மைய அரசின் மந்திரம், கருணாநிதியின் தந்திரம், தமிழகமக்கள் அந்தரம்,-கனகதரன்
இந்திய தமிழ்நாடு மானில அரசிற்கான சட்டசபைத்தேர்தல். இன்னும் அண்ணளவாக மூன்று மூன்றரை மாதங்களில் நடக்க இருக்கின்றது, முதலமைச்சராக இருந்துவரும் முதியவரான கருணாநிதி. தனது குடும்ப வளர்ச்சியே குறியாகக்கொண்டு தமிழகத்தை தனது சொத்தாக தனது வாரிசுகளின் வசதிக்கேற்ப வியாபாரமாக்கி விற்றுக்கொண்டிருக்கிறார்.
எதிர்த்து கேள்விகேட்பவர்களை சிறையிலும், போராட்டம் நடத்துபவர்களை பொலிசாரின் தடியடி மூலமும், மிஞ்சுபவர்களை ரவுடிகள் மூலமும், மகன்மாரின் அடியாட்கள் மூலமும் கொலைசெய்தும் மோசமாக அச்சுறுத்தி ஒரு சர்வாதிகாரிபோல இருந்து வருகிறார்,
சுயநலத்தின் மூலம் தமிழினத்தை அழிவிலிட்டுச் செல்லும் முதலமைச்சரான கருணாநிதி, மோசமாக மூப்பெய்தி, 88 வயதாகி முடங்கவேண்டிய தகுதிக்கு எப்போதே வந்துவிட்டார், இதை அந்நாட்டின் சமூகப்பெரியோர்களும் பல ஊடகங்களும் நலன்விரும்பிகளும் அரசியல்வாதிகள் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர், ஆனால் கருணாநிதி பதவியில் அதிகாரத்துடனிருப்பதால் எவரும் நேரடியாக வாய்திறக்க பயப்படுகின்றனர் என்ற உண்மையுமுண்டு.
இருந்தும் இந்த சுயநலவாதி கருணாநிதி, தள்ளாத வயதிலும், எழுந்து நிற்கமுடியாத நிலையிலும்கூட, முதல்வர் நாற்காலியிலிருந்து இறங்கமறுத்து, முச்சக்கரவண்டியேதுணை, முடியாவிட்டால் கட்டையிக் கிடந்தாவது தன் குடும்ப சுயநலனுக்காக மக்கள் நலனை ஏறி மிதித்து மன்னராட்சி போன்ற சர்வ அதிகார ஆட்சி நடத்துவேன் என்று விடாப்பிடியாயிருக்கிறார், அதற்காக சகல கட்சிகளையும் உடைத்து பணத்தின் மூலம் முக்கியமானவர்களையும் ஓட்டுப்போடும் மக்களையும் விலைக்கு வாங்கும் மோசமான நோயை பரப்பிவிட்டிருக்கிறார்.
தனது டாம்பீகத்திற்கும் வாரிசுகளின் பெருத்த தொழில்த்துறைக்கும், அரசதுறைகள் அத்தனையும் துர்ப்பிரயோகம் செய்யப்படுகின்றன, எந்தச்சலனமுமில்லாமல் மக்களின் வரிப்பணம் பலகோடிகளைக்கொட்டி, தனக்கான பாராட்டு விழாக்கள் மூலம் தன்னை முன்னுயர்த்துவதற்கான
முடிந்தளவு விழாக்களும், நாடகங்களும் பரப்புரைகளையும் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டின் முக்கியமான பத்திரிகை ஊடகங்களும் ஒளி ஒலி ஊடகங்களும் கருணாநிதியின் குடும்பத்தில் சிக்குண்டு தவிக்கிறது, இந்த அபாயம் தொடரவேண்டுமா? அல்லது உடனடி முடிவுரை எழுதப்பட வேண்டுமா?, இதுதான் தமிழக தமிழினத்தின் தலையாய கேள்வி, இதை தமிழகமக்கள் நிச்சியம் சிந்திக்கவேண்டிய ஒரு சந்தற்பம் கிடைத்துள்ள தேர்தலுக்கான காலகட்டம் இதுவாகும்,
தி.மு.க. அல்லது அ.தி.மு.க. இரண்டும் கிட்டத்தட்ட ஒரேகோட்பாடுகளுடன் மக்களை ஏமாற்றும் கட்சிகளாக இருந்தாலும், கருணாநிதியின் தி மு க ,தமிழ் இன அழிப்புக்கட்சியாக அதன் சுயரூபம் பல இக்கட்டான நேரங்களில் இனங்காணப்பட்டிருக்கிறது,
ஈழப்படுகொலையின்போதும் தமிழக மீனவர்களின் தொடர் படுகொலைகளின்போதும், தமிழகத்தின் சுதேசி இனப்பற்றாளன் "முத்துக்குமார்" தொடங்கிய வேள்வி 18 க. உயர்ந்த தியாகத்தமிழர்களையும் பூச்சி புழுக்களைப்போல உதாசீனப்படுத்திய தமிழினத்தின் தொங்கு வாழ்வாளன்தான் கபோதி கருணாநிதி,
ஜனநாயக நாடொன்றில் எந்தக்கட்சியாக இருந்தாலும் தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்து கொள்ளுமானால், மக்களுக்கு நல்ல மாற்றம் ஏற்படுவதில்லை, ஊழலும் அராஜகமும் அதிகரிப்பதற்கு வழியை திறந்துவிடும், அந்தக்குற்றம் மக்களையே சாரும், தெரிவுசெய்த மக்களே ஆட்சியை வழிமொழிந்த குற்றவாளிகளாவர், இதுதான் காலாகாலமாக இந்திய அரசியல்வாதிகள் உலகிற்கு உணர்த்தியிருக்கும் யதார்த்த உண்மையுமாகும்.
,
ஈழத்தின் படுகொலை இன அழிப்பு அவலம் தமிழக குடிமக்களைபாதித்தளவு கருணாநிதியையும் ஆட்சியையும் பாதிக்கவில்லையென்றாலும், வரப்போகும் இந்தத்தேர்தலின் வெற்றி தோல்வியை ஈழத்தின் அவலமும் தமிழக ஏழை மீனவர்களின் கடல்ப்படுகொலைகளும், சீமான் போன்ற தமிழுணர்வாளர்களின் கைதும் எதிர்மறையான தாக்கத்தை தமிழக தேர்தல் ஏற்படுத்தும் என்பதை கருணாநிதி உளவுத்துறை மூலம் அறிந்தே வைத்திருக்கிறார், யதர்த்தமும் அஃதே,
ஒரு மூத்த அரசியல்வாதிக்கான நாகரீகம் மறந்து, பாமரமக்களை சிந்திக்காமல் வாராவாரம் ஒரு சினிமா விழா, முடிந்து வீட்டுக்குவந்தால் ஜெயலலிதாவுக்கு கணக்கு கொடுப்பதும், கேள்வி பதில் எழுதுவதும், ஒப்புவமை எடுத்து விடும் குழந்தைத்தனமான பேச்சும், வளர்ச்சியடைந்த இந்தக்காலத்தில் கருணாநிதியை நகைப்புக்கிட்டுச்செல்கிறது, பலர் இதுபற்றி மோசமாக விமர்சித்த போதும் கருணாநிதி கடுகளவும் திருந்திக்கொள்ளுவதாக இல்லை,http://www.savukku.net/
அவை ஒருபக்கம் நடந்துகொண்டிருந்தாலும், தனது பிறவிக்குணமான கபடத்தனமான நாடக நடிப்பையும், தன் நம்பிக்கைக்குரியதுமான, ஆளாளைக்குளப்பி முடிச்சுப்போடும் தந்திர நரித்தனமான சதிவேலையையும், ஈரெட்டு பதினாறுதிக்குக்கும் மிக நிதானமாக விஞ்ஞானிகளால்க்கூட கண்டுபிடிக்க முடியாதவகையில் தவழ்ந்து தவழ்ந்து நடத்திக்கொண்டிருப்பது கருணாநிதியின் ஒவ்வொரு செயலும் மிகத்துல்லியமாக காட்டுகிறது,
இருந்தும் அவரது திட்டம் நிறைவேறும்வரை, எவராலும் எந்த ஆதார சுவடுகளையும் அறிந்துவிடமுடியாத அவதானமும் நிதானமும், இந்த வயதிலும் உலகத்தையே பிரமிப்புக்குள்ளாக்குகிறது,
எவரையும் நம்பாத கருணாநிதி, நல்ல கல்வியாளர்களான அண்ணாத்துரை, தொடக்கம் இரா, நெடுஞ்செழியன், மதியழகன் ஈ.வி கே சம்பத், என், வி, நடராசன், போன்றோரை பின்னுக்குத்தள்ளி, தான் பதவியிலமர்வதற்கு காரணமாகவிருந்த வஞ்சக நாடகத்தையே என்றென்றும் நம்பி அரசியல் நடத்தி வருகிறார், அவரது நாடக அனுபவம் இந்த 88 வயது வரை கை கொடுத்துவந்ததும் மறுப்பதற்கில்லை, அதன்பால் உலக நாயகன் பட்டம் சிவாஜிகணேசன், கமலகாசன், போன்றோருக்கு வழங்குவதை விடுத்து கருணாநிதிக்கே வழங்கியிருக்கவேண்டும்,
ஈழ அழிப்புப பற்றியகேள்வி எங்கிருந்து எழக்கூடுமோ, அந்தக்கேள்வி எழுவதற்கு முன்னேயே அந்தக்கேள்வியையும் தானே எழுப்பி, அதற்கான நியாயத்தையும் ஒப்புவித்து, ஓட்டைகளை அடைத்துவிடுவதற்கான நாடக அரங்குகளை மிக அவசரமாக திறந்துகொண்டிருக்கிறார், அவற்றின் பிரதிபிலிப்புத்தான் ஈழத்தின் விடுதலைபற்றிய கருணாநிதியின் கபட அறிக்கைகளும், மத்திய அரசுமூலம் விடுக்கப்படும் வாக்குறுதிகளும்.
இதன் பின்னணியில் சிலநாட்களுக்கு முன்பு வந்த வெளியுறவுச்செயலர் நிருபமா ராவ் அவர்களின் செய்தியொன்று, “போரினால் இடம்பெயர்ந்த மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் வேகமாக நடைபெற வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாகவுள்ளது. தமிழர்களின் மறுவாழ்வு மட்டுமல்ல, அவர்களின் முன்னேற்றத்திற்கும்? இந்தியா உதவும். போரினால் இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர இந்தியா திட்டமிட்டுள்ளது என்றும், அதன் முன்னோடித் திட்டமாக முதலில் 1,000 வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் கூறியுள்ள நிருபமா ராவ், போர் நடந்த பகுதியில் தமிழர்களின் வாழ்வும், மறுவாழ்வுப் பணிகளும் எப்படி நடைபெறுகிறது என்பதை நேரில் கண்டறிய இந்திய அரசின் மூத்த அதிகாரி அடுத்த மாதம் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்குச் செல்வார். “எங்கே வீடு கட்டித் தரவேண்டும் என்று (சிறிலங்க அரசு) இடம் ஒதுக்கித் தருகிறார்களோ அந்த இடத்தில் இந்தியா வீடு கட்டித்தரும்” என்றும் இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் கூறியுள்ளார்.,
சட்டசபை தேர்தல் முடிந்ததும் இவை அனைத்தும் காற்றுப்போன பலூன் என்பதை கண்கூடாக உலகம் கண்டறியமுடியும், (தரித்திரவானான கருணா இதுவரை கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவெற்றியதுகிடையாது, 1956 லிருந்து குரல் கொடுத்துக்கொண்டேயிருப்பதாக கூறும் கருணாவின் வாக்குறுதி அவர் சாகும் வரை தொடரும்)
கருணாநிதியின் வஞ்சக நாடகங்களையும் ஊழலையும் தமிழ் மக்கள் விரோதப்போக்கையும் பலர் இனங்காட்டி நிற்கும் இந்த நேரத்தில்,அவைகளை நீர்த்துப்போகச்செய்ய, கருணாவுக்கு நம்பிக்கையுடன் இன்னும் பல நாடகங்களை குறுகியகாலத்திற்குள் மேடையேற்றவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
அதற்குத்துணையாக இப்போ கருணாநிதி தேர்ந்தெடுத்திருக்கும் மிக மிகத்தவறான தெரிவு ராஜபக்க்ஷ சகோதரர்களும் KP எனக்கூறப்படும் குமரன் பத்மநாதன் ஆகிய துரோகக்கும்பல்கள் என்பதுதான் ஜீரணிக்கமுடியாத காலக்கொடுமை, என்பதை தமிழகத்து தமிழர்கள் தயவுசெய்து அறிந்துகொள்ளவேண்டும்.
காலாகாலமாக ஈழப்போராட்டத்தின் வீச்சை குறைப்பதற்கான உள்ளடி வேலைகளை தொடர்ச்சியாக இந்திய புலனாய்வு அமைப்பான றோ, உதவியோடு இந்திய அரசியல்வாதிகள் செய்துகொண்டுதானிருக்கின்றனர், விடுதலைப்புலிகளின் முன்னணித்தளபதியும் புலிகளின் இரண்டாம் நிலைத்தலைவரான மாத்தையாவின் உடைப்பு, ஈ பி ஆர் எல் எfப்,வரதராஜப்பெருமாளின் வளர்ப்பு, ஈ என் டி எல் எfப்.பரந்தன் ராஜன் அணியை வளர்த்த விதம், இந்தியாவில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவை இந்தியா வரவேற்கும் முறை, இவைகளிலிருந்து இந்திய ஆளும்வர்க்கத்தின் சதியும்,, கால்வாரும் திட்டங்களும், ஈழத்தமிழர்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளமுடியாதபடி அரசியல் செய்யவேண்டிய சூழ்நிலை தவிர்க்க முடியாமல் இருந்தே வந்திருக்கிறது.
சில காரணங்களை முன்னிட்டு அவற்றை பிரித்து வெளிப்படுத்த முடியாத சிக்கல்களும், சென்ற காலங்களில் ஈழத்தமிழர்மத்தியில் இருந்துவந்தது வெளிப்படையாகும், மாமியாரின் சேலை விலகிப்போய்விட்டிருந்தால் வாயால் சொல்லவும் முடியாமல் கையாலும் காட்டமுடியாதது போன்ற சிக்கல் இருந்தது உண்மை, ஆனால் இன்று எல்லாம் கைமீறிப்போய்விட்ட நிலை, நேரடியாகச்சொல்லவேண்டுமென்றால் கருணாநிதி ஈழத்தமிழர்களுக்கு மட்டும் விரோதியல்ல, உலகத்தமிழினத்தின் சிறுமைக்கும் கருணாநிதியே காரணமென்பது பட்டவர்த்தனமான உண்மை என்பது உலகம் அறிந்திருக்கிறது.
இத்தாலியில் உள்ள லூசியானாவில், (எட்விகி அண்டோனியா அல்பினா மையினோ )என்ற இயற் பெயர் கொண்ட சோனியா, இயல்பில் சாதாரணமாக இருந்தபோதும் சோனியாவிடமிருந்த பழிதீர்க்கும் எண்ணத்தை ஈழத்தில் எப்படி செயல்ப்படுத்தவேண்டும் என்பதற்கான ஆலோசனை முழுவதையும் குடும்ப பதவிக்காக, தயாநிதி மாறன் மூலம் கருணாநிதி தனது சுயநலன் காரணமாக பேரம்பேசி கொள்ளி எடுத்துக்கொடுத்ததாலேயே ஈழதேசத்திற்கு கொள்ளிவைக்கப்பட்டது, இந்த இரகசியம் மாறன் குழுவுக்கும் கருணாவின் மகன் அழுகிரி முறுகலின் போது வெளிவந்திருந்தது, பின் குடும்பம் ஒன்றுசேர்ந்தபோது மீண்டும் மூடிமறைக்கப்பட்டுவிட்டது.
ஈழ எரிப்பின்போது தமிழ்நாட்டின் மக்களின் குமுறலை காரணமாக்கி மனச்சாட்சியுடன் மைய அரசை சண்டாளனான கருணாநிதி எதிர்த்திருந்தால், காலாகாலத்தித்கும் கடவுளாக கருணாநிதியை தமிழினம் தரிசித்திருக்கும், ஆனால் தனது பதவியும் பேராசையும்கொண்டு குடும்பங்களின் சீலைக்குள்ளல்லவா பாவி பதுங்கி நாடகமாடினான்,
கருணாநிதி தனியாக நடிக்கும் நாடகங்கள்தவிர கூட்டுச்செரவேண்டிய இடங்களுக்கான பாத்திரங்களும் தயார் நிலையில் தயாரிக்கப்பட்டு முடிந்தாலும், அதற்கான அரங்கங்கள் ஒவ்வொன்றாக திறக்கப்படத்தொடங்கிவிட்டன, அவைகளில் ஒன்றுதான் சமீபத்தில் கே.பி. வெளியிட்டிருக்கும் செய்தி,
இலங்கையில் போர் நிறுத்தம் வராமல் தடுத்தது வைகோதான் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். மேலும் அவர் தனது பேட்டியில்,'கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன் இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே உச்சக்கட்ட போர் தீவிரம் அடைந்திருந்தது. இலங்கை இராணுவத்திற்கு இந்திய இராணுவம் மறைமுகமாக உதவி செய்கிறது என்ற குற்றச்சாட்டை தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் எழுப்பினர். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டால், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதால், விடுதலைப்புலிகளின் முடிவை வைகோ மாற்றினார். என்றும் (கருணாநிதி எழுதிக்கொடுத்ததை) கருணாநிதி பாணியிலேயே ஒப்புவித்திருக்கிறார்,கே.பி
ஈழத்தை காப்பதற்காக 1950 லிருந்து தானும் தி.மு.க.வும் உயிரைகொடுத்து குரல்கொடுத்து அந்த சோகநினைவுகளால் உயிர்வாழ விருப்பில்லாமல் இருந்துவருவதாகவும், பாராட்டு விழாக்களைக்கூட மன நிம்மதியின்றியே, தமிழக மக்களுக்காக பாராட்டுக்களை ஏற்றுக்கொள்ளுவதாகவும், சுயநல எதிரணி அரசியல்வாதிகள் ஒத்துவராததாலேயே ஈழம் இன்று இந்தக்கதிக்கு வந்திருக்கிறது, என்ற ஓலத்தை கருணாநிதி சாகும்வரை நிறுத்தப்போவதில்லை,
எவ்வளவு போராட்டங்களையும், கட்டுக்கடங்கா மனிதச்சங்கிலியையும், உயிரையும் குடும்பசுகங்களையும் துச்சமென மதித்து ,ஈழபோர்நிறுத்ததிற்கான சாகும் வரையிலான உண்ணாவிரதம் போன்றவற்றை, மத்திய அரசுக்கெதிராக முடிந்தவரை நடத்தியும், தமிழக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையீனத்தால் ஈழமக்கள் இவ்வளவு இன்னலுக்குள்ளாகிவிட்டனர், அடுத்துவரும் ஆட்சிக்காலத்தில் ஈழமக்களின் மீட்சியை தி,மு,க,பெற்றுத்தரவேண்டும் என்பதால்த்ததான் உடல் நிலையைக்கூட கருத்தில்க்கொள்ளாமல் ஓய்வெடுக்க நினைத்தபோதும் ஈழத்தமிழரின் வாழ்வு செழிக்கவேண்டுமென்பதால் எனது உடல்நிலையையும் உயிரையும் கணக்கிலெடுக்காமல் தமிழகமக்களின் ஆணையை ஏற்று உங்கள் முன் சாமானியனாக தொண்டனாக நிற்கிறேன் என்று பிதற்றுகிறார்.
கருணாநிதிக்கு கணக்கு முடிக்கவேண்டிய காலகட்டத்தில் தமிழகமக்கள் இன்றிருக்கின்றனர், அங்குள்ள பொதுநல நோக்கங்கொண்ட அரசியல்வாதிகளையும், தமிழ்ப்பற்றுடையவர்களையும் உடைத்து இல்லாமல்ச்செய்வதுதான் கருணாநிதி கே,பி. ராஜபக்க்ஷ கூட்டத்தின் நோக்கமாகும்,
மைய அரசின் (மையம் என்றால் பிணம்/ செத்துப்போன சவம் எனவும் பொருள்படும்) பசி,யும், பட்டிணி மண்மோஹனும்,சோணியாவின் அனுசரணையும் கருணாவுக்குண்டு,
சாதாரணமாகவே டில்லிக்காரர்களுக்கு தமிழர்களை "கூலி" என்ற ஏளனம் மனதில்உண்டு, தமிழர்களை மட்டமாக்கவேண்டுமென்ற எண்ணம் அவர்களிடமிருந்தாலும், கருணாநிதி அவர்களுக்கு எந்தச்சிரமத்தையும் கொடுக்காமல் தமிழர்களை கருணாநிதியே அழித்துக்கொண்டிருப்பது , டில்லிக்கு கல்லே எறியாமல் மாங்காய் விழுவது போன்றதாகும்.
518 தமிழக மீனவமக்கள் கொல்லப்பட்டபோதும் இந்திய வெளியுறவு அமைச்சர் கன்னட கிருஷ்ணா தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிப்போவதால்த்தான் கொல்லப்படுகின்றனர் என்று ஸ்ரேற்மன்ற் கொடுத்து கருணாவையும் டில்லியையும் குளிரவைத்திருக்கிறார்,
இதற்குப்பின்னும் தமிழகத்திற்கு கருணா தேவைதானா ??
எல்லாவற்றிற்கும் தமிழகத்தின் கிட்லர் ஆட்சி மாற்றியமைக்கப்படவேண்டியது தமிழகமக்களின் கையில்த்தான் இருக்கிறது,
http://www.naamtamilar.org/textnews_detail.php?id=2387
http://www.naamtamilar.org/textnews_detail.php?id=2383
கனகதரன்,
No comments:
Post a Comment