சினிமா போன்றதல்ல ஈழத்து வரலாறும் வாழ்வும் தயவுசெய்து தமிழகத்து சினிமா உலகம் சிந்திக்க வேண்டும்,
தமிழை தாய் மொழியாகக்கொண்ட ஈழத்தமிழர்கள் வாழமுடியாத நாடுகளாக ஸ்ரீலங்கா,
(இந்தியா) தமிழ்நாடு, ஆகிய இடங்கள் அனுபவரீதியாகவும் ஆதாரபூர்வமாகவும் இனங்காணப்பட்டிருக்கின்றன, இருந்தும் வேறுவழியற்ற தமிழினம் இன்று சடப்பொருளுக்கு சரியாக உயிர் இருக்கும்வரை வேறுவழியின்றி நாட்களை கடத்த இந்த இடங்களை விட்டு அகலமுடியாமலிருக்கின்றனர்,,
ஈழத்து மக்கள் உரிமையுடனும் சுயக்கௌரவத்துடனும், வாழ்வதற்கு ஆதாரமாக காவலாக இருந்துவந்த உயிரிலும் மேலானதென "இன்று அதிகமாக உணரப்படும்" உரிமைப்போராட்டம் நிறுத்தப்பட்டபின், உத்தரவாதமில்லாத உரிமைகளளில்லாத வாழ்க்கையற்ற வாழ்வான, இருப்பைக்கூட உறுதிப்படுத்த முடியாத கையறுநிலை 'பலபிரிவினர்களால்' ஈழமக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது,
இந்நிலைக்கு பலதரப்பட்ட நியாய அநியாயங்களையும், வியாக்கிஞானங்களையும் தொடர்ந்து பலர் எடுத்து வைத்து கைகழுவிக்கொண்டிருந்தாலும்,
அவர்கள் எவரும் தமது நிலையிலிருந்து ஈழத்துமனிதரைப்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை, "வலிமையே வாழும் என்பதே மீண்டும் உணரப்படுகிறது," ஆளும்வர்க்கத்தின் ஆணவமும் எதேச்சதிகாரமும் சுற்றியுள்ளவர்களின் சூழ்ச்சியும் அதைத்தான் வெளிக்காட்டி நிற்கிறது
இயற்கையும் அதைத்தான் போதித்திருக்கிறது. ஈழப்போராட்டமும் அதைத்தான் மக்களுக்கு உணர்த்தியிருந்தது ,
சண்டைபிடிக்கவேண்டுமென்ற மனநிலை ஈழத்தமிழனுக்கு ஒருபோதும் ஒட்டிக்கொண்டிருந்த ஒன்றல்ல, ஒதுக்கப்படுவதும், ஒடுக்கப்படுவதும், மானமுள்ள எந்த இனமாக இருந்தாலும் ஜீரணிக்க முடிவதில்லை, ஓரளவுக்குத்தான் எதையும் பொறுத்துக்கொண்டு வாழமுடியும், இதை எதிர்த்தரப்பு உணர்ந்துகொள்ளாதவரை சிக்கல் தீருவதற்கான சாத்தியங்கள் இல்லை.
இன்று நிர்க்கதியாக இருப்பவர்கள் இப்படியே தொடர்ந்தும் இருப்பார்களென்றும் எவரும் எதிர்பார்க்கமுடியாது,
போரில் ஈழத்தமிழன் தோற்றுப்போனான் என்றேவைத்துக்கொண்டாலும். போர்முடிந்து இவ்வளவு காலமாகியும் தமிழனுக்கான தீர்வு என்று ஏதாவது ஒன்றை சிங்கள அரசாங்கம் முன்மொழிந்திருக்கவில்லை. புத்தகோவில்களை சந்திக்கு சந்தி அமைப்பதினால் எல்லாம் தீர்ந்துவிடப்போவதுமில்லை, மீண்டும் மீண்டும் தப்புக்கு மேல் தப்பாக்ச்செய்து முற்றுமுழுதான பகையை சிங்கள தேசம் வளர்த்துக்கொண்டிருக்கிறது, இவை ஈழத்தமிழினம் பழகிப்போன ஒன்றாகவிருந்தாலும், உலகம் முழுவதும் அறியக்கூடிய சந்தற்பத்தை காலம் இன்று ஏற்படுத்திக்கொடுத்துவிட்டது, இதைக்கூட இல்லதொழித்துவிட இந்திய ஆளும் வற்கமும் அதன் கிளைப்பிரிவுகளான சினிமா உலகமும் கயமையுடன் கைகோர்த்து நிற்கின்றது,
ஒன்று ஈழத்தமிழினம் வாழவேண்டுமென்றால், அவர்களுக்கென்று ஒருதீர்வு தேவை என்பதை ஒரளவேனும் இந்தியா தவிர்ந்த உலகம் இன்று உணர்ந்திருக்கும். அல்லதுவிட்டால் தமிழினம் இலங்கைத்தீவில் வாழமுடியாது என்பதையாவது உணர்ந்துகொண்டிருக்கும், சமீபத்தில் உலகம் அறிந்துகொண்டிருக்கும் சம்பவங்களில் வேலணையில் மருத்துவத்தாதி தர்சிகா,சரவணையின் மரணமும் ,கிளிநொச்சி, விசுவமடு பிரதேசங்களில் இடம்பெறும் கொள்ளை கற்பழிப்பு , கிளிநொச்சி, முல்லைத்தீவு ,முழுவதும் சிங்கள இரணுவமயமாக்கல் இவையெல்லாம் உலகத்திற்கு காட்டிநிற்பது இலங்கையில் தமிழர் வாழமுடியாத நிலையில் இருக்கின்றனர் என்பதே.
இவற்றை உணராமல் மூடிமறைப்பதற்கு தமிழ்நாட்டுச்சினிமா உலகம் சிங்களவனுடன் சேர்ந்து இன அழிப்பை மறைக்க உதவ வேண்டாமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்,
உலகத்தில் பல பதிக்குகளுக்கும் பரவிவிட்ட ஈழத்தமிழனம் தூர உள்ள மேற்குலக நாடுகளில் தமது போராட்டங்களை அமைதியாக தொடர்வதற்கு தடைவிதிக்கப்படவில்லை, கல்வி கற்கத்தடையில்லை, சுதந்திரமாக வாழத்தடையில்லை, ,ஆனால் அருகிலுள்ள தமிழ்நாட்டில் ஒரு அகதிக்கு எப்பேற்ப்பட்ட சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது ,சொந்தமாக ஏதாவது சொத்து வாங்கமுடியுமா, உயர்கல்வி கற்க முடியுமா, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முகாமைத்தாண்டித்தான் எங்காவது விரும்பியபடிபோய் வாழமுடியுமா, ஒன்றுமே முடியாத அடிமை வாழ்க்கை,
சென்ற 17,07 2010 அன்று தமிழ்நாட்டில் வாழமுடியாது என வெறுத்துப்போய் தன்னிச்சையாக மக்கள் வெளியேறி ஈழம் நோக்கிச்செல்லும் வழியில் ஸ்ரீலங்கா இராணுவத்தால் கடலில் வைத்து கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாகியிருக்கின்றனர்,
இவைபோதாதென்று ஈழத்திலிருக்கும் மக்களுக்கும் சர்வதேச நீதி கிடைத்துவிடக்கூடாதென்ற நோக்கில் சினிமா நடிகர்களை இலங்கைக்கு அனுப்பி மிஞ்சிய தமிழர்களையும் இன்னலுக்குள்ளாக்க கருணாநிதி அரசு முயலுகிறது ,ஈழத்தமிழன் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த சமையம் பிடில் வாசித்துக்கொண்டிருந்த வர்களெல்லாம் இன்று குளம்பிய குட்டையில் மீன் பிடிக்க துடித்து நிற்கின்றனர்,
சத்யராஜ் அவர்களின் செய்தி ஒன்று மட்டும் சினிமா உலகத்திலும் மனிதர்கள் இருப்பதை உணர்த்துகிறது,
நடிகை அசின் கேரளத்தை பிறப்பிடமாகக்கொண்டவர், தமிழில் பிரபலப்படுத்தப்பட்டிருந்தாலும் இன்றைக்கு ஹிந்திச்சினிமா கதாநாயகர்கள் கையுக்குள் அவர் பக்குவப்படுத்தப்பட்டிருக்கிறார், பெண் நடிகைகளின் திரையுலக ஆயுட்காலமே ஐந்து ஆறு வருடம்தான், ஹிந்தியில் அசின் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் மூன்றுபடத்தைமுடிக்கவே இரண்டுவருடம் ஓடிவிடும், அத்துடன் அசின், சல்மான் கான் விவேக் ஒபறோய்,ஆகியோரின் சொல் கேட்பதா, தமிழர்கள் பற்றி சிந்திப்பதா என்ற குளப்பமுமிருக்கிறது, ,மலையாளியான அவருக்கு ஈழத்தமிழர்களின் அழிவுபற்றிய அறிவு யாராவது சொன்னால்த்தான் உண்டு,
அக்கா சூர்யாவும் விஜயும் எப்போ வருவார்களென ஈழத்தில் அசினிடம் மக்கள் வினவியதாக சொல்லப்பட்டது; விஜயும் சூர்யாவும் ஈழத்துக்குப்போவதால், நோர்வேயின் எரிக் சோல்ஹைம், ஹான்சன் பவர், ஜப்பனின் யசூசி அகாசி, அமெரிக்காவின் றொபேட் வூட், ரிச்சட் பெளச்சர், ஐரோப்பிய டொமினிக் ஷில்கோட், யூஜின வீத் இ, இவர்களால் முடியாத ராஜதந்திரத்தை ஒருநாளில் இவர்கள் முடித்துவிட்டு வந்துவிடுவார்களா,
2008 2009 களில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும், ரேடர், கப்பல், ஆளணி, ஆயுதங்கள் கருணாநிதி, சிதம்பரம், போன்ற நாதாரிகளின் உதவியுடன் நேரடியாக இந்தியா ஸ்ரீலங்காவுக்கு கொடுத்து செலவுக்கு பணமும் கொடுத்து எங்கள் உரிமையை இருப்பை இலட்சக்கணக்கான உயிர்களை அழித்த உண்மையை பல தொலைக்காட்சிகளும் பத்திரிகை ஊடகங்களும் வெளிச்சம் போட்டுக்காட்டிய பின்னும் யாராவது கருணாநிதியிடம் அதுபற்றி கேட்டதுண்டா,
தென் கோடியில் கடலில் தமிழகத்து மீனவத்தமிழன் செல்லப்பன் இலங்கை இராணுவத்தால் அடித்துக்கொள்ளப்பட்டதை, தட்டிக்கேட்ட நாம்தமிழர் இயக்கம் செந்தமிழன் சீமான் ,ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு காட்டினார் என்ற காழ்ப்புணர்வுக்காக, கருணாநிதி ஆள்த்தூக்கிச்சட்டத்தை அறிமுகப்படுத்தி வேலூர் தனிமைச்சிறையில் போட்டு வஞ்சம் தீர்த்தபோது நீங்கள் எத்தனைபேர் போராடி அவரை மீட்க பாடுபட்டிருக்கிறீர்கள், சினிமாஉலகத்தைச்சேர்ந்த சீமானையே சினிமாஉலகத்திலுள்ள உங்களால் மீட்கவேண்டாம் குரல்கொடுக்கவே முடியவில்லை, ஈழத்தை எப்படி ?,
வளர்ந்துவரும் நடிகர்களான சூர்யா, விஜய், அஜித், போன்றவர்கள் மதில்மேல் பூனைபோன்ற தரத்தில் இருப்பவர்கள், அவர்களுக்கு முதலாவதுதேவை வியாபாரம், அடுத்து தங்களுக்கான இருப்பு, இவைதாண்டி தமிழ்ப்பற்றை நிமிர்ந்து நின்று வெளிக்காட்டமுடியாத சிக்கலும் அவர்களுக்குள்ளேயே இருக்கிறது,
சூர்யா மணமுடித்திருப்பது ஜோதிகா, பம்பாய் நாட்டைச்சேர்ந்த ஹிந்திப்பெண், விஜய் அடிப்படையில் கலப்படமானவர் சந்திரசேகர் தமிழரென்று கூறப்பட்டாலும் தாய் சோபா மலயாளத்தை தாய் மொழியாகக்கொண்டவர், மனைவி சங்கீதா ஈழம் பருத்தித்துறை வடமராட்சியை பூர்வீகமாகக்கொண்டு லண்டனில் வளர்ந்தவர், அஜித் தெலுங்கர், மனைவி சாலினி பழைய மலயாளி, இது சினிமா நடிகர்களின் ஒரு சாம்பிள் மட்டும்,
இதனால் இவர்களிடம் மனிதத்தன்மை இல்லையென்று கருத்தல்ல, ஆனால் அவர்களால் ஒரு இடத்தில் ஒன்றில் திடமாக இருக்கவும் முடியாது , இப்போ அவர்களை நம்பிப்பலனில்லை என்பதும் உறுதியாகியிருக்கிறது,
அவர்களால் உறுதியான ஒருநிலைக்கு வரமுடியாததற்கு அவர்களது வாழ்க்கைச்சிக்கல்கள் அடிப்படையாக தடுக்கின்றன, இவைகளெல்லாம் அவர்களது தனிப்பட்ட உரிமை சம்பந்தமான பிரச்சினைகளாக இருந்தாலும், பொது வாழ்க்கையில் ஒருசமூகத்தை சார்ந்து அந்தச்சமூகத்தால் வளம்பெற்றிருக்கும் இந்தப்பிரதானிகள் தாங்கள்வளம் பெறுவதற்கு காரணமக இருக்கும் அடித்தட்டு மக்களின் உணர்வுக்கு மதிப்புக்கொடுத்தாக வேண்டியது, கடமையுடன் கூடிய பொறுப்பாகும்,சுய லாபநோக்கோடு சந்தற்பவாதிகளாக வேடங்களை மாற்றிக்கொள்ளுவது, நம்பி இருக்கும் ஒருசமூகத்தை பாதிப்புக்குள் தள்ளிவிடுகிறது,
இவர்களெல்லாம் தந்தரமாக தப்பிப்பதற்கு கையில் எடுத்து வைத்திருக்கும் அழுக்குப்படிந்த ஆயுதம், ஈழத்து குழந்தைகளை தத்தெடுத்திருக்கிறோம் படிப்பதற்கு உதவி செய்கிறோம் கண்சிகிச்சை முகாம் நடத்துகிறோம் கலை நிகட்சி நடத்துகிறோம் என நியாயப்படுத்தி தப்பிக்க முடிகிறது, இவையெல்லாம் ஏற்கெனவே கருணாநிதியால் மேடையேற்றப்பட்ட நாடகக்காட்சிகள்,
பிச்சைக்காரர் இல்லாத பூமியாக இருந்த ஈழத்து மக்களின் வீழ்ச்சியை, இந்த சினிமா உலகம் தமது வளர்ச்சிக்காக விளம்பரப்படுத்துவது ஈழத்தில் நாமும் சிங்களவனக பிறந்திருக்கலாமென தோன்ற வைக்கிறது,
இங்கு இவர்களிடம் கேட்டுக்கொள்ளுவதெல்லாம் எமது தற்காலிகமான இந்த வீழ்ச்சியை, சந்தற்பமாகப்பயன்படுத்தி அவமானப்படுத்தாதீர்கள்,
உதவிசெய்வதுபோல உட்புகுந்து , எங்கள் போதுஎதிரியான சிங்களவனின் சதிக்கு துணை போகாதீர்கள், எங்களுக்காக மான உணர்வுடன் கொதித்து தீயில் கருகிய தமிழ்நாட்டின் தியாகத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்,
அல்லலுக்குள்ளான எமது மக்கள் இந்தியாவை நம்பியோ, தமிழக அரசின் தலைவர் கருணாநிதியை நம்பியோ, எதிர்க்கட்சி ஜெயலலிதாவை நம்பியோ, மற்றய அரசியல்க்கட்சிகளை நம்பியோ தமிழ்நாட்டுக்கு வரவில்லை, தமிழ்நாட்டின் உதவியைக்கோரி நிற்கவில்லை, எங்களுக்காக தீக்குளித்த முத்துக்குமார், தமிழனின் அழிவைப்பொறுக்கமுடியாமல் தனது சினிமா சுகபோக வாழ்வை எட்டியுதைத்து இனமானங்கொண்டு சுயனலனில்லாமல் சிறை சென்றிருக்கும் நாம்தமிழர் "சீமான்" தள்ளாவயதிலும் தளராமன உறுதியுடன் மான உணர்வுடன் போராடும் ஐயாநெடுமாறன், என்றும் மாறாஉணர்வாளர் தமிழருவி மணியன், சினிமா உலகில் வெற்றிபெற்று வளர்ந்திருந்தாலும் தமிழன் என்ற மான உணர்வுடனிருக்கும் சத்தியராஜ், போன்ற நல்ல மனம்படைத்த நிறையப்பேர் இருப்பதை நம்பித்தான் ஈழத்தமிழர்கள்தமிழ்நாட்டை நம்பிக்கொண்டிருந்தனர்.
சிங்களவனின் வக்கிரம் தாங்கமுடியாமல் உறவுகளையும் உடமைகளையும் இழந்து இடம்பெயர்ந்து உலகம் முழுவதும் பரவிவிட்ட எமது மக்கள் சிங்களவனின் கொடுங்கோலுக்கு நீதிகேட்டு ஒருபக்கத்தால் போராடி, நீதிகிடைப்பதற்கான் நல்ல சமிக்கை கிடைத்து, சர்வதேசம் குற்றவாளிகளைவிசாரணைக்குட்படுத்த தயாராகும் தருணத்தில், சிங்கள ராஜபக்க்ஷவோடு உறவாடத்துடிக்கிறீர்களே இது நியாயமாகப்படுகிறதா?
நடிகர்சங்கத்தலைவர் என்கிற முறையிலும் தமிழன் என்கிறவகையிலும், சரத்குமார் , செயலாளர் ராதாரவி ஆகியோர் இதுபற்றிச்சிந்திப்பார்களென நம்புவோம், சரத்குமார் அவர்களை ராதாரவி அவர்களை தரக்குறைவாக விமர்சிப்பதில் எதுவும் நடந்துவிடப்போவதில்லை ,ஈழத்தில் 36 வருட போராட்டவரலாற்றில் கடந்த 2008, 2009 ம் ஆண்டுகளான இரண்டு வருடத்தில், ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டும் பலர் அனாதைகளாக்கப்பட்டும், பலபெண்கள் விதவைகளாக்கப்பட்டும் பல ஆயிரக்கணக்கான பெண்கள் சிறைச்சாலைகளிலும் பல இளைஞர்கள் தடுப்பு முகாம்களில் இன்றும் கொல்லப்பட்டுக்கொண்டுமிருக்கின்றனர், ,மீதமுள்ளவர்கள் இருக்க வீடு வாசல் இல்லாமல் பொருளாதாரம் அழிக்கப்பட்டு அனாதரவாக விடப்பட்டிருக்கின்றனர், போராட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது ,அல்லது தோற்கடிக்கப்பட்டிருக்கிறது, இப்போதமிழரின் தேவை கலை நிகட்சிகளும் களியாட்டமுமல்ல.
இந்த நேரத்தில் நீங்கள் எல்லோரும் கடந்தகாலத்தை கொஞ்சம் புரிந்துகொள்ளவேண்டும், சண்டை உக்கிரமடையத்தொடங்கியபோது 2008 பெப் சண்டையை நிறுத்தக்கோருவதற்காகவும், உயிரழிப்பைத்தடுக்கவும் தமிழனை அழிக்க சிங்களவனுக்கு இராணுவரீதியாக உதவவேண்டாமென கேட்பதற்காகவும், ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளாக தமிழர் தேசியக்கூட்டமைப்பு, இந்தியப்பிரதமரை சந்திப்பதற்காகதமிழ்நாட்டுக்கு வந்திருந்தது, நேரடியாக டில்லிக்கு போகாமல், தமிழரின் தலைவர் என்ற நம்பிக்கையுடன் வந்து மாதக்கணக்காக காத்திருந்து ஏமாந்து திரும்பியு இடம், கருணாநிதியின் கோபாலபுரம், மற்றும் ஆழ்வார்ப்பேட்டை வீடுகளின் வாசல்க்கேற்றுக்களில்,
ஆனால் கருணாநிதி எந்தச்சலனமுமில்லமல் திரும்பிப்பார்க்காமல் தேசியக்கூட்டமைப்பினரை திருப்பியனுப்பியதை அனைவரும் அறிந்ததே, அன்று நரபலிக்கும் நாடு எரிவதற்கும் துணைபோன கருணாநிதி, இன்றைக்கு துடிப்பது நரபலிவேட்டைக்காரரையும் நாட்டை எரித்தவர்களையும், சர்வதேசம் இனங்கண்டுவிட்டதே அதிலிருந்து அவர்களை காப்பாற்ற வேண்டுமே என்றுதுடித்துக்கொண்டிருக்கிறார், அதற்கு துணையாகி நடிகர் நடிகைகளை இலங்கைக்கு அனுப்பி படம்பிடிப்பதால் குறுகிய பிரபலமும் விளம்பரமும் கிடைக்கலாம்,நடிகர்களின் வியாபாரம் பெருகுவதற்கும் சந்தற்பமுண்டு.
ஈழமக்கள் எதையும் பேசவில்லை புலம் பெயர்ந்த மக்கள்தான் பேசிக்கொண்டிருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் அடிபடுகிறது ,புலம்பெயர்ந்தவர்கள் ஒன்றும் பாக்கிஸ்தானிலிருந்தோ வங்காளத்திலிருந்து போனவர்களல்ல, ஈழத்திலிருக்கும் குடும்பத்தவர்களில் ஒருவர்தான் புலம்பெயர் நாடுகளில் வசிக்கின்றனர், ஈழத்திலிருக்கும் தமிழர்களுக்கு பேச்சுரிமை துப்பாக்கி முனையில் மறுக்கப்பட்டிருக்கிறது, தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்களுக்கும் தமிழகத்தமிழர்களுக்கும் சிறையைக்காட்டி பேச்சுரிமை மறுக்கப்பட்டிருக்கிறது, என்ன எதுவென்றாலும் ஈழத்தமிழனின் குரல் புலத்திலிருந்துதான் இப்போதைக்கு வெளிவரும்,
சினிமாஉலகச்சகோதர சகோதரிகளே IFFA,அல்லது IHFA, விழா ஸ்ரீலங்காவில் நடந்தபோது நடிகர் சங்கத்தின் தீர்மானத்திற்கு மதிப்பளித்து, இலங்கை விழாவை புறக்கணித்தவர்கள் பலர், இன்றைக்கு ஒருசிலருக்காக கருணாநிதியின் சுயநல அரசியல் நடைமுறையை பின்பற்றி வரலாற்றுபிழையை பதிவுசெய்யாமல், அன்று துணிச்சலுடன் தங்கை நமிதா போன்றநடிகைகளின் உறுதியை பின்பற்றுவீர்களென நம்புகிறோம்,
பாதகமான தெரிவுகாளை முன் வைத்து கருணாநிதிக்கும் சோனியாவுக்கும் ராஜபக்க்ஷவுக்கும் துணைபோய் எங்கள் அழிவிலேயே நீங்கள் வாழ்க்கை நடத்த நினைத்தால், புலம்பெயர் நாடுகளில் வாழும் நாங்கள் உங்களது தொலைக்காட்சிகளையும் சினிமாப்படங்களையும் வேறுவழியின்றி புறக்கணிப்பதற்கு தள்ளப்படுவோம் என்பதையும் பணிவுடன் சொல்லக்கடமைப்பட்டிருக்கிறோம்.
ஈழதேசத்திற்காக கனகதரன்,
நன்றி ஈழதேசம்.
No comments:
Post a Comment