Thursday, August 11, 2016

சாதி சங்கங்கள். ------------------------ கண்ணீர் விட்டுன்று - நீ கதறி அழுதாலும் மண்ணில் புரண்டொருகால் மலையை சுமந்தாலும் கல்மேல் தலை மோதி கட்டையிலே போனாலும் பொல்லாத சாதி "சங்கம்" புனையும் கதை அனைத்துயும் மெய்யென்று நீ நம்பி ஐயா உருகுவதேன் அடி வயிறு எரிவதுமேன் மெய் ஒன்று சொல்லுகிறேன் முடிந்தால் அறந் தொழுகு. சங்கங்கள் உனக்கொன்றும் தோள்கொடுக்க பிறந்ததில்லை பொங்கி கிடக்கும் உந்தன் நிந்தனையை தீர்ப்பதில்லை நஞ்சாய்பரவி விட்ட சாதிக்கு மருந்துமில்லை சங்கத்தின் மந்திரத்தால் - மாங்காய் விழுந்திடவும் போவதில்லை மெல்ல நிமிர்ந் தெழுந்து முப்பரவும் கல்வி கற்று பொல்லா உலகை நீ வெல்லப் பொருள் தேடு எல்லாம் அகன்றுவிடும் சாதி (சங்கங்கள்) தொலைந்துவிடும். கூனி குறுகி நீ கும்பிட்டு நின்றிடும் கால் சாதிப் பிணி பரவும் சங்கங்கள் அரசாளும் நாயிற் கடையாய் நீ நடுத்தெருவில் நிற்க வரும் நொண்டி தலைமைகளும் நுரை கொண்ட அரசியலும் கல்லில் நார் உரிப்பார் காற்றில் படம் எழுதி - பரி மேற்கில் உதிக்கும் என்பார் மண்ணாகும் உன் வாழ்வு மலிவாகும் மனித குலம். அரசியலில் பதவி சுகம் அடுக்கு மொழி மாய்மாலம் விடுகதையாய் வரலாறு வெட்டி வசன மழை உல்லாச வாழ் வவர்கு உன்பாடு மாற்றமில்லை மிஞ்சி மிஞ்சி போனால் - நீ கஞ்சிக்கும் வழியின்றி கட்டையிலே போகும்வரை சங்கம் தழைத்தோங்கும் - நீ செத்து தொலைந்தாலும் உன்னை சுட்டெரிக்ககூட சுடுகாட்டில் தொல்லை வரும். வீர தலைவனென்றும் விண் உயர்ந்த சாமியென்றும் ஆசைக்கு வேண்டுமென்றால் அன்பாய் அழைத்திடுகாண் அடை மொழியும் சேர்த்திடலாம் சங்கம் பெரிதென்று - நீ சன்னதம் ஆடுங்கால் நிம்மதியாய் சாகவிடா நிலையில்லா அமைதி கெடும் பொல்லா வினையெல்லாம் புது விதமாய் வந்திணையும் செல்லா காசாகி சீரழிவுதான் மிஞ்சும் கல்லால் அடித்து கொல்லாத குறையாக கணக்கின்றி பெண்களெல்லாம் கற்பழித்து கொலை நிகழும். கொள்ளியில் எண்ணெய் ஊற்றி குறியெல்லாம் சுயநலமாய் வல்லானாய் தலைவன் வாழ வாடினாய் உருக்குலைந்து கோவிலில் கலகம் கண்டாய் குடும்பமாய் வெளியே நின்றாய் சுடுகாடு உனக்கு இல்லை சொம்பிலே தண்ணி இல்லை கடையிலும் தேனீர் இல்லை காலுக்கு செருப்புமில்லை கடை நிலை வாழ்வுனக்கு கல்வியை கற்று ஓங்கு கலைகளை பயின்று மேவு வல்லமை எல்லாம் கூடும் வாழ்க்கையே சொர்க்கமாகும். மடை நீரில் நுரையாயானாய் மாம்பழத்து வண்டாய் வாழ்ந்தாய் காலத்தின் தடத்தில் வீணே கறுப்பாக பதிவு கொண்டாய் சாவது ஒரு நாள் கண்டோம் சரித்திரம் உண்மை என்பேன் நாயிலும் கடையாய் மண்ணில் வாழ்ந்திட வேண்டாம் என்றேன் மடியினில் பொருள் இருந்தால் மன்னனே நீதான் என்பேன் அறிவுறு கல்வி கற்றால் அரசனும் நீதான் என்பேன் சங்கத்தை தூக்கி வீசு சகலமும் நீயாய் மாறு. ரோகித் வெமூலா மாண்டான் குஜராத்தின் கொடுமை கேட்டோம் கலைச்செல்வி கோலம் கண்டோம் சுவாதியின் கொலையில் கூட சங்கங்கள் தலையீடாச்சு இவை ஒரு தர்மம்தானோ கண்மூடி தூங்கலாமோ இனி வரும் எதிர்காலத்தில் என்னதான் நடக்காதென்பாய் பிரிவினை கருவூலங்கள் - சாதி சங்கமாய் உதிக்குதென்பேன் வறுமையை உரமாய் கொண்டு வளர்திடும் சூழ்ச்சி என்பேன். முடி வெட்டும் வழியில் வந்த முத்துவேல் கருணா இன்று உலகத்து முதல்வனாக உன் முன்னே வாழ கண்டோம் கடை நிலை வகுப்பில் வந்த நடிகனாம் ரஜனி இன்று கும்பிடும் தெய்வம்போல கோவிலாய் மின்ன கண்டோம் இசை வழி உயர்வு கண்டார் இசைஞானி இளையராஜா சாதிக்கு சங்கம் வேண்டாம் சாத்தியம் உழைப்பே என்பேன். கல்லும் கடல் வானும் புல்லும் மர நிழலும் புதிய விஞ்ஞானிகளும் மெல்ல மெல்ல புதுயுகமாய் எல்லாமே மாறகண்டோம் இல்லானாய் எளியவனாய் இப்புவியில் நீ பிறந்ததனால் பசுதோலே எமனாய் மாறி பாவி நாம் அழியக்கண்டோம் இல்லாத ஊருக்கு இரும்புப் பாலம் தேவையில்லை நல்ல கல்வி நீ பயின்று நாலுபேர்போல் பொருள் கறந்து வல்லானை வெல்ல வழி நூறு தெரிகிறது. முற்சந்திக் ஒரு சங்கம் மூன்று பேருக்கொரு கட்சி கொள்கையற்ற பெருங்கோசம் குறியில்லா வழிகாட்டல் சப்பாணி தலைவரிடம் சமரசம் கொண்டொரு பொழுது குட்டி விரட்டிவிட்டால் கரம் கூப்பி மறு வாசல் காட்டான் போல் விலங்குகள்போல் கன மழையில் குமிழிகள்போல் நோக்கமற்ற இழி வாழ்வு நிதர்சனமோ கனவுகளாய். நேர்மையற்ற வெறும் பேச்சு நெறியில்லா கொள்கை வெறி கேழ்விக்கும் பதிலுக்கும் கிட்டாத விஷ ஞானம் சாதிக்கொரு கொள்ளை சாவிலும் குளிர் காய்தல் அக்காளும் தங்கைகளும் வெட்டி படுகொலைகள் பின்னணியில் யாரென்றால் சங்கங்கள் தலைமறைவு பொல்லாத பூமியிலே புரையோடும் அரசியல்காண். கண்மூடி வாய் பொத்தி கபடம்செய் அரசியலை சன்னியாசி தாடிக்குள் விளைந்த காளான் போல் விஞ்ஞான காலத்தில் வீணான சாதிவெறி மூங்கில் போல் தலை விரித்து மெல்ல படர்ந் தறுகாய் மேவி அடம்பிடிக்கும் கல்லுக்குள் நீர்போல காற்றிடையே அணுப்போல உன்னிடையே ஊடுருவி - உனை உறங்க விடப்போவதில்லை. சாதியை உரமாய்க்கொண்டு சங்கங்கள் பிறக்கக் காண்பாய் சாகச வார்த்தை எல்லாம் சரளமாய் தருவார் கேட்பாய் இல்லாத சாதி எல்லாம் இருப்பதாய் எடுத்துரைப்பர் சங்கங்கள் உன்மேல் ஏற தந்தரம் செய்வார் காண்பாய் உயிருக்கு உயிர் தாமென்பர் உணர்ச்சியாய் முறுக்கி நிற்பர் கடைசியில் நீ செத்தாலும் கலகத்தை கூட்டி போவர். தலித்துக்கு உரிமம் என்பர் சாதிக்கு மீட்சி என்பர் - நீ வாழ்ந்திடும் நாளில் சங்கம் வீழ்ந்திடா விருட்சம் என்பர் உணவில் சாதி என்பர் அணுவிலும் சாதி என்பர் அகம் புறம் அனைத்தும் தீர அற்புதம் சங்கம் என்பர் அப்பாவி மனிதா நீயும் அம்பாகி அழிந்தாய் கண்டோம் துச்சமாய் தூக்கி வீசு சுகமான வழியை தேடு. நிலவினில் கால் பதித்தான் நீடுலகை அளந்துவிட்டான் உள்ளங்கை நேர்கோட்டில் உலகையே சுருக்கிவிட்டான் அலைபேசி அகமாய் கண்டான் அனைத்துமே சித்தமென்றான் மனிதா நீ சாதிக்குள் மண்ணாகி போவதுமேன் அதர்மம் தலைக் குவந்து அன்றொருவன் செய்த வினை சீழாய் மலக்கழிவாய் சிறுமையுடன் வாழாதே. கருவில் உருவாகி கட்டைவரை பின்தொடரும் கோவில் திருவிழாவில் குடிநீர் பகிர்வுகளில் சாலை பள்ளிகளில் சனம் கூடும் நிகழ்வுகளில் காவலன் போல் நின்று காவு கொள்ள காத்திருக்கும். சாதிக்கு சமாதி கட்ட சங்கத்தை வெறுத்தால் உண்டு. நேருக்கு நேர் எதிராய் நிற வெறியை மிஞ்சி நிற்கும் சாதி தரித்திரத்தை சங்காரம் செய்திடுவாய் தூக்கி அதை நீ சுமந்தால் துன்பமே இல்லை வேறு தருணத்தில் குழி பறிக்கும் சாவுக்கும் நாள் குறிக்கும், பூவிலே உள்ள வாசம் புலையாக மாறக்காண்பாய் நேசமும் பகையாய் மாறும் நிலை தடுமாறிப்போகும் ஆணவக்கொலைகள் கூட ஆணொடு பெண்ணும் சாவாள் வீடுகள் எரிந்து சாம்பல் விண்முட்ட ஓலம் கேட்கும் நாடு விட்டு வெளியே போனால் நாய்ச் சாதி வருவதில்லை தெருவோடு தங்கி நிற்கும் திண்ணையில் படுத்துறங்கும் திரும்பி நீ வந்தபோது குறும்போடு உன்னை சேரும் வாழ்க்கையின் பாதி நாளை வலியோடு வருந்த வைக்கும் சாதியை நீ மதித்தால் தரை மட்டமாகும் வாழ்வு யாருமே மதிக்கமாட்டார் நாயியிலும் கடையனாவாய் நேர்கொண்டு நிமிராவிட்டால் நிச்சியம் மண்தான் நீயும் பூமியில் பிறப்போர் எல்லாம் பொதுவாக மனிதர்தானே. கடையினில் குவளை ரண்டு குடித்திடும் தேனீர் ஒன்று மதுக்கடை சென்றாய் என்றால் ஒத்தையி குடிக்க கண்டோம் கிணத்தினில் தண்ணீர் கொண்டால் குற்றமாய் காணும் சாதி - நெல் வயலினில் சிறுநீர் விட்டு வாய்க்காலி குளித்தபோது உழைப்பினை உறிஞ்சும் நோக்கில் ஊமையாய் நிற்கும் சாதி. சங்கங்கள் அமைத்து சாதி சமத்துவம் செய்வோமென்று அங்கங்கே கட்சியாகி அரசியல் செய்யக்கண்டோம் சங்கத்தின் தலைவர் எல்லாம் சுந்தரமாக மாறி - உனை துன்பத்தின் குறியீடாக்கி சுகமாக வாழக் கண்டாய். சாவீட்டில் சாதி என்றார் சமாதியில் பிழையும் கண்டார் பள்ளியில் பிரிவு என்றார் - நடை பாதையில் வகுப்பு என்றார் கோவிலில் திருவிழாவில் கொடும்பகை மூட்டி வைத்தார் காதலில் திருமணத்தில் காவலாய் நிற்போம் என்றார் தேர்தலின் போது சங்கம் திசை மாறி போகக்கண்டாய். - ஊர்க்குருவி-

Tuesday, July 26, 2016

VIP. --------------------------------------------------------------------------- சுபாஸ் சந்திரபோஸ். ................... இந்திய சுதந்திரத்துக்கு உணர்வு பூர்வமாக போராடிய மாவீரன் ஆங்கிலேயருக்கு எதிராக பெருத்த இராணுவத்தை கட்டி எழுப்பி ஆயுத போராட்டத்தை நிறுவியவர் ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து இராசதந்திர நட்பில் இருந்தவர் முக்கியமான ஒரு தருணத்தில் காணாமல் போனவர் இருந்தும் மக்கள் மனங்களில் மலைபோல் உயர்ந்து நிற்கிறார். ---------------------------------- மோகன்லால் கரம்சந்த் காந்தி. .................... லண்டனில் சட்டம் படித்தவர் ஆங்கிலேயர் தனது நட்பு வட்டம் என்று போற்றியவர் பிடிவாதக்காரர். அகிம்சைவாதி என்று உள்ளூரில் முழங்கிக்கொண்டு இரண்டாம் உலகப்போருக்கு ஆபிரிக்காவில் வெள்ளையருக்கு ஆள் திரட்டி கொடுத்தவர் எழுபது வயதினிலும் பதின்ம வயது பெண்களை நிர்வாணமாக்கி தன்னோடு படுக்க வைத்தவர் நேதாஜியை இருட்டடிப்பு செய்வதற்காக இங்கிலாந்து மூலம் முதன்மை படுத்தப்பட்டு தேசபிதா ஆனவர்...,.. ---------------------------------------- வ உ சிதம்பரம்பிள்ளை. ....................... வசதியான குடும்பத்தில் பிறந்தவர் பச்சை தண்ணீர் போன்ற குணம் படைத்தவர். வெள்ளையரின் ஏஜண்டான பார்ப்பன சதியை உணராமல் மூர்க்கமாக முழு நாளும் சுதந்திரத்துக்கு போராடியவர். சொத்துக்களை விற்று கப்பல் கட்டி வரலாறு படைத்தவர் வஞ்சகத்தின் வக்கிரத்தால் அந்தமானில் சிறை பறவையானார் செக்கிழுத்தார் சிதிலமாகி செத்து மடிந்தார்.......... ------------------------ எம் ஜீ ஆர். தமிழகத்தின் புரட்சி தலைவன் தமிழ் சினிமாவின் ஒற்றை சூரியன் சிறின்ப சிருங்காரன் மலருக்கு மலர் தாவி மன்மதன்போல் வாழ்ந்தாலும் மறுபக்கம் கொடை வள்ளல். இன்றைக்கும் இவர்தான் சினிமாவின் சுப்பஸ்ரார். மக்கள் திலகமாக மனங்கவர் தலைவனாக தீய சக்தி கருணாவின் -முக திரை கிழித்த பேராசான். என்றைக்கும் இறவாத ஒப்பற்ற ஒளிக்கீற்று...... ------------------------- கவியரசு கண்ணதாசன். பிறந்தார் வறுமையுடன் பெற்றோரால் விலைபோனார். பெருங்கவியாய் புகழடைந்தார் மழைபோல் படைப் பியன்றார் மனம்போல் உணவெடுத்தார் மங்கை மது சங்கமமித்து சுந்தரமாய் களிப்படைந்தார். கவியரசாய் கவிப்பேரரசாய் காலத்தால் அழியாத காவியமாய் இன்றும் கல்வெட்டாய் வாழுகின்றார்........ ------------------------- காமராசர். அப்பழுக்கில்லாத ஆழ்கடலின் முத்து இவர், கறுப்பு வைரம் அவர் காமராசர் எனக்கண்டோம். படிக்காத மேதை பள்ளி சாலைகளை படைத்துவிட்ட விடிவெள்ளி. கருணா குழுமத்தின் திராவிட சதி மோத இதயம் உடைந்துருகி அவர் இறந்த வரலாறு, மக்கள் மனங்களில் தீ சுட்ட புண்னாக தீய்ந்து கிடக்கிறது. நேற்றல்ல இன்றும் நாளை மறுநாளும் நீக்கமற நெஞ்சில் வாழுகின்ற சுத்த தமிழ் வித்து கர்ம வீரன் காமராஜர். ----------------------------- பாரதிதாசன். தமிழை அமிழ்தென்றார் தமிழே உயிரென்றார், தலை போய் தொலைந்தாலும் தான் மறவேன் தமிழ் என்றார். முறை தவறி தமிழ் வளர்த்தால் முகத்தினில் அறை என்றார். பாரதியின் தாக்கத்தில் பக்தியுடன் கவி புனைந்தார் கனக சுப்பு பெயர் மாறி பாரதிதாசன் என பண் தமிழில் நாம் கண்டோம். ----------------------------- கருணாநிதி. திருட்டு ரயிலேறி திராவிடத்தில் இடம் பிடித்தார். அண்ணாவும் பெரியாரும் அகராதி என்றவுழ்த்து விட்டார். மூன்று மணம் புரிந்தார் முப்பது பேரை வைத்திருந்தார். காகம்போல் கரகரத்தார் கடைசிவரை பொய்யுரைத்தார். ஊழல் பொய் வாழ்வாகி உலை மூடி போல் வாழ்ந்தார் நாச படுகொலைக்கு நடு நாயகமாய் அடுப்பெரித்தார். சாகும் வயதினிலும் சகுனிபோல் தான் வாழ்ந்தார். தட்சணாமூர்த்தி என்றும் கருணா நிதியென்றும் வடமொழியில் பெயரமைத்து தமிழன் தீராத சிறுமைபட திக்கெட்டும் பழியானார். ----------------------------- அட்டை கத்தி ரஜனிகாந்த். ------------------------------ மராட்டியில் கருவாகி, கன்னட மானிலத்தில் அவதரித்தார் முறுக்கு தெறித்தாற்போல் முப்பொருளில் வசனமிட்டார் வறுமை தமிழினத்தின் உழைப்பு அனைத்தையுமே தன் பொருளாய் காவுகொண்டார். படத்துக்கு படம் பஞ்சு டயலாக்கு பறக்கவிட்டார் கவுத்து மடி நிறைத்தார் காரியத்தில் குறியானார். பச்சோந்தி என்ற பெயர் மொத்த பொருந்தி நின்றார். மொட்டை தலையாகி முகமெல்லாம் புலையாகி நிச்சியமில்லாத நடு இரவு சாமத்தில் செல்லா காசு இவரை கல்லாக நட்டு கபாலி என்று பெயருமிட்டு இல்லாத ஊருக்கு வழிகாட்டும் ஊடகங்கள். நெருப்பென்றார் பருப்பென்றார் கபாலி ஓய்ந்தவுடன் காணாமல் போய்விடுவார். -ஊர்க்குருவி-