாவும் இப்போது
கொண்டுள்ளன என்பதும் அவரவர் பேச்சுக்களிலிருந்து புரியக்கூடியதாக உள்ளது.
கொமன்வெல்த்
மாநாட்டு கூட்டங்களின் முன்னும் பின்னும் இலங்கை மீதும், இலங்கை ஜனாதிபதி
ராஜபக்ஷ மீதும் சுமத்தப்பட்ட நெருக்கடிகளை பூசி மெழுகி களைவதற்கு
கொமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலாளர் கமலேஷ் சர்மா, மற்றும் இந்திய வெளி
விவகார அமைச்சர் சல்மான் குர்ஜித்து ஆகியோர் பகீரத பிரயத்தனம்
எடுத்துக்கொண்டுள்ளனர்.
15,ம் திகதிக்கு பிந்திய கொமன் வெல்த்
கூட்டத்திலும் கூட்டம் இல்லாத தனிச்சந்திப்புக்களிலும் பிரிட்டன் பிரதமர்
ராஜபக்ஷவுடன் சற்று கடுமையாகவே பேசிக்கொண்டார் என்றும் பேச்சுவார்த்தைகள்
சாதாரண பேச்சுவார்த்தைபோலல்லாமல் வாக்குவாதம்போல் நடந்ததாகவும் செய்திகள்
சொல்லுகின்றன.
முடிவாக,
1, இலங்கையில் நடைபெற்றுள்ள
போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் தான்
உறுதியுடன் இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமருன் கடுமைபட
கூறியுள்ளார். வரும் மார்ச் மாதத்திற்குள் போர்க் குற்றம் குறித்து
விசாரிக்க உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை என்றால், சர்வதேச விசாரணை நிச்சயம்
தொடங்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமருன் இலங்கைக்கு
எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் போர்க்குற்றங்களை மறைக்க இலங்கை முயற்சி
செய்வது உண்மை என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இலங்கை
சுயமான விசாரணை பொறிமுறை ஒன்றை அமைத்து, அதன் இராணுவப் படையினர் மீதுள்ள
போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை கையாள்வதாக உலகுக்குக்
காட்டவேண்டும் அப்படி காட்டினால், அது அது மிகப்பெரிய மாற்றத்தை
ஏற்படுத்தும் என்று பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக்
கூறியிருக்கிறார்.
2, பிரித்தானியாவின் கருத்தை கொண்டிருந்த கனடா
இலங்கை மண்ணில் மிதிப்பதை பாவமாக உருவகப்படுத்தி கொமன்வெல்த் மாநாட்டில்
கலந்து கொள்ளவில்லை, ஈழ மண்ணில் நடந்த இனப்படுகொலைகள் சர்வதேச
விசாரணைக்குட்படுத்தவேண்டும் என்றும் மனித உரிமை மீறல்கள்
விசாரிக்கப்படவேண்டும் என்றும் திடமான முடிவை கனடா தெரிவித்திருக்கிறது.
அத்துடன்,
மனித
உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க இலங்கை உரிய
நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர்
கமலேஷ் சர்மா தெரிவித்திருந்த துறை சாராத தலையீட்டுக்கு கனடா பெரும்
அதிருப்தியை வெளியிட்டிருந்தது. சர்மாவின் கருத்து ஏற்றுக்கொள்ளக்
கூடியதல்ல, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள
நடவடிக்கைகள் போதுமானவையல்ல வடக்கில் மனித உரிமை மீறல்கள் தொடர்ச்சியாக
இடம்பெற்று வருவதாகவும், பொதுநலவாய நாடுகள் அமைப்பு கடமை தவறிச் செயற்பட்டு
வருவதாகவும் கனடா தனது மிகப்பெரிய அதிருப்தியை தெரிவித்துள்ளது..
3,
ஒக செப் மாதங்களில் இலங்கைக்கு விஜயம் செய்து கள நிலவரங்களை நேரில்
பார்வையிட்ட ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் இலங்கையில்
நடந்த இனப்படுகொலைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் சர்வதேச விசாரணை
தேவை என்று அழுத்தமாக தெரிவித்திருக்கிறார்.
4, பொதுநலவாய
மாநாட்டு இலச்சினையில் “வணக்கம்” என்ற பதத்தை நீக்கிவிட்டு “ஆயுபோவன்”
என்ற சிங்களப் பதத்தை தமிழில் எழுதப்பட்டிருந்தது அது ஏன்? என்று
வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அந்தக் குழு
வில் தான் இல்லை என்று சிறீலங்கா அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
பதிலளித்தார்.
பொதுநலவாய மாநாட்டு இலட்சினையில் அழகான
தமிழில் “வணக்கம்” என்று எழுதப்பட்டிருந்ததற்கு மேலாக துவேஷ
மனப்பாண்மையில் திட்டமிட்டு சிங்கள வாக்கியமான “ஆயுபோவன்” என்ற சிங்கள
வார்த்தையை தமிழில் எழுதி ஒட்டப்பட்டுள்ளது.
நிலவரங்கள் இப்படி இருக்கும் பட்சத்தில்,
மனித
உரிமைகள் மீறல்கள் தொடர்பில் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள பாரிய
குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் மேற்கெள்ளும் விசாரணைகள்
திருப்தியடைவதாக இந்திய வெளிவவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்
தெரிவித்திருக்கிறார்.
(நகைப்புக்குரியதென்று கருதப்பட்ட) கற்றுக்
கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க அணைக்குழு நியமித்ததன் ஊடாக இலங்கை
அரசாங்கம் சுயாதீன விசாரணையை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.!!
இலங்கையில்
இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய
பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்திருந்த கருத்து பற்றிய கேள்விக்கு
பதிலளித்த சல்மான் குர்ஷித், பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வுகளை வழங்க
முடியாது எனவும் வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும்
வேலைத் திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்தி வருகிறது. இதற்கு இந்திய
அரசாங்கம் உதவி வருவதாகவும் கூறினார்.
தமிழ் இனமும், சர்வதேசமும்
முரண்பாடாக இருக்கும் விடயமான மனித உரிமைகள் விவகாரம், மற்றும்
இனப்படுகொலை ஆகியவைகளை தொட்டும் பார்க்காமல் அவைகளை தாண்டி அரசியல்
செய்யும் போக்கையே ஶ்ரீலங்கா ஜனாதிபதி முன்னிலைப்படுத்தி வருகிறார், அது
சர்வாதிகார போக்கை வெளிப்படுத்துவதாக சர்வதேச மட்டத்தில் எதிர்ப்பு
கிளம்பியிருக்கிறது,
உச்ச போர்க்காலத்தில் நடந்து முடிந்த சகல
விடயங்களுக்கும் விரிவான சட்ட விசாரணை தேவை என கண்டிப்பான உத்தரவுகள்
பிறக்கத்தொடங்கியிருக்கின்றன.
இப்படியான நற் தருணங்களில் இந்தியா தமிழர்களுக்கு எதிரான தனது சதிவேலையை தொடருவது வழமையானது,
ஒரு
காலகட்டத்தில் ஶ்ரீலங்காவின் இத்தகைய இன விரோதப் போக்கால் தமிழ் இளைஞர்கள்
துப்பாக்கி தூக்கி ஶ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதிராக 35 வருடங்களுக்குமேல்
போராட தள்ளப்பட்டனர்.
அதே செயற்பாட்டினை இந்தியாவும் முனைப்பு
காட்டிவருவதால் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் மற்றும் அரசியற் கட்சிகள்
கொதி நிலையில் இந்திய மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி
வருகின்றனர்.
இந்திய மத்திய அரசு அடிப்படையை உணராமல்
மிலேச்சத்தனமான அரசியலில் ஈடுபட்டு ராஜபக்ஷவின் கொள்கையை ஆதரித்து
தமிழர்களை அடிமைப்படுத்த தொடர்ந்து நிர்ப்பந்திக்குமானால் இலங்கையில்
பிறந்த கலகம் போன்ற துரதிர்ஷ்டம் இந்தியாவையும் மையம் கொள்ளலாம்.
ஈழதேசம் செய்திகளுக்காக.
ஊர்க்குருவி.
No comments:
Post a Comment