முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ், 1991 ல் தமிழ்நாட்டில் வைத்து இனந்தெரியாத சிலரால் குண்டு வைத்து கொலை செய்யப்பட்டார். அது ஒரு திட்டமிட்ட கொலை என்றும், துன்பியல் நிகழ்வு என்றும் கவலையுடன் நினைவு கூரப்பட்டது.
1987ல் ராஜீவ் ஜெயவர்த்தன ஒப்பந்தத்தையடுத்து அமைதிப்படை என்ற பெயரில்
தமிழீழத்தில் தரையிறக்கப்பட்ட இராணுவம் கண்மூடித்தனமாக பல ஈழத்தமிழர்களை
கொன்று குவித்தது, பல பெண்களை பலாத்காரம்செய்து கற்பழித்து கொலைசெய்தது.
அதனால் ஈழத்து மக்கள் இந்தியாவின்மீதும் இந்திய இராணுவத்தின் மீதும்
குறிப்பாக ராஜீவ் மீதும் கடும் கோபமடைந்தனர். விடுதலைப்புலிகள் இயக்கம்
முடிந்தவரை தமிழர்களை காத்து காப்பரணாக நின்று இந்திய இராணுவத்தை எதிர்த்து
போராடியது அது வரலாறு,
1990ல் இந்திய இராணுவம் மீட்டெடுக்கமுடியாத கறையுடன் தோல்வியை தழுவி ஈழத்திலிருந்து வெளியேற்றப்பட்டது.
இந்திய இராணுவம் வெளியேற்றப்பட்டாலும், அப்போதய இந்திய பிரதமர்
ராஜீவ், ஈழத்தமிழினத்தின் காவலர்களாக இருந்த விடுதலைப்புலிகளை
அழிப்பதற்கான நாசகார அரசியலில் ஈடுபட்டார். அதனால் விடுதலைப்புலிகள்
இந்தியாவில் வைத்து ராஜீவை 1991ல் படுகொலை செய்தனர் என்று காங்கிரஸ்
காரர்களால் கூறப்படுகிறது.
அரசியற் செல்வாக்குள்ள பல பெருங் கைகள் ராஜீவ் கொலையில் பங்களித்ததாக
அதிர்ச்சிகரமான தகவல்கள், முறைப்பாடுகளாகவும் புத்தகங்களாகவும்,
சாட்சியங்களாகவும், பல ஆவணங்கள் தொடர்ச்சியாக இன்றுவரை வழி மொழிகின்றன.
இன்றையவரை ராஜீவ் கொலை எவரால் நிகழ்த்தப்பட்டது என்பதற்கு பூர்வாங்க
விசாரணைகள் மூலம் அறுதிப்படுத்தப்பட்ட ஆதாரம் இல்லை.
ராஜீவ் கொலையில் முற்று முழுதான அரசியற் தலையீடு இருப்பதால்,
காங்கிரஸின் திட்டமிட்ட ஒருவழிப்பாதையால் வழக்கு கொண்டுசெல்லப்பட்டது. அதை
நியாயப்படுத்துவதற்கு காங்கிரஸ் அரசின் உயர்மட்ட அதிகாரிகள்
பெருமுயற்சியுடன் இன்றுவரை வேலைசெய்து வருகின்றனர்.
ராஜீவை கொல்லுவதற்கு நேரடியாக முயற்சித்தவர்கள் என்று கூறப்படும் தனு,
மற்றும் ஒற்றைக்கண் சிவராசன் போன்றோர் அப்போதே மரணமாகிவிட்டனர். சந்தேக
நபர்களான இன்னும் சிலர் ஏற்கெனவே இறந்துவிட்டனர்.
சந்தேகம் என்ற பேயரில் கைது செய்யப்பட்டு சித்திரவதை மற்றும் அச்சுறுத்தி வாக்குமூலம் பெறப்பட்ட சிலரே இன்று உயிருடன் இருக்கின்றனர்.
ராஜீவ் கொல்லப்பட்ட வழக்கு முற்று முழுதாக அரசியல்க்கப்பட்டு 23 வருடங்களாக முடிவில்லாமல் இழுபறியில் இருந்து வருகிறது.
குற்றவாளிகள் என வாக்குமூலம் பெறப்பட்ட முருகன், மற்றும் சாந்தன்,
பேரறிவாளன், ஆகியோருக்கு அரசியல்த் தலையீட்டின் பின்னணியில் தூக்கு தண்டனை
விதிக்கப்பட்டிருந்தது. மற்றும் தொடர்புடையவர்கள் என சித்தரிக்கப்பட்ட ,
முருகன் மனைவி நளினி, ரவிச்சந்திரன், றொபேர்ட் பயஸ், மற்றும் ஜெயக்குமார்
ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஏழு பேரும், 1991
முதல், வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும்,
ஜனாதிபதியிடம் கருணை காட்டும்படி கேட்டு மனுச்செய்திருந்தனர். அரசியற்
தலையீட்டினால் கருணைமனு பதினொரு வருடங்கள் கவனிப்பாரற்று
உதாசீனப்படுத்தப்பட்டது.
ஆயுள்தண்டனை என்பதே பதினெட்டு, இருபது வருடங்கள்தான் என்று
சொல்லப்படுகிறது, ஆனால் கருணை கோரிக்கைகாரர்களால் அனுப்பி வைக்கப்பட்ட
கருணை மனு அரைவாசிக்கும் மேலான ஆயுட் தண்டனை காலம்வரை அரசியற்
தலையீட்டினால் வனவாசம் செய்யப்பட்டது. கருணை மனுவுக்கு முந்திய காலம்வரை
கணக்கிடும்போது ஒவ்வொருவரும் பூரணமான ஆயுட்கால தண்டனையை ஏற்கெனவே
அனுபவித்து இந்திய சட்டத்தில் இடமில்லாதவாறு சட்டத்துக்கு புறம்பாக
உதிரியான காலத்தில் சிறைக்குள் இருந்துவருகின்றனர்.
பதினொரு வருடங்கள் ஜனாதிபதி முடிவெடுக்க காலதாமதம் ஆனதால் தங்களை
விடுவிக்க வேண்டும் என கைதிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2014 பிப்ரவரி 18ல், தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
ஆயுள்தண்டனை என்பதே பதின்எட்டு முதல் இருபது வருடகாலம்தான் என்பதால்
கைதிகள் ஏற்கெனவே இருபத்து மூன்று ஆண்டுகளை சிறையில் தண்டனை
அனுபவித்துவிட்டதால் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி கைதிகளை ஆட்சி
செய்யும் அரசு முடிவெடுக்கலாம் என்று அந்த தீர்ப்பு விதந்துரைத்தது.
கைதிகளை நிர்வகிக்கும் பொறுப்பு தமிழக அரசே என்பதால் கைதிகள் பற்றிய முடிவை
செய்யவேண்டிய தகுதி தமிழக அரசுக்கு இருப்பதாக உச்ச நீதிமன்ற சட்டவாளர்கள்
ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுகின்றனர்.
அந்த தீர்ப்பின் பிரகாரம் பிப்ரவரி 19ல், ஜெயலலிதா தலைமையில் கூடிய
தமிழக சட்டசபை கூட்டத்தில், அந்த மூவரின் ஆயுள் தண்டனை மற்றும் அந்த
வழக்கில் தொடர்புடைய நால்வரின் ஆயுள் தண்டனையையும் ரத்து செய்வதாக
தமிழ்நாடு அரசு சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது குறித்து
பதிலளிக்குமாறு, மத்திய அரசுக்கு, தமிழக சட்டசபை கடிதம் அனுப்பியது.
ஆனால், மத்தியில் ஆளும் சோனியா தலைமையினாலான காங்கிரஸ் அரசு இந்த
விவகாரத்தை அரசியற் தலையீட்டிலிருந்து விடத் தயாராக இல்லை. காங்கிரசை
சேர்ந்தவர்கள் ராஜிவை கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின்
முடிவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தது. அதில், மத்திய
அரசு சட்டங்களின் படி தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யும்
அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது என விதண்டாவாதமாக வாதிக்கப்பட்டது.
இதையடுத்து அரசியற் தலையீட்டை மீறமுடியாத உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
பெப்ரவரி 20ல், தடை உத்தரவு பிறப்பித்து சுப்ரீம் கோர்ட், கைதிகள் ஏழு
பேரையும் விடுவிக்க தடை விதித்தது. அதை தமிழக அரசு எதிர்த்தது. இந்த
வழக்கில் நேற்று 25 ஏப் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என,
எதிர்பார்க்கப்பட்டது.
நியாயப்படி கைதிகளுக்கு சாதகமாக சூழ்நிலை இருப்பதாகவே உச்சநிலையில்
இருக்கும் சட்டம் தெரிந்தவர்களும் அவதானிகளும் கருத்து தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்ற நீதியரசர் சதாசிவமும் அப்படி ஒரு முடிவில் இருந்ததாகவே நம்பப்பட்டது.
இம்மாதம் 25ம் திகதிக்கு முன் தீர்ப்பு வெளியிடப்படும் என இருந்த
நிலையில், இம்மாதம் ஓய்வுபெற இருக்கும் நீதிபதி சதாசிவம் தனது ஓய்வின்
பின் லோக்பால் அமைப்பின் தலைவராகவோ, மாநில ஆளுனராகவோ ஆகவேண்டும் என்ற சுயநல
பேரவாவை மனதில்க்கொண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவை மகிழ்விக்கும் நோக்குடன்
கோவையில் நடந்த ஒரு விழாவின்போது ஏழுபேர்களின் தீர்ப்பு 25ம் திகதிக்குமுன்
வெளிவரும் என்று ஆர்வக்கோளாறின் நிமித்தம் விழாவின்போது கூறியிருந்தார்.
அதிமுக தலைவி ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழ்க் கைதிகள்
விடுவிக்கப்பட்டால் அதல பாதாளத்தில் வீழ்ச்சியில் இருக்கும் கருணாநிதி தனது
கட்சியும் குடும்பமும் அரசியல் அனாதை ஆகிவிடுவோம் என்பதை அறிந்து தனது
வழமையான தந்திரத்தை பாவித்து நச்சுத்தனமாக குத்திவிடும் வேலையை கருணாநிதி
என்ற பதர் கீழ்க்கண்டவாறு செய்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையிலே உள்ள சாந்தன்,
முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்று,
தமிழகத்திலே உள்ள பல கட்சிகளும் நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்து
வருவதும், அதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது உச்ச நீதிமன்றத்
தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அவர்களை
விடுவிக்க முடியும் என்ற கருத்தினை அறிவித்து -அதனையொட்டி தமிழக அரசும்
சட்ட விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றாமல் அவசர அவசரமாக மேற்கொண்ட
நடவடிக்கையில், அதற்கு மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் ஒப்புதல் தர
வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருந்தார். மத்திய அரசு
அதற்கு ஒப்புதல் வழங்காததோடு, தமிழக அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று
உச்ச நீதிமன்றத்திலேயே ஒரு மனுவினைத் தாக்கல் செய்து, அந்த வழக்கின்
தீர்ப்பினைத் தான், நேற்றையதினம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம்
அவர்கள் வரும் 25ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று கோவையில்
நடைபெற்ற ஒரு விழாவிலே வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.
நீதி மன்றத்திலே அல்ல. சதாசிவம் அவர்கள் கோவையிலே நடைபெற்ற ஒரு
விழாவில், “விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்’’ என்று தெரிவித்து, அந்தச்
செய்தி எல்லா நாளேடுகளிலும் வெளி வந்துள்ளது.
வரும் 24ஆம் தேதியன்று நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ள
சூழ்நிலையில், நீதியரசர் சதாசிவம் அவர்கள் தான் ஓய்வு பெறவுள்ள இந்த நேரம்
பார்த்து, 25ஆம் தேதிக்குள் ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும்
என்று கூறியிருப்பது அரசியல் ரீதியான விளைவினை தமிழகத்திலே ஏற்படுத்துமோ
என்ற ஐயம் பலருக்கும் எழுந்துள்ளதோடு, வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும்
சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பு – நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்
நடைபெறுவதற்கு முன்பு வரும் என்று, உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதியே ஒரு
பொது விழாவிலே அறிவித்திருப்பது எத்தகைய சாதக பாதகங்களை ஏற்படுத்தக்கூடும்
என்பதையும், அந்த அறிவிப்பு நீதிமன்ற மரபுகளுக்கு உகந்தது தானா என்பதையும்
எண்ணிப் பார்த்து, அதற்கேற்ப முடிவு செய்வது நீதி மன்ற நெறிகளைக்
காப்பாற்றப் பயன்படும் என்பதுடன் அனைவருக்கும் நலன் பயக்கும் என்றும்
தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு நீதிபதி. அவர்தான் தீர்ப்புக் கூறவேண்டியவர் அவர்தான் சதாசிவம். சதாசிவத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியும்.
நான் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க மாட்டேன்!!. சதாசிவம்
எனக்கெல்லாம் தெரிந்த நண்பர்தான்?. அவர் ஒரு முக்கியமான இடையிலே
விடுபட்டுப் போன – நடக்காது, என்ன ஆகுமோ தெரியாது என்ற அளவிற்கு
தத்தளித்துக் கொண்டிருக்கின்ற ஒரு தீர்ப்பைப் பற்றி நீதிபதியே நாளைக்கு
நீதிமன்றத்திலே அமர்ந்து; ஜட்ஜ்மெண்ட் சொல்ல வேண்டிய ஒரு நீதிபதியே அதைப்
பற்றி வெளியிலே உறுதி அளிப்பாரானால், இது நல்ல விஷயமா? அல்லது திசை
திருப்பக் கூடிய ஒரு விஷயமா? அந்தத் திட்டத்தினால் தங்களுக்கு ஏதாவது
கிடைக்காதா என்று எதிர்பார்ப்பவர்களுக்கு நன்மை செய்வதற்காக, அவர்களுக்கு
உதவி செய்வதற்காக செய்யப்பட்ட காரியமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
நான் பொதுமக்களைக் கேட்டுக் கொள்ளவில்லை. விஷயம் தெரிந்த, சட்டம் படித்த
சட்ட வல்லுனர்கள், வக்கீல்கள், நீதிபதிகள் அல்லது நீதிமுறைகளை உணர்ந்தோர்
அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.திரு. சதாசிவம் அவர்கள் எனக்கும்
வேண்டியவர்தான். தெரிந்தவர்தான். ஆனால் சமீப காலமாக அவருடைய போக்கு இப்படி
மாறியிருக்கிறதோ என்ற சந்தேகம் வழக்கறிஞர்கள் மத்தியில் தோன்றுகின்ற
அளவுக்கு ஏன் நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. எப்படி ஒரு மூத்த
ஜட்ஜாக அமர்ந்திருக்கின்ற ஒருவர், தான் சொல்லப் போகும் தீர்ப்பைப் பற்றி
வெளிப்படையாக இந்தத் தேதிக்குள் தீர்ப்பு வெளி வரும் என்று சொல்லுகிறார்
என்றால், அது எங்கே போய் முடியும் என்பதை தயவு செய்து நீதியை
உணர்ந்தவர்கள், நீதிக்கு மதிப்புக் கொடுப்பவர்கள், நீதித் தராசில்
எல்லோரும் சமம்தான் என்று எண்ணுகின்றவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
என்ற அந்தக் கேள்வியை மாத்திரம் இந்த மாபெரும் பொதுக்கூட்டத்திலே
எழுப்புகிறேன்.
இப்படி கருணாநிதி என்ற பதர் குட்டையை குளப்பி விட்டது.
விளைவு
நீதியரசர் சதாசிவம் அந்த ஏழு கைதிகளின் மனநிலை, சந்தேக கைதிகளான
அவர்கள் தண்டிக்கப்பட்ட காலம், நீதி நெறிமுறை எதுபற்றியும் கவலைப்படாமல்,
இந்திய அரசியற் கலாச்சார வழித்தடத்தை மட்டும் பின்பற்றி தனது எதிர்கால பதவி
கனவுகளை மனதில்க்கொண்டு. அரசியல் தலையீட்டுக்கு சிரம் தாழ்த்தி
வழிவிட்டிருக்கிறார்,
கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா
என்பதை அரசியல் சாசன பெஞ்ச் ஆராய்ந்து முடிவு செய்யும்’ என தெரிவித்து,
கழுவிய மீனில் நழுவிய மீனாக தப்பித்துவிட்டார்.
இப்போ வழக்கு முற்று முழுதான அரசியலுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
அப்படியாயின் இந்தியாவில் ஏன் நீதிமன்றங்கள் இருக்கின்றன என்ற கேள்வியை யாரும் கேட்பாராயின்.
அதுதான் இந்தியா.
இந்தியாவில் ஏன் நீதிமன்றங்களால் தீர்ப்பு வழங்கமுடியாது என்றால்.
அதுதான் இந்தியா.
இருபத்து மூன்று ஆண்டுகள் சேடமிழுத்துக்கிடந்த நீதி முச்சுவிடும் என்று
எதிர்பார்த்த தமிழர்களின் மனதில் இந்திய அரசியலும் நீதியும்
அரசியல்வாதிகளின் பாலினமும் அம்மணமாக நிற்பதுமட்டும் நிர்மலமாக தெரிகிறது.
ஈழதேசம் செய்திகளுக்காக,
கனகதரன்.
No comments:
Post a Comment