Friday, October 21, 2011

ஐயனின் சொற் கேட்காததால் வந்த வினை!


நான் சொல்வதை தமிழர்கள் கேட்கவில்லை: கருணாநிதி

தலைவர் அவர்கள் சொல்வதை தமிழர்கள் காது கொடுத்து கேட்டிருந்தால் அன்பே வடிவான அட்டாக் பாண்டியனும், பொறுமைக்கு பெருமை சேர்க்கும் பொட்டு சுரேசும், சிறையில் வாட வேண்டிய நிலை வந்திருக்குமா?

அதிகாலை வேளையில் சூரியனை தரிசிக்க வேண்டிய நேரு காவலர்களின் கர்ண கடூர முகத்தை காண வேண்டிய சூழல் வந்திருக்குமா?

வீரத்தின் விளை நிலமான வீரப்பாண்டி ஆறுமுகம், கூட சிறை கம்பிகளை எண்ண வேண்டிய துர்பாக்கிய நிலை நேரிட்டுயிருக்குமா?

அஞ்சா நெஞ்சன் அழகிரி மதுரையில் கால் பதிக்கவே நடு நடுங்கி குழந்தை குட்டிகளை அயல்நாடுகளில் குடியேற்றி விட்டு, டெல்லியிலே தவமிருக்கும் பரிதாபம் சம்பவித்திருக்குமா?

எல்லாம் காது கேளாத தமிழர்களால் வந்த வினை.

நன்றி, உஜிலாதேவி....
உஜிலாதேவிஉஜிலாதேவி

No comments: