நோஸ்ராடாமஸ் நாளைய உலகம்... (விளங்க முடியாத புதிர்)
-------------------------------------------------------------------------------------------------நோஸ்ராடாமஸ் பற்றி பதிவுலகில் யாரும் பெரிதாக எழுதியதை என்னால் பார்க்க முடியவில்லை. பலர் சோதிடங்களை பற்றியும் குறிசொல்பவர்களை பற்றியும் எழுதியிருப்பினும், இவர்களுக்கெல்லாம் தலையான நோஸ்ராடாமஸ் பற்றி பெரிதாக ஒன்றும் எழுதவில்லை. அதனால், எனக்கு தெரிந்தவற்றை நான் எழுதலாம் என முடிவு செய்துள்ளேன். உங்கள் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
நோஸ்ராடாமஸ்....
1503 டிசம்பர் 14, பிரான்ஸின் வடக்கு பகுதியில் யூத தம்பதியினருக்கு பிறந்தார். (பின்னர், தந்தை கத்தோலிக்க மதத்துக்கு மாறினார்.) மருத்துவராக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். திடீரென பிரான்ஸ்ஸில் கொள்ளை நோய் பரவத்தொடங்கியது. ( என்ன நோய் என மறந்துவிட்டது.) மருத்துவராக இருந்து பலரை காப்பாத்திய நோஸ்ராடாமஸால் அவரது குடும்பத்தை காப்பாத்த முடியவில்லை. தனது மனைவி,பிள்ளைகளை இழந்தார். இவ்விழப்புகளுக்கு பிறகு ஒரு நாடோடியாக மாறினார். நாடோடியாக இருந்தவேளையில் ஒரு பாதிரியாரின் நட்பு கிடைத்தது. அவரிடம் சீடராக பணியாற்றிய காலப்பகுதியில் நோஸ்ராடாமஸின் மன நிலையில் பெரும் மாற்றங்கள் நிகழத்தொடங்கியது. தனியாக இருந்து நீண்ட நேரம் வானத்தை உற்று பாக்க தொடங்கினார். யாரையாவது பார்த்து எதாவது சொல்ல அது கச்சிதமாக நடந்தது.
நோஸ்ராடாமஸ் புகழ் பரவ ஆரம்பித்தது. கூடவே பிரச்சனைகளும். கத்தோலிக்க திருச்சபையின் பார்வையில் இவரின் ஆரூடங்கள் சாத்தானின் எச்சரிக்கைகளாக பட்டன. எனவே, நோஸ்ராடாமஸ் மீது திருச்சபையால் குற்றம் சுமத்தப்பட்டது. இப்பிரச்சனைகளால் நோஸ்ராடாமஸ் தலைமறைவானார்.
நோஸ்ராடாமஸ் தனது செய்யுள்களை குழப்பமான கவிதை வடிவில் எழுதியமைக்கும் இதுவே காரணம்.
(நோஸ்ராடாமஸ் மறுமணம் முடித்ததாகவும் கூறப்படுகிறது.)
நோஸ்ராடாமஸ் ஆரூடங்களை கணிக்கும் போது, சாதாரண ஜோதிட முறைகளுக்கு அப்பாற்பட்டு ophiuchus எனும் 13 இராசியையும் சேர்த்தே கணித்துள்ளார். அவரின் இக்கணிப்பிற்கு ஏதுவாக ஒரு பொறி இயந்திரத்தை கையாண்டுள்ளார். அதை பார்த்தவாறே தனது The centuries எனும் புகழ் பெற்ற ஆரூடத்தை எழுதினார். நோஸ்ராடாமஸ் தனது கையால் எழுதப்பட்ட உண்மையான புத்தகத்தில் படங்களையும் வரைந்திருந்தார். (வரைந்தமைக்கான குறிப்புக்கள் உள்ளன.)
சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள நோஸ்ராடாமஸின் புத்தகதில் வரையப்பட்டுள்ள படங்கள் இவர் நேரடியாக வரைந்தவையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இன்னோர் சாரார் அது அவரின் 2வது மணைவியின் மூலம் பிறந்த மகனை கொண்டு வரைந்தது என்கின்றனர்.
எது எப்படி இருந்தாலும் படங்கள் சொல்லவருவது நோஸ்ராடாமஸின் ஆரூடங்களை தான்.
படங்கள் தரப்பட்டுள்ளன.
படங்கள் சொல்லவரும் விடையங்களையும் மேலும் பல தகவல்களையும் வரும் பதிவுகளில் பார்க்கலாம். பிடித்திருந்தா வோட் போட்டு எழுத ஊக்கப்படுத்துங்க.
---------------------------------------------------------------------------------------------
You might also like:
No comments:
Post a Comment