மலேசியா கோலாலம்பூர், No 6119, jalan PJS 11/35, Petaling Utama, Batu 6
1/2 Jalan klang Lama, Petaling Jeya. (Petaling Tin- taman Sri Sentosa)
Selangur Darul Ehsan. ஶ்ரீ செந்தோசா, என்ற இடத்தில் அமைந்திருக்கும்
எண்பது வருட பழைமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய வருடாந்த ஆடி
மாத திருவிழா இந்த வாரம் சிறப்புற நிகழ்ந்தது.
ஆலய திருவிழாவின் திருத்தொண்டுகளிலும் திருவிழா உபயங்களிலும்
ஈழத்திலிருந்து இடம்பெயர்ந்து மலேசியாவில் வாழும் ஈழத்தமிழ் மக்கள் பக்தி
ஈடுபாட்டுடன் பங்குபற்றி மலேசிய தமிழ் மக்களுடன் இரண்டறக்கலந்து விழாவை
சிறப்பித்தனர்.
விழாவின் இறுதி நாளான 11, 08 2013,
ஞாயிற்றுக்கிழமை மலேசியாவின் இயற்கை வள சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் டத்தோ
ஶ்ரீ ஜி பழனிவேல், அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து பங்குபற்றி ஆலய
விழாவை சிறப்புச்செய்தார். வருடாந்த திருவிழா ஒருபுறம் நடைபெற்றபோது சிறு
ஆலயமாக இருந்துவந்த ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை இராஜகோபுரத்துடன் பெருத்த
ஆலயமாக கட்டும் ஆலய கட்டுமான திருப்பணி பெருத்த பொருட்செலவில்
திட்டமிடப்பட்டு ஆரம்பமாகியிருந்தது.
கட்டுமானப்பணிக்காக குறைந்த
பட்சம் 25, இலட்சம் மலேசியன் றிங்கெட்டுகள் திட்டமிடப்பட்டிருந்தன,
விழாவுக்கு வருகை தந்திருந்த அமைச்சர் டத்தோஶ்ரீ ஜீ பழனிவேல் அவர்கள் அரச
நிதியாக மூன்று இலட்சம் றிங்கெட்டுகளும் தனது சொந்த நிதியாக இருபதினாயிரம்
மலேசியன் றிங்கெட்டுக்களும் இரண்டு கட்டங்களில் வழங்குவதாக ஆலய
நிர்வாகத்தினருக்கு உறுதியளித்தார். மலேசிய தமிழ் அன்பர்களும் ஈழத்தமிழ்
அன்பர்களும் ஶ்ரீ மகா மாரியம்மன் திருப்பணியில் மனமார ஈடுபட்டு
வருகின்றனர்.
No comments:
Post a Comment