தேசியத்தலைவர்: எதிரியை விட துரோகி மிகவும் பயங்கரமானவன்; சிங்களவன் தமிழனுக்கு எதிரி, கருணாநிதி தமிழினத்தின் துரோகி
- இவ் விடயம் 14. 07. 2010, (வியாழன்), தமிழீழ நேரம் 3:35க்கு பதிவு செய்யப்பட்டது
- கட்டுரைகள், செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி
சீமான் கைது செய்யப்படுவதற்கு முன்பாக எழுப்பிய ஐம்பதிற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு கருணாநிதியின் பதிலென்ன…
இன மானமுள்ளவர்கள், இனத்தின்பால் பற்றுக்கொண்டவர்கள், அப்பாவி மக்கள்மீது ஏவப்படும் கொடுமைகளை சகித்திக்கொள்ள முடியாதவர்கள், சமூகப்போராளிகளாக தான்சார்ந்த சமூகத்தாலேயே உருவாக்கப்படுகின்றனர். சமூகத்தை வழிநடத்துபவர்களின் தவறான சுயநலப்போக்கே. அந்தச்சமூகத்தை காவல்காக்கும் ஒரு தலைமைக்காவலாளியை தற்செயலாக காலம் தெரிவுசெய்யக்காரணமாகிறது.
இப்படித்தான் பல தலைவர்கள் உருவாகியிருக்கின்றனர். இந்தவரிசையில் தமிழ்நாட்டின் தமிழர் தலைவனாக “செந்தமிழன் சீமான்” அவர்களை காலம் இனங்காட்டியிருக்கிறது.
செந்தமிழன் சீமான். இந்திய அரசின் பாசிசக்கொகையாலும். தமிழ்நாட்டை பங்குபோடும் திராவிடக்கட்சிகளின் பொறுப்பற்ற குடும்பக்கூட்டு ஆட்சிக்கொடுமையாலும். பாமரமக்களின் காவலனாக உயிர்காப்பானாக காலத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்.
படித்த ஒரு இளைஞனான நல்ல வருவாயுள்ள சீமான். சினிமாத்துறையில் சுயமாக சம்பாதித்து சொகுசாக வாழக்கூடிய அனைத்துத்தகுதியையும் களமும் கிடைக்கப்பெற்றிருந்தும். ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறையால் சீறும் சிறுத்தையாக மாற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டின் மீனவப்பெண்களின் தாலியறுப்புக்கும். உயிரழிவுக்கும். திராவிட முன்னேற்றக்கழக கருணாநிதியின் சுயநல ஊழல் ஆட்சியே பெருத்தகாரணமாகி. மீனவர்களை காலாகாலமாக தொடர்ந்து சொல்லொண்ணா துன்பத்தில் அமுக்கியிருக்கிறது. அத்துன்பத்தில் பங்குபோட்டு அராஜகத்தை தட்டிக்கேட்க முற்பட்டதன் விளைவு சீமான் இறையாண்மை மீறிவிட்டார் வன்முறையைத்தூண்டுகிறார் என்கிறது கருணாநிதியின் அரசு. கடலில் எவ்வளவுபேர் செத்தாலும் எவரும் வாய் திறக்கக்கூடாது என்கிறது தமிழ்நாட்டு சட்டம்.
கடைசியாக தமிழகக்கடலில் செல்லப்பன் என்கின்ற மீனவர் ஸ்ரீலங்கா கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு. பலமீனவர்கள் கொடுமையாகத்தாக்கப்பட்டபோதும். தேமேயென்றிருந்த கருணாநிதி அரசின் அசட்டையை பொறுக்க முடியாத சீமானின் நாம்தமிழர் இயக்கம். வீதிக்குவந்து போராட்டம் வலுப்பெற்றபோது நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்காகவும் சீமான் முன்னிலைப்பட்டு விடக்கூடா தென்பதற்காகவும் வன்முறையை தூண்டும்படி சீமான் பேசினார் என பொய்வழக்கு பதிவுசெய்து பிடியாணை பிறப்பித்துவிட்டு. தனது கட்சிக்காரர்களை ஸ்ரீலங்கா துணைத்தூதரகத்தின் முன் ஆற்பாட்டம் செய்ய அனுமதித்திருக்கிற்து,
சீமானும் அதைத்தானே ஆட்சியிலிருக்கும் கருணாநிதியிடம் நியாயம் கேட்கபோராடியிருந்தார், தமிழ்நாட்டிலிருக்கும் ஸ்ரீலங்காவின் தூதுவரை கூப்பிட்டழைத்து கண்டித்து விளக்கம் கேட்கவேண்டிய இடத்திலிருக்கும் தமிழ்நாடு அரசு தெருவில் நின்று கத்திவிட்டுத்திரும்பியிருக்கிறது. இதே ஆற்பாட்டத்தை மத்திய அரசுக்கெதிராக நடத்தியிருந்தாலும் நியாயமென்று கொள்ளலாம்.
தனது வாரிசுகளின் பதவிபற்றிய பேரம்பேச்சுக்களுக்கு டில்லி பயணம். அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்றபோது பாராளுமன்றத்தில் அழகிரியை தமிழில் பேச அனுமதிகேட்க டில்லி பயணம்போகும் கருணாநிதி. தமிழனின் படுகொலைகளுக்கு மத்திய அரசிடம் நேரடியாகப்போய் ஏன் பேசவில்லை என்று சீமான் கேட்டதில் என்னதப்பிருக்கிறது.
சீமான் கைது செய்யப்படுவதற்கு முன்பாக, கருணாநிதியின் விளக்கத்திற்காக சீமான் அவர்கள் எழுப்பிய ஐம்பதிற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு கருணாநிதியின் பதிலென்ன.
தனது குடும்பங்கள் சொற்கத்தில் வாழ்வதற்காக. சோனியாவுடன் கூட்டுச்சேர்ந்து சிங்கள ராஜபக்க்ஷவின் இராணுவத்தால் தினம்தினம் கடலில் கொல்லப்படும் தமிழகமீனவர்களை காப்பதற்கான எந்த அசைவுமில்லாமல். கருங்கல்லுப்போலிருக்கும் கருணாநிதி. எழுந்து நிற்கமுடியாத தன்தள்ளாவயதிலும் பதவியை விட்டுவிலகாமல் தனது பற்பலதாரத்து வாரிசுகளை முன்னிலைப்படுத்துவதற்காக சோனியாவின் கால்களில் விழுந்து கிடக்கிறார். வேறுவழியின்றி தமிழனுக்காக இனமானங்கொண்டு தனது சொகுசான சினிமா வாழ்க்கையை துறந்து. வீதியில்நின்று குரல் கொடுக்கும் சீமான் குற்றவாளி,
செத்துக்கொண்டிருக்கும் தமிழனுக்காக தானும் ஒன்றும்செய்யாமல் கடிதமெழுதிக்கொண்டிருப்பாராம், பதிலும் வராதாம், எவனும் தட்டிக்கேட்டுக்குரல் கொடுக்கவும் கூடாதாம், இதுவென்ன ஆட்சியா அராஜகமா மன்னராட்சியென்கிற நினைப்பா?
பதவிமோகத்தால். மக்களை பிச்சைக்காரர்களாக்கியது மட்டுமல்லாமல், கோமாளிகளாக்கப்பட்டு. ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளே திட்டமிட்டு மக்களை வீழ்த்தி கருணாநிதியின் குடும்பம்மட்டும் வாழ்ந்துவருகிறது. தமிழினத்தின் தன்னிகரில்லாத்தலைவன் தானே என வரிக்குவரி கூறிக்கொள்ளும் கபடதாரி கருணாநிதி. மானாட மயிலாட நிகழ்ச்சியையும் தொடங்கி. அரசாங்கக்கணக்கில் இலவச தொ”ல்”லைக்காட்சிப்பெட்டிகளையும் மக்களுக்கு கொடுத்து, சோம்பேறிகளாக்கி, தன் குடும்பமே பத்திற்கும் மேற்பட்ட தொ”ல்”லைக்காட்சி சனல்களையும்திறந்துவிட்டு பணம்பண்ணிக்கொண்டிருக்கிறது, கருணாநிதியின் இந்த நீண்டகால கயமைத்திட்டத்தை இனியாவது தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
ஜெயலலிதாவுக்கு மட்டும் பயப்படும் கருணாநிதி, மற்ற எவராக இருந்தாலும் ஜெயிலில்தள்ளிவிடுவது வழக்கம். ஜெயலலிதாவுக்கு மட்டும் மென்மையாக தானே கேள்வியுமெழுதி தானே பதிலும் எழுதிக்கொள்ளுவதுண்டு. ஏனென்றால் ஜெயலலிதாவின் நேரடியான கேள்விகளுக்கு கருணாநிதியால் பதில்சொல்ல முடிவதுமில்லை, மோதி ஏடாகூடமாக ஏதாவது பேசப்போய் கோர்டு கேஸ் என்றுபோய் தனது வண்டவாளம் வெளுத்துவிடும் என்பதற்காக, ஜெயலலிதா திரும்பத்திரும்ப ஏதாவது கேள்வியை கேட்டுக்குடைந்தால். பதிலாக, இத்தனையாம் ஆண்டு இந்தத்திகதியில் அம்மையாரும் இப்படித்தான் செய்தார் அதற்க்கு இது சரியாப்போச்சு என்றே கருணாநிதி பதில் அளிப்பதுண்டு. ஒரு அரசாங்கத்தை நடத்தும் தலைவன் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவன் எப்படி ஜெயலலிதவுக்கு பதிலளிக்கிறர் என்பதை வருங்காலங்களில் கவனித்துப்பாற்கலாம்.
இன்றைய திகதியில் இந்திய பணக்காரர் வரிசையில் 11ம் இடத்திலிருக்கும் கருணாநிதி குடும்பம்.1926 ம் ஆண்டு முத்துவேலு நாயக்கர் மூன்றுவயது தெட்சணாமூர்த்தி என்கிற கருணாநிதியுடன் ஆந்திராவிலிருந்து பஞ்சம்போக்க தமிழ்நாடு தஞ்சை திருவாரூரில் வந்து குடியேறியபோது, கையில் திருவோடும் இடுப்பில் கோவணமும்தான் இருக்க வாய்ப்பிருந்திருக்கிறது, இன்று உலகப்பணக்காரர் 40 பேர்களில் ஒருவராகவும் இந்தியாவில் 11வது பணக்காரராகவும் எப்படிப்பணம் வந்தது ,ஜெயலலிதாவாவது 100க்கு மேற்பட்ட படங்களில் முதன்மைக்கதாநாயகியாக நடித்து சம்பாதித்திருக்கிறார். ஜெயலலிதாமீது வருமானத்திற்கு மீறிய சொத்து வைத்திருப்பதாக ஏகப்பட்ட வழக்குப்போடும் கருணாநிதி தார்மீக அடிப்படையில் தனது வருமானத்தையும் சொத்து மதிப்பையும் சுயமாக மக்களுக்கு காட்டவேண்டிய பொறுப்பிருக்கிறதல்லவா.
ஜெயலலிதா பறந்தடித்து ஊழல்செய்து சொத்து வந்தவழி தெரியக்கூடியதாக நடந்துகொண்டார், கருணாநிதி மிகச்சாமர்த்தியமாக சட்டத்தின் கண்களில் தடையம் கிடைக்காவண்ணம் முன்னெச்சரிக்கையுடன். கட்சியையும் சொத்துக்களையும் ஆமைபோல அசையாமல் சேர்த்துக்கொண்டார்,
ஜெயலலிதா கூறி அறிக்கை விட்டார் என்பதற்காக அல்லாமல் நிறையவே நியாயம் இருப்பதால் ,27,04,2009 அன்று காலாற காற்று வாங்குவதற்காக கருணாநிதி கடற்கரையில் பொய்யாக உண்ணாவிரதமென அறிவித்து. யுத்தம் நிறுத்தப்பட்டுவிட்டதக ஈழத்தமிழர்களை ஏமாற்றியதால் மறுநாள் மக்கள் வெளியேவந்தபோது 2000,பேருக்கு மேல் கொல்லப்பட்டதாக கணக்கிருக்கிறது. ,இது நிச்சியமான போர்க்குற்றமாகும் எனவே கருணாநிதியின் கபட நாடகத்தின் பின் வந்த இரண்டு நாட்களிலும் கொல்லப்பட்ட மக்களின் தொகையையாவது சரியாகக்கணக்கிட்டு ,ஐநா விசாரணைக்குழுவிடம் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும், கருணாநிதி விசாரணைக்குட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுகிறாரோ இல்லையோ நிச்சியம் அவரும் போர்க்குற்றத்திற்கு உடந்தை என பதிவுசெய்யப்பட வேண்டும், கருணாநிதிக்கு ப சிதம்பரி. அல்லது பிரனாப் முகர்ஜி தவறான தகவல் கொடுத்திருந்தால் அவர்கள் விசாரணைக்கு முகங்கொடுக்கட்டும், தேசியத்தலைவர் கூறிய உண்மை இப்போ எல்லோருக்கும் புரிந்திருக்கும் எதிரியை விட துரோகி மிகவும் பயங்கரமானவன்,,,,,,,, சிங்களவன் தமிழனுக்கு எதிரி, கருணாநிதி தமிழினத்தின் துரோகி,
நன்றி: ஈழதேசம்
No comments:
Post a Comment