இந்தியா மீது தமிழர்கள்
முற்றுமுழுதாக அவநம்பிக்கை அடைந்துள்ள இன்று, அப்துல்கலாம் ஏன் அவசரமாக
யாழ்ப்பாணம் வருகிறார்?
அவர் வந்து சென்ற பின்னராவது ஈழத்தமிழர் தொடர்பான
இந்திய நிலைப்பாட்டில் மாற்றம் ஏதாவது ஏற்படுமா? சோனியா காந்தி உள்ளிட்ட
இந்தியத் தலைவர்களிடம் கலாம் இங்குள்ள தமிழ் மக்களின் உண்மையான உணர்வுகளை
எடுத்துரைப்பாரா? இவ்வாறு கேள்விகளை அடுக்கினார் நாடாளுமன்ற உறுப்பினர்
ஈ.சரவணபவன்.
வலி.மேற்கு அராலி மாவத்தை விளையாட்டுக்
கழகத்தினரால் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட உழவர் விழாவில் பிரதம
அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவற்றைத் தெரிவித்தார்.அராலி
தெற்கு மாவத்தை விளையாட்டுக்கழகத் தலைவர் கே.துஷ்யந்தன் தலைமையில் நடைபெற்ற
இந்த விழாவில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தொடர்ந்தும்
கூறியதாவது,
பொங்கு தமிழ் எழுச்சி
நிகழ்வைக்கொண்டாடிய நாம் இன்று பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்றோம். இந்த
உழவர் விழா பல வீர விளையாட்டுக்களை உள்ளடக்கிய தமிழர் திருவிழா. நாம்
தன்மானம் உள்ள வீரப் பரம்பரையில் உதித்தவர்கள்.
எமது இளைஞர்களுக்குப் பயிற்சிகளையும்
உற்சாகத்தையும் வழங்கி நமது ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்ததே
இந்தியாதான். அதேவேளை அதே ஆயுதப் போராட் டத்தை ஒழிக்கவும் இலங்கை அரசுக்கு
துணை நின்றதும் இந்தியாதான்.
இலங்கை வரும் இந்திய வெளிவிவகார
அமைச்சர் கிருஷ்ணா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களைச் சந்தித்த
பின்னரே அரசுடன் பேசுவார் என்று முன்பு கூறப்பட்டது.ஆனால் இந்திய
வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட உத்தியோக பூர்வ நிகழ்ச்சி நிரலில்
இதனை இழுத்தடிப்புச் செய்துள்ளனர்.
இதனைச் சுட்டிக்காட்டிக் கேட்டபோது
""இல்லை, இல்லை, தமிழ்த் தேசியக் கூட்டணியினரையும் சந்திப்பார்'' என்று
கூறப்படுகிறது.ஏன் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு. இது பெரும் சந்தேகத்தை
தமிழ் மக்களிடையே எழுப்பி உள்ளது. இவ்வாறே முன்னாள் ஜனாதிபதி கலாமின் பயண மும் அவரை ஏன் இந்திய அதிகாரிகள் இங்கு அழைத்து வருகிறார்கள்?
தமிழர்கள் கொல்லப்பட்ட போது வாயே
திறக்காத கலாம் இப்போது இங்கு வந்து என்ன செய்யப்போகிறார். ஈழத்
தமிழருக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்திருப்பாரா இங்கே இப்போ எதைப் பார்க்க வருகிறார் கலாம்?
வடபகுதி மக்கள் இப்பொழுது வெள்ளைச்
சீருடையணிந்து சிவில் அதிகாரி என்று காட்டிக்கொள்ளும் இராணுவ அதிகாரியின்
ஆளுநரின் பிடிக்குள் சிக்கிச் சீரழிகின்றனர்.ஆட்டைக் கடித்து , மாட்டைக்
கடித்து இப்பொழுது தமிழ் மக்களின் பெரும் சொத்தான கல்வியிலும் மூக்கை
நுழைத்துவிட்டார் அவர்.
தகுதியும் திறமையும் உள்ள கல்வி
நிர்வாக சேவை அதிகாரிகள் சுதந்திர மாக செயற்பட முடியவில்லை. ஆளுநரின்
அடாவடி உத்தரவு களை நிறைவேற்றும் தலை யாட்டி பொம்மைகளாக அவர்கள்
நடத்தப்படுகின் றனர்.
அகில இலங்கை ரீதியில்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் மாணவன் முதலாம் இடத்துக்கு வந்துவிட்டது
இவர்களுக்குப் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள் ளது. இதனால் கல்வி
வளர்ச்சியையும் சீரழிக்க முனைகின்றனர்.அரசு மாகாணக் கல்வி வளர்ச்சிக்கு ஒரு
சதவீதத்தை மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது யானைப் பசிக்கு சோளப் பொரியை
போட்டது போன் றது. எமது பெற்றோரும் பழைய மாணவர்களும் சுயமாகவே முன்வந்து
எமது பாடசாலைகளுக்கும் மாணவர் களுக்கும் பெருமளவில் உதவுகின்றனர்.
இதனைக்கூடக் கண்டு பொறுக்க முடியாத
ஆளுநர் எந்த ஒரு பாடசாலை அதிபரும் தனது அனுமதியின்றி எந்த ஒரு உதவியையும்
எவரிடமும் பெறக்கூடாது எனக் கட்டளை இட்டுள்ளார் தென்னிலங்கை அரசுகள் முன்பு
தமிழர்களின் கல்வி யில் கை வைத்ததாலேயே இளைஞர்கள் கிளர்ச்சியில்
ஈடுபட்டனர். அதேபோன்ற ஒரு நிலையை மீண்டும் உருவாக்க முனைகின்றார் ஆளுநர்.
அதற்கு துணை போகின்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
மீளக்குடியமர்ந்த மக்க ளுக்கு இந்திய
அரசு வழங் கிய 1,500 சைக்கிள்களில் 500 சைக்கிள்களை சிங்கள வர்களுக்கு
வழங்கிவிட்டார் ஆளுநர். எஞ்சிய ஆயிரம் சைக்கிள்களையும் அப்ப டியே அபகரிக்க
முயன்றார் அமைச்சர் டக்ளஸ். இப் பொழுது இந்த மோசடி அம்ப
லமாகிவிட்டது. இத்தகைய அடக்குமுறை களுக்கு எதிராக பாதிக் கப்பட்ட மக்கள்
ஒற்றுமை யாகக் குரல் எழுப்ப வேண் டும். அஞ்சக்கூடாது.
நல்லிணக்கம், இணக்க அரசியல் என்று
இலங்கை அரசும் அமைச்சர் டக்கிளசும் நமது முதுகில் குத்துகின் றனர்.
தொடர்ந்தும் நம்மை அடிமைப்படுத்துவதிலேயே இலங்கை அரசு தீவிரமாகச்
செயற்படுகின்றது.அதேவேளை எமது விடயத்தில் இந்தியாவும் நேர்மையாக நடக்காதது
பெரும் கவலையாகிறது. இப்படியான ஒரு சூழலில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி
யாழ் வருகின்றார். அவர் பல்லைக்கழகத் துக்கும் இந்துக் கல்லூரிக்கும்
வருகை தரவுள்ளார். இந்தக் கல்விமானின் வருகை ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அப்படி இல்லை எனில் வேறு எந்த
இந்தியரும் வடக்கே வராத படிக்கு செய்து விட வேண் டும் என்றார் சரவணபவன்.
நன்றி உதயன்.
No comments:
Post a Comment