கார்த்திகை இருபத்தியேழு,
நெஞ்சில்
கனல் கக்கும் இறுக்கமான பொழுது.
நாற்பதாயிரம்
அக்கினிக்குஞ்சுகளின்-விதை
வீரங்கொண்ட சரித்திர தினம்.

ஆற்று வெள்ளம் போலவும் -கடல்
ஆற்பரிக்கும் அலையெனவும்
காற்றுப்போலவும் -கனலென
களங்கண்ட வேங்கைகளின்
காலடியை தரிசிக்கும் கடும் பொழுது.

நேற்றைய உங்கள் இருப்பு
நெஞ்சுத்துணிவோடு
நாங்கள் உறங்கிய பொழுதுகள்
ஆற்பரிக்கும் அந்த நினைவுகளை
போற்றும் புண்ணிய நாள்.

வெற்றிடமில்லாத வீரத்தோடு
கனல் கக்கிய -உங்களின்
கலன்களின் சத்தம்
உறக்கமில்லா பொழுதுகளாக
இடியென காதில் இறங்கினாலும்.
உங்கள் இருப்புக்கான
அறிகுறியென்ற மமதை
என்னுள் துள்ளி விளையாடி
செருக்கெடுத்த நேரம்.

இன்றய அமைதி
சாவுக்கும் சரி நிகராக
ஆனாலும்
ஆதார சுருதியாக -நீங்கள்
இட்டுச்சென்ற இலக்கும்
தலைவன் கொண்ட நோக்கும்
பட்டுப்போகவில்லை
பசுமரத்தாணியாக -என்
நெற்றிப்பொட்டில்
நிமிர்ந்திருக்கிறது,

இன்று எங்கள் சொந்த மண்
பாலை வனமாக,, தரிசாக
நரிகளும் கோட்டான்களும்
நர்த்தனமாடினாலும்
நீங்கள் விதைக்கப்பட்ட மண்
உங்கள் நோக்கம் போல -அங்கே
புதைக்கப்பட்டிருக்கிறது.

ஈரேழு யுகங்கள் சென்றாலும்
விதைக்கப்பட்ட அக்கினி விதைகள்
விருட்சமாகும்
தலைவைனின் சத்தியம் ஜெயிக்கும்
சந்ததி அழியும் வரை-வீர
சரித்திரம் தொடரும்.

இன்றய பொழுதில்
இதயத்தாமரைகளான உங்களை
இறைஞ்சி எழுச்சியுடன்
வணங்குகிறோம்,
மாண்புடன் மாவீரர்களை தொழுது
தலைவனுடன் சபதமெடுத்துக்கொள்வோம்.
சாவிலும் வாழ்வோம் சரித்திரம் படைப்போம்.
-------------------------------------------------------------------------------
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.

அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் -அதை
அங்குள்ளோர் காட்டினில் பொந்தினிலிட்டேன்
வெந்து தணிந்தது காடு -கனல்
வீரத்தில் பிஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ,
"பாரதி"

கனகதரன்,

நன்றி ஈழதேசம் இணையம்.