Monday, November 25, 2013

தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன், அவர்களின் ஐம்பத்தொன்பதாவது சூரிய அகவை.‏
























நேரிய கோட்டினில் நிமிர்ந்த நல் உருவாய்

நின்றொரு தாமதம் கண்டிடா நடையாய்

பாரினில் தமிழன் பிறந்ததன் பலனாய்

பக்குவம் கொண்டதோர் சித்திர வடிவாய்

காலத்தின் கட்டளை பெற்றதோர் மகவாய்

கண்ணென கண்ட என் தமிழனின் முதலே.

 

நீண்டதோர் சன்னதம் கொண்டு நீ துடித்தாய்

நித்திரை துறந் தெங்கள் சந்ததி வளர்த்தாய்

கண்ணென்று தமிழினை காத்தருள் செய்தாய்

காட்டிலும் மேட்டிலும் காவலாய் நின்றாய்

விண்ணள வானதோர் வீரனாய் ஆனாய்

விடுதலைப் புலிகளின் தலைவனே பொருளே.

 

விண்ணது சிறியது வெல்லுவோம் என்றாய்

வீரத்தின் விளை நிலம் நீயென்று ஆனாய்

கண்ணிலும் பெரிதென கடமையை கொண்டாய்

காற்றிலும் புயலிலும் கலந்து நீ வந்தாய்

தண்மையாம் உன் முகம் சந்திரன் என்றால்

சரி நிகர் வெம்மையில் சூரியன் என்பார்.

 

ஆண்டொரு நான்கது எங்கு நீ மறைந்தாய்

அற்புத வீரத்தை என்னிடம் ஈர்ந்தாய்

மீண்டொரு நாள் வந்து மீதியை முடிப்பாய்

மிகச்சரி யானதோர் கட்டளை வகுப்பாய்

வேரிலும் மண்ணிலும் விடுதலை என்றாய்

விழி திறந்துன்வழி காத்திருக் கின்றோம்.

 

மண்ணினை காத்திட மலையென வந்தாய்

மானத்தை உலகம் அறிந்திட வைத்தாய்

நடத்தையில் நீயொரு இலக்கணம் ஆனாய்

நிமிர்ந்து நாம் நடந்திட பெரு வெளியானாய்

பூமியில்த் தமிழொரு புள்ளியாய்க் கொண்டாய்

புதியதோர் சரித்திரத்  தலைவனே  வாழி.

 

அகவையும் ஐம்பத் தொன்பதென் றாச்சு

அலைகடல் திரும்பியுன் வழி எதிர்பார்ப்பு

நாவிலும் உயிரிலும் உன்  உருவாச்சு

நடை வழி எங்கினும் உன் பெயர் பேச்சு

பூமியில் நீ பிறந் தின்றைய நாளில்

போற்றி நாம் வாழ்த்துவோம் பிறந்த நாளென்று.

 

ஊர்க்குருவி.

No comments: