பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் தீரா மறுவை.
=========== ================== ======
செத்துக்கொண்டிருக்கும் தமிழை
சிறுமைப்படுத்த
சிங்கார விழாவெடுத்து
தன்னையே உயர்த்திக்கொண்ட
உலக அதிசயம்,
பத்துக்கோடி தமிழனிருந்தும்
பர்க்கோலா' வை பண்டிதனாக்கி
பொற்கிழி பரிசளித்து
பாரி''க்கே பாடம் புகட்டிய பண்பாடு,
சிறப்பொடிருந்த தொல்காப்பியத்தை
500 பிழைகளை பூட்டி,
பூங்கோவணமாய்
கிறுக்கடித்த வெங்கொடுமை,
http://nanavuhal.wordpress.com/2010/02/02/ellai-karunanidhi/
அ,நக்கீரனாரால் ஆங்காங்கே
குற்றம் குத்திக்காட்டப்பட்டாலும்
கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத
குள்ளமனமெளனம்,
தமிழின் அழிவுக்காக
முத்தமிழை
முகாரிராகத்தில் ஒப்பாரி பாடி
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென"
தீரா மறுவை -நம்
இறப்புக்குப்பின்னும் இயம்பிய வெம்மை
பொல்லா உலகத்தில்
புகழுக்காக
தமிழ்த்தாயை கட்டிப்போட்டு
தமிழ்த்தாயின் முகவரியில்
மாநாடு கூட்டி
மணவறையில் மாரடித்த மங்களம்
எப்பாடுபட்டாவது
ஈழ்த்தமிழர் சாகவேண்டுமென்பதற்காக
அதிகாலையில் ஐந்து மணிக்கு
தன்னந்தனியாக
தள்ளுவண்டி உதவியோடு
சாகும்வரை உண்ணாவிரதமென்று
மாய்மாலம் செய்து
காலக்குற்றம்,
அனைத்துகட்சியையும் ஓரணியாக்கி
மனிதச்சங்கிலியாய்
டில்லிக்கு இழுத்துச்சென்று
ஈழத்தமிழருக்காக
இழவெடுத்த ஏமாற்றம்
தமிழன் கலை கண் மூடிவிடக்கூடாது
என்பதற்காக
கட்டுக்கடங்கா காட்டாறாகி,
கடலலையென எழுந்து
மானாட மயிலாட மூலம்
தமிழ் மானங்காத்த எட்டாவது அதிசயம்,
பெற்ற பிள்ளைகளை
பிணக்கின்றி சொகுசாக வாழ வைக்கும் உலகில்
பெற்றோரின் சுயநல வழக்கை உடைத்து
பெற்ற பிள்ளைகளனைத்திற்கும்
பெரும்பொறுப்பை சுமத்தி
ஊருக்கு உழைக்கவைத்த ஒப்புவமை
முந்நூறென்ன மூவாயிரம் கோடி செலவானாலும்
இத்தலை வளரவேண்டுமென்று
நித்திரை மறந்து தற்குறியோடு
செம்மொழிக்கெ திகைப்பெடுக்கும்
ஆரவாரம்.,
----------------------------------------------
முக்குளிக்கும்வரை
மூச்சடைக்கும்வரை
மூதேவிகள் எவர் வைதாலும்,
தற்குறியாய் தன்னலமாய்
இத்திக்கிலிருந்து
எழுந்தகல விரும்பாமல்
வித்தகர்போல் வாழ்வேன்,
விரும்பியவர் போவீர் வீணே,
ஈழத்து எதிலி
------------------
நன்றி ஈழதேசம்,
No comments:
Post a Comment