Sunday, October 16, 2011

கூத்தாடி குசும்பன்>அங்.15,

தமிழ்மக்கள் விரும்பியவாறு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இன்றுடன்
ஐந்து மாதங்கள் முடிந்துவிட்டது. இந்த ஐந்து மாதங்களில் நிறையவே மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன, நிகழ்ந்துகொண்டும் இருக்கின்றன.

ஆட்சி மாற்றத்தின் பின் மக்களோட வாழ்க்கைத்தரத்தில் மாற்றங்கள் நடந்ததோ இல்லையோ அரசியல்வாதிகளிடையே நிறைய மாற்றங்கள் அதிரடியாக தெறிக்கின்றன.

ஆட்சி மாற்றத்தால் அடித்தட்டு ஏழை மக்களுக்கு என்னென்ன வளர்ச்சி உண்டாகியிருக்கிறது என்பதை உணருவதற்கு இன்னும் ஒரு ஆறுமாதம் கழித்து விமர்சிப்பதே சிறந்தது. இருந்தும் திருப்தியானதென்ற கருத்தும் உண்டு.

மறுபுறம், தமிழகத்தில் தேர்தலில் படுதோல்வியடைந்த அரசியல் கட்சிகளின் தலைமைகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றனர், படுதோல்வி அவர்கள் அனைவரையும் விரக்தியின் விளிம்புவரை தள்ளி புலம்பல் வாதிகளாக்கியிருக்கிறது,

தோல்வியால் உண்டான இயலாமை மக்களின்மேல் அவர்களது ஆத்திரம் திரும்பி இருந்தாலும், காட்டிக்கொள்ளாமல் தம்மை எதிர்ந்த்து நின்று வென்றவர்களின்மீதும் கூட்டுச்சேர்ந்து பயணித்தவர்கள்மீதும் காய்ந்து பொருமுவது தெரிகிறது.

இனி அடுத்து கரையேறுவதற்கான தந்தரத்தை ஆளாளுக்கு தேடி அலைகின்றனர்,,

மூர்க்கமான இந்த தோல்வி, அரசியலில் தம்மை புடம்போட்டு வேறு ஒரு தீர்க்கதரிசனமான பரிணாமத்தை நோக்கி நகர்த்துவதாகவும், அதை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருப்பதாகவும், அடுத்து வித்தைக்கு தயாராகி விட்டதாகவும் அவர்கள் கிரந்தம் கூவுவது தெரிகிறது.

தினம் தினம் அரசியல் வியாதிகளின் இந்தப்போக்கை பார்க்கும்போது இந்த அரசியல் வியாதிகள் மனநலன் பாதிக்கப்பட்டு விட்டனரோ, என்கிற அளவுக்கு அவர்களது நடவடிக்கையும் பேச்சும் பலத்த சந்தேகத்தை கிளப்பி நிற்கிறது,

ஒவ்வொரு கட்சி அரசியல் வியாபாரிகளும் தமது வணிக வித்தையை, புதிய புதிய கண்டுபிடிப்புக்களாக மாற்றிவிட்டதாக புதுப்புது செய்முறைகளை சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.

இதுவரை தாம் தப்பான பாதையில் பயணித்துவிட்டதாகவும், இந்த தேர்தல் தோல்வி தமக்கு ஒரு திருப்புமுனை பரீட்சைக்களமாக அமைந்து தேறும் நிலைக்கு தள்ளியிருந்ததாகவும் தெரிவித்து தம்மை பின்பற்றுமாறு அழைப்பு விடுக்கின்றனர்.

இனிவரும் காலங்கள் தமது கட்சி கொள்கைகள் வசந்தம் நிறைந்த புதிய சித்தாந்தங்களாக, தமிழ்நாடு சீமைபோல் உயர்ந்து பரிணமிக்கும் என உணர்ந்து இனி வரும் நாட்களில் தமிழ்நாட்டை விண்ணை முட்டுமளவுக்கு கொண்டு சேர்க்கும் தகுதி வந்துவிட்டதாகவும் தமது வாய்ப்பாட்டை ஒப்புவித்துக்கொண்டிருக்கின்றனர்..

காலை விடிந்ததோ இல்லையோ, மக்களால் மரண அடிவாங்கி முற்றாக நிராகரிக்கப்பட்ட கருணாநிதியாரின் கேள்வி பதிலும், புலம்பல் அறிக்கை ஒன்றும், அவரது விரக்தியை படம்போட்டு காட்டி நிற்கிறது.

மக்களால் தான் நிராகரிக்கப்பட்டுவிட்டதை, கருணா பகவான், ஏற்றுக்கொள்ள மறுத்து நிற்கிறார், தான் ஏதோ ஜெயலலிதா அம்மையார் ஒருவரால் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டது போல காட்ட முயலுவது தெரிகிறது.

அனைத்து விடயங்களுக்கும் அவர் அடம்பிடித்து, அதற்காக பல்லாயிரம் உதவி நியாயங்கள் பூட்டி தனது இருப்பை மக்கள் மறந்துவிடக்கூடாது என்பதில்
காட்டும் அக்கறை அவரது அனுபவ தந்திரத்தை புரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் புதிராகும். இருந்தும், அவரது முயற்சி எந்தளவுக்கு அவருக்கு கைகொடுக்கும் என்பது எவராலும் கணிக்க முடியவில்லை.

மறுபுறம் பாமாக வின் உரிமையாளர் வைத்தியர் ராமதாஸ் அவர்கள், தன்பாட்டுக்கு எடுத்துவிடும் சீர்திருத்தங்கள் உலக அதிசய மட்டத்தில் வியப்பளிக்கிறது. அவரது ஊளையிடுதல் எந்தப்பலனையும் தரப்போவதில்லை என்பதை அவரது கட்சியின் தொண்டன் அறிந்திருந்தாலும், அவர் சளைத்துப்போனதாகத் தெரியவில்லை.

ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் வசதியாக ஒவ்வொரு கட்சியை வாழ்த்திப்பாடி உடும்பாக மாறி குடியிருந்து வந்த அவர், மக்களாலும் சக கட்சிகளாலும் ஒதுக்கப்பட்டு தனியனாகி இல்லாத ஊருக்கு போக வழிகாட்டுகிறேன் எல்லோரும் வாருங்கள் என அழைக்கிறார்,,

உச்சக்கட்டமாக ஐயா தான் தீக்குளிக்கவும் தயாரென விடுத்திருக்கும் சவால்தான் அவரை சிக்கலில்மாட்டும் என்பதை அவர் உணர்ந்துகொண்டதாக தெரியவில்லை.(திராவிட கட்சிகளுடன் கூட்டில்லை,, அல்லது திராவிட கட்சிகளை கருவறுப்பேன் என்ற சபதம்)

இன்னுமொரு சிறு கொம்பனியான, விசி கடை முதலாளியான திருமா அவர்கள் மோசமான விரக்தியில் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது, அவர் விடுக்கும்
முன்னுக்குப்பின் முரணான அறிக்கைகளும், தொலைக்காட்சி நேர்காணல்களும், அவர் ஒரு நிலையில் இல்லையென்பதை அவரே உணர்ந்துகொண்டதாக தெரியவில்லை.,

காலை, மாலை மாற்றி மாற்றி அவர் எடுத்துவிடும் கொள்கையற்ற புலம்பல், அவரது வில்லங்கமான விரக்தியை வெளிப்படுத்தி நகைச்சுவையை பெருக்கி நிற்கிறது.

ஈழ தமிழர்களாலும் வெறுப்புக்குள்ளாகி ஒதுக்கப்பட்ட அவர்,, ஈழத்தை எடுத்து ஈழமக்களிடம் கொடுப்பேன் என சபதமிட்டு நிற்பது, ராமதாசரையும் விஞ்சிய கொடு நகைச்சுவை.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய அரசியல் இயலாமை உமை என்று பெயர்பெற்ற திருவாளர் மண்மோகன் சிங்கம் அவர்களின். ஆட்சியில் நடக்கும் கொள்ளையும் ஊழலும் உலகப்பிரசித்தி பெற்றுவிட்டது. ஒன்றும் கட்டுப்படுத்தமுடியாமல் அவர் படும் ஆதங்கம், அவரது இயலாமை, மக்களின் கண்களில் கண்ணீரை வரவளைக்கிறது.

அத்துடன் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரின் அதிரடி ஒருபுறம் ரசிக்கக்கூடியதாக இருந்தாலும்,, ஒருபுறம் வயிற்றை கலக்கும்வண்ணம் பீதியை கிளப்புகிறது.

திருவாளர் கருணா அவர்களின் சமீபத்திய உருட்டுப்பிரட்டு ஒன்று அம்பலத்திற்கு வந்தது,

தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயம் அமைந்துள்ள இடம், விதிமுறைகளை மீறி அரச நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறதென்று ஆதாரத்தோடு ஆளும் கட்சியால் குற்றம் சாட்டப்பட்டது.

அந்த நிலம் முறைப்படி வாங்கப்பட்டது என்றும். அது கட்சிக்கான சொத்து என்றும், அந்த நிலம் 25 கிரவுண்டு விஸ்தீரணம் கொண்டது என்றும் கருணா முன்பு பலமுறை சாதித்து வந்திருக்கிறார்.

ஆனால் அந்த நிலம் இன்னும் அதிகமான நிலப்பரப்பை கொண்டதென்றும், அரசகாணியும் அறிவாலயத்திற்குள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும் ஆதாரபூர்வமான தரவுகளுடன் குற்றச்சாட்டு எழுந்தது.

நிலமை தனக்கு எதிராக திரும்புவதை உணர்ந்த கருணா தனது பாணியில் மாட்டுக்குள் ஆட்டையும், ஆட்டுக்குள் மாட்டையும் விட்டு, கேரளத்தை பார் ஆந்திரத்தைபார், அமெரிக்கவைப்பார் என்னும் கணக்கோடு, "வரும் ஆனால் வராது" என்ற கருத்துப்பட ஜெயலலிதாவின் சொத்தான சிறுதாவூர் பிரச்சினையை இழுத்து, அதுக்கு இது சரி என்று நியாயப்படுத்த முயன்றார். அதுவே அவருக்கு வினையாகிப்போனது.

அண்ணா அறிவாலயத்திற்குள் இருப்பது 25 கிரவுண்டு நிலமல்ல, 90 கிரவுண்டு நிலம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அதிரடியாக கருணாவின் திருட்டு பொய்யை அம்பலப்படுத்தி பப்பிளிக்கில் சுட்டிக்காட்டியிருந்தார். (அடுத்து சட்ட நடவடிக்கையும் பாயக்கூடும்)

அதன் பிறகு கருணாநிதி தனது வழமையான எதுகை மோனை இலக்கணத்துடன், ஒரு காணி என்பது 25 கிரவுண்டு நிலம் என்றும், முழு நிலமும் 25 கிரவுண்டு என்று நான் கூறவில்லை என்று தனது கிரந்தம் பாஷையில் மொழிபெயர்த்திருந்தார்.

அத்துடன் நின்றுவிடாமல் சிறுதாவூரில், தலித் இடத்தை அபகரித்தவர் ஜெயலலிதா என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் குற்றஞ்சாட்டப்பட்டவர்; கொடநாடு எஸ்டேட்டில் மாளிகை கட்டி, மக்களுக்காக பாதை விட மறுத்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பின்னும், செயல்படுத்தாமல் இருப்பவர் என்பதை மறக்க முடியுமா? என்றும் அதுக்கு இது சரியாப்போச்சு என்று முடிச்சுபோட்டு தப்பிக்கபார்க்கிறார்.

கூகு>> சிறுதாவூரில நடந்த அத்துமீறலுக்கு ஒங்க ஆட்சிக்காலத்தில அந்த அம்மாமேல சுப்ரீம் கோட்டில வழக்கு குடுத்திருக்கீங்க. அதுபோல ஒங்கமேலையும் வழக்கு போடுறது தப்பில்லத்தானுங்களே,

கூகு>> (அண்ணா அறிவாலய நிலம் எனக்காகவோ, குடும்பத்திற்காகவோ வாங்கப்பட்டதல்ல எங்கிறீங்க; அப்புடின்னா கட்சிக்காரைய்ங்க எவனும் வந்து சுதந்திரமா அனுபவிக்கலாமுங்களா? உள்ள வுட்டுடுவீங்களா என்ன சாமி சுத்துமாத்து பண்ணுறீங்க.

அந்த நிலம் தி.மு.க., அறக்கட்டளைக்காக வாங்கப்பட்டது. அப்போது தி.மு.க., அறக்கட்டளையில் எம்.ஜி.ஆரும் ஒருவர். கருணாநிதி சம்பந்தப்பட்டோர் அப்போ நிலத்தை மிரட்டி வாங்கியதை அறிந்த எம்ஜீஆர் அவர்கள் எதிர்த்ததால், 1972ல் எம்ஜீஆரை கட்சியிலிருந்து நீக்கினர் என, ஜெயலலிதா கூறியுள்ளார்.

அண்ணா அறிவாலய நிலம் வாங்கிய அறக்கட்டளை பத்திரத்தில், எனது பெயர், நெடுஞ்செழியன் மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த நிலத்தை மிரட்டியோ, வலியுறுத்தியோ வாங்கவில்லை என, சர்க்காரியா கமிஷன் தீர்ப்பிலேயே கூறப்பட்டுள்ளது. எங்கிறீங்க.

சர்க்கரியா கமிஷன்தான் கருணாநிதி ஒரு விஞ்ஞான ரீதியாக திருட்டு மோசடி செய்யும் களவாணி என பரிந்துரைத்திருக்கிறது. அதுபோகட்டும் பதிவுப்பத்திரத்தில் எம்ஜீஆர் பெயர் இருந்தால் அதை காமிக்க வேண்டியதுதானே இதுக்குப்போய் சர்க்கரியாவை ஏன் சாட்சிக்கு இழுக்கிறாரு.

அப்பொறம் பாருங்க பிரச்சினையை சட்டப்படி தீர்க்க முடியாது என்பது நல்லாவே தெரிஞ்சப்புறம் வன்முறையை தூண்டும் முகமாக திருச்சியில் பிரச்சார கூட்டத்துக்கு போனப்போ மக்கள் மத்தியில மூட்டிவிட்டுட்டு வந்திருக்கிறார்,

Dinamalar cartoon அண்ணா அறிவாலயத்தைத் தொடும் நாள்தான் அதிமுக ஆட்சிக்கு முடிவு நாளாக இருக்கும் என்று எச்சரித்திருக்காரு..

"நிலங்களை மீட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் ஒப்படைப்பதாகச் சொல்கின்றனர். எத்தனை பேருக்கு எவ்வளவு நிலம் இப்படி ஒப்படைக்கப்பட்டது என்று கேட்டால் அரசிடம் பதில் இல்லை. ஊரை ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே இப்படிக் கதை கட்டுகிறார்கள். என்று கலாய்க்கிறாரு தாத்தா.

கூகு >> அதுக்கு பதிலளிக்கிறாப்பல அம்மா சில விபரங்கள மக்கள் மத்தியில் புள்ளி விபரமா சொல்லி அறிக்கையாவும் வெளியிட்டிருக்காங்க. தாத்தாவின் பார்வைக்காக அதயும் இங்கு தந்திடுறேங்க.

ஆட்சி மாற்றத்துக்குப் பின், சட்டம் தன் கடமையைச் செய்கிறது. சேலம் மக்கள் இப்போது தான் நிம்மதியாக இருக்கின்றனர். தமிழகத்தில், தி.மு.க.,வினரால் பறிக்கப்பட்ட நிலங்களை மீட்க, தனியாக நில மீட்பு பிரிவு துவங்கப்பட்டது. நில அபகரிப்பு தொடர்பாக, 17 ஆயிரத்து 431 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 718 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 28 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டுள்ளது. 755 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம், "625 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது". தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கின்றனர். நில அபகரிப்பு தொடர்பாக விசாரிக்க, 25 சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் சட்டப்படியான நடவடிக்கை தொடரும். இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா அவுங்க சொல்லியிருக்காங்க. அண்ணா அறிவாலயமும் இந்த சிக்கலுக்குள் மாட்டும் என்றே தெரிகிறது

முதலமைச்சர் அவுங்க சொல்லுறதில உள் நோக்கம் எதுவும் இருக்கிறதா தெரியல்லீங்களே.

இருந்தும் அம்மா அவங்களும், தாத்தா அவங்களும் அரசியல்ல இரு துருவங்கள் என்பதால,, முதலமைச்சர் இந்த விசயத்துக்கு கொஞ்சம் முன்னுரிமை குடுப்பாங்க எங்கிறதும் வாஸ்தவம்தான். இருந்தாலும் பாவப்பட்ட மக்களோட சொத்து கறுப்பாடுகளிடமிருந்து பறிமுதல் செய்யப்படுறது சந்தோஷம்தானுங்களே. இனி வர்ற மந்திரிமாரு கொஞ்சம் பயப்படவும் இடமிருக்கில்லீங்களா.

அறிவாலயத்தை எடுப்பேன் என்கிறார். அறிவாலயத்தை எடுப்பது என்ன அவ்வளவு சாதாரணமா? அப்படித் தொடும் நாள்தான் அதிமுக ஆட்சிக்கு முடிவு நாளாக இருக்கும். திமுகவின் சொத்து அறிவாலயம். ஏழை, எளியோர் ரத்தத்தைச் சிந்தி எழுப்பிய கட்டடம் அது. திமுகவின் சாதாரணத் தொண்டன்கூட அந்தக் கட்டடத்தை எடுக்க விடமாட்டான். எங்களுடைய நரம்புகள், எலும்புகள், மண்டையோடுகள் நொறுங்கிப் புதைந்து போனாலும்கூட அதை எடுக்க முடியாது.

கூ கு>> ஒரு பண்பட்ட தலைவன் இப்படியா பேசுவான். இதிலிருந்து அறிவாலய வளாகத்தில் சிதம்பர சக்கர சிக்கல்(அந்த சிதம்பரம் இல்லீங்க) இருப்பதென்பதை ஒத்துக்கொண்டு தீர்வை சட்டப்படி சந்திக்க முடியாது என்பதையும் உணர்ந்து ஏதுமறியாத அடிமட்டத்தொண்டனை தூண்டி விட்டிருக்கிறார். இல்லாவிட்டால் மிரட்ட செய்கிறாரோ என்றும் தெரியவில்லை. ஆனா இது தாத்தாவுக்கு சிக்கலா முடியும் எங்கிறதுதான் பட்சியோட பதிலாவும் இருக்கு.

மற்றக்கட்சிகளையும் அதிமுகவுக்கு எதிராக தூண்டிவிட ஐயன் மறக்கவில்லை.

இதனை மற்ற கட்சியினரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.(?) அறிவாலயம் எப்படி வாங்கப்பட்டது. எப்படிக் கட்டப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.

கூகு>> (ஞாயமா முறைப்படி வாங்கியிருந்தீங்கன்னா ஏந்தான் துள்ளுறீங்க, வியாக்கியானம் பண்ணாம அதைத்தான் பகிரங்கமா காட்டிவிட்டீங்கன்னா பிரச்சினை முடிஞ்சுடுமுங்களே,

செம்மொழிப் பூங்கா: தமிழ் மொழியும் செம்மொழித் தகுதியை அடைய வேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்டு சோனியா காந்தி மூலம் அந்தத் தகுதியைப் பெற்றோம். அதன் அடையாளமாக அண்ணா மேம்பாலம் அருகே அமைக்கப்பட்ட பூங்காவிற்கு செம்மொழி என்ற பெயரை வைத்தேன். இப்போது செம்மொழிப் பூங்கா என்ற பெயர் பலகையைப் படர்ந்த கொடிகளால் மறைத்துள்ளனர். பூங்காவை நான் திறந்து வைத்தேன் என்ற கல்லையும் மறைத்துள்ளனர்.

கூ கு>> செம்மொழி தகுதியை தமிழ் எப்போவே பெற்று விட்டிருக்குதுங்க. நீங்க தோள் கொடுத்துத்தான் தமிழ் செம்மொழி ஆகணுமுன்னு ஒரு சட்டமும் இல்லீங்க,,, அதுசரி அரும்பாடுபட்டு ஏன் சோனியா காலில் விழுந்தீங்க. அவுக என்ன நாட்டின் பிரதமரா,...........இல்லாங்காட்டி ஜனாதிபதியுங்களா,............ இல்லை இந்திய மொழிகளைப்பற்றி அவுகளுக்கு ஏதாச்சும் புரியுமுங்களா,............

சோனியா அவுங்களுக்கு ஹிந்தியே ஒழுங்கா தெரியாது.. காங்கிரஸ் கட்சியை சட்டவிரோதமா ஒங்களப்போல பச்சோந்திகள கையில போட்டு வளைச்சு வச்சிருக்கிறாங்க. இந்திய நாட்டுக்கும்,, இந்திய மொழிகளுக்கும் சம்பந்தமில்லாத வேற்று கிரகவாசியான அவங்களிட்டபோய் கால்ல விழுந்து கும்பிட்டிருக்கீங்களே. அதப்போய் பெரிசா சொல்ல ஒங்களுக்கு வெக்கம் கக்கம் கிடையாதுங்களா?.

தமிழ் மொழி என்ன, திமுகவாட்டம் ஒங்கவீட்டு சொத்தா, அப்படி இருந்தா நீங்க சோனியாவோட காலில் இல்லீங்க சோனியாவோட எதுக்கு முன்னாடி வாணா வுழுந்து கும்பிடலாமுங்க. அத்தோட தமிழுக்கும் ஒங்களுக்கும் உள்ள சம்பந்தம் என்னன்னு ஒருவாட்டி விலாவாரியா ஒங்களால சொல்ல முடியுங்களா,

நீங்க சொம்மொழி மாநாடு நடத்தின இலட்சணம் நாங்க அறியாததுன்னா நினைக்கிறீங்க. ஒங்க குடும்ப கூட்டம் ஒண்ணுசேர்ந்து நாட்டோட பணச்செலவில, 5 நட்சத்திர வேடிக்கை வினோத நிகழ்ச்சியா நடத்தி முடிச்சீங்க.

400 கோடி ரூபாவ தண்ணியா செலவழிச்சீங்க. ஒங்கவீட்டு பணமுங்களா. ஒங்க மனைவி, தொணைவி, புள்ளகுட்டி, பேரன், பேத்தி, பூட்டன் பூட்டி வரைக்கும், குத்தாட்டம் போட்டு பாவப்பட்ட ஏழை பாழைகளோட வரிப்பணத்த கரியாக்கி கமிஷனும் அடிச்சு நாசம் பண்ணிட்டு கெளம்பினீங்க.

மொழிக்கு ஸ்ரார் விழா எடுத்த நீங்க, தமிழ உண்மையா நேசிச்சு அதுக்காகவே போராடின ஈழத்து தமிழினத்துல ஒத்தை உயிரை காப்பாத்த ஏதாச்சும் பண்ணியிருக்கீங்களா,, கண்ணு முன்னால கொத்து கொத்தா கொண்ணு குவிக்க சகுனியாட்டம் அவ்வளவு வஞ்சகமும் செஞ்சீங்க.

கல்லணையில் கரிகாலன் கட்டினான் என்றா எழுதப்பட்டுள்ளது. ஆனால் வரலாறு அவன் பெயரைச் சொல்கிறதா இல்லையா? அதைப்போல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நான்தான் அந்தப் பூங்காவை திறந்து வைத்தேன், தமிழுக்குச் செம்மொழி தகுதியைப் பெற்றுத் தந்தேன் என்பதை யாராலும் மறைக்க முடியாது.

கூகு>> அதோட அரை நாள் உண்ணாவிரத நாடகம் நடத்தி 40 ஆயிரம் பேரை கொல்ல வச்சீங்க எங்கிறதும் தவறாம வரலாற்றில் வருமுங்க.

ஒங்க அலப்பறை இதுன்னா, ஒங்க பழைய கூட்டாளிகளான ராமதாசர், திருமா, அவுங்களோட கூவல் தாங்க முடியல்லீங்க. ஒங்களுக்காச்சும் தன்னம்பிக்கை, சாகிற வயதிலும் நிறையவே இருக்கு.

ஆனா ராமதாசர் மாமாவோட ஐடியாக்கள் புல்லரிக்குதுங்க. திருச்சியில

சட்டசபைக்கான இடைத்தேர்தல் நடக்குது, அது தவிர தமிழ்நாடு முழுவதும் உள்ளூராட்சி தேர்தலும் நடகுது.

ஆனா போன மாதம் மாமா ஒரு ஐடியா குடுத்திருந்தாரு அவருக்கே அது காமடியா தெரியல்லையான்னு என்னோட குழந்தை குதிச்சு குதிச்சி சிரிக்குதுங்க.

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் வரும்வரைக்கும் திருச்சி இடைத்தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாதுன்னு கண்டிப்பான ஐடியா குடுத்து நடைமுறைபடுத்தச் சொன்னாருங்க. எப்புடி இருக்குதுங்க மாமாவோட ஐடியா. இவரோட வசதிக்கு தகுந்தாப்பல செய்யல்லைன்னா போராட்டமும் நடத்துவாராம். இவிரு கச்சிக்கு ஒத்தை எம்எல்ஏ கிடையாது, எத வச்சு இவரு ஓடர்போடுறாருன்னு புரிய மாட்டேங்குது.

தாத்தாவோட கச்சி தோத்திருந்தாலும் அடுத்தவாட்டியும் தாத்தாவோட திமுக எப்புடியும் 20 எம் எல் ஏக்களை வெல்லக்கூடிய எடத்தில இருந்திட்டுத்தான் இருக்கு. வைகோ அவங்களும் விஜயகாந்து அவங்களோட கட்சியும் இரண்டாம் இடத்துக்கு,, இல்லை முதலாம் இடத்துக்கு வந்துடும்,, ஆனா ராமதாசரோட கற்பனை திட்டங்கள மக்கள் எப்போவாச்சும் ஏத்துக்குவாங்களா, ஏந்தான் சிந்தனையில்லாம பொலம்புறார்ன்னு அவருக்கு கூட புரித புதிருங்க.

ஆனா அறிவாலயத்தில் கை வைத்தால் அதுதான் அதிமுகவின் ஆட்சிக்கு கடைசி நாள் என்று வீண்தனமா வாயை கொடுத்து வீணாகப்போகிறார் கருணா தாத்தா என்பது மட்டும் அடுத்து வரும் காலங்களில் நிதர்சனமாகும்.

மீண்டும் சந்திப்போம்.
வரட்டுங்களா,

No comments: