Saturday, October 8, 2011

அறுகம்புல்

அருகம்புல் CYNODON DACTYLON. ஒரு மருத்துவ மூலிகையாகும்.
Cynodon dactylon.jpg
வாதம், பித்தம், சிலேத்துமம்(கபம்) ஆகிய முத்தோடங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், இரத்தப் பித்தம், சிறு விடப் பூச்சிகளின் கடி ஆகியவைகளுக்கு நல்லதொரு மருந்து. இரத்தம் சுத்தமாக, வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க , நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது..
[தொகு] மருத்துவம்

1, உடல் இளைக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம். சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.
2, அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போலாகி விடும்.
3 நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
4 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
5 வயிற்றுப் புண் குணமாகும்.
6 இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.
7 நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
8 சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
9 நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
10 மலச்சிக்கல் நீங்கும்.
11 புற்று நோய்க்கு நல்ல மருந்து.
12 உடல் இளைக்க உதவும்
13 இரவில் நல்ல தூக்கம் வரும்.
14 பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
15 மூட்டு வலி நீங்கும்.
16 கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
17 நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

நன்றி விக்கிபீடியா.

No comments: