Monday, October 3, 2011

கூத்தாடி குசும்பன்< அங் 13.


உலகில் பெண்கள் சுதந்திரமாக வாழ சிறந்த இடம் எது என்ற கருத்துகணிப்பை அமெரிக்காவைச் சேர்ந்த, "நியூஸ்வீக்' என்ற நாளிதழ் சமீபத்தில் நடத்தியது. மொத்தம், 165 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், இந்தியா, 141வது இடத்தை பெற்று, மிகவும் வெற்றிகரமாக பிந்தள்ளப்பட்டிருக்கிறது.

இதன் மூலம், இந்திய நாடு சுதந்திரம் பெற்று, 65 ஆண்டுகளை கடந்தாலும், அரசியல், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பெண்கள் இன்னும் முன்னேற்றம் அடையவில்லை என்பதை கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு ஏற்ற நாடு என்ற பெருமையை சீதோஷ்ண நிலையில் 07 மாதங்கள் கடும் குளிரும். 05 மாதங்கள் மட்டுமே உழைக்கக்கூடிய ஐஸ்லாந்து, வெற்றிகரமாக பெற்றுள்ளது.

இதற்கு அடுத்து, சுவீடன், கனடா, டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகள், முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன.

இதே நேரத்தில் மாலி, கொங்கோ, ஏமன், ஆப்கானிஸ்தான், சாத் ஆகிய நாடுகள் கடைசி ஐந்து இடங்களை பெற்றுள்ளன.

இப்பட்டியலில், அயர்லாந்து, மொத்தமாக, 100க்கு 100 சதவீதம் மதிப்பெண் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. இதில் பொருளாதாரத்தில், 100க்கு 88, சுகாதாரத்தில், 100க்கு 90.5, அரசியலில், 100க்கு 92.8, கல்வியில், 96.7 சதவீதத்தை பெற்றுள்ளது.

ஆனால், வருடத்தில் 365 நாட்களும் உழைக்கக்கூடிய சீதோஷ்ண நிலையையும் சகல வளங்களையும் கொண்ட இந்தியா, 100க்கு, 41.9 மதிப்பெண்களை மட்டுமே பெற்று, 141வது இடத்தை பெற்றுள்ளது. இதில், அரசியலில், 14.8 சதவீதமும், நீதித் துறையில், 54,சதவீதமும் பொருளாதாரத்தில், 60.7, சுகாதாரத்தில், 64.1, கல்வியில், 64.9 சதவீதமும் பெற்றுள்ளது.

இந்தியாவை விட, சிறிய நாடாக இருக்கும், வங்கதேசம், நேபாளம், பூட்டான், மியான்மர், (பர்மா)இலங்கை. ஆகிய நாடுகள், இந்தியாவை பிந்தள்ளி, உயர்ந்த இடத்தில் உள்ளன.


#கூகு>>

உலகத்தில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக புளுகி பெண்களை செக்ஸ்இயந்திரமாகவும், கலாச்சாரம் பண்பாடு என்ற பெயரில் ஆணாதிக்கவாதிகளின் அடிமைகளாகவும். வைத்திருப்பதில் இந்தியா முன்னணியில் இருப்பது பல பல ஆய்வுகளில் முன் பலமுறை வெளிப்பட்டிருந்தாலும், நியூஸ்வீக் என்ற புகழ்பெற்ற பத்திரிகை அறுதியாக உண்மை நிலைவரத்தை வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறது.

பல வகைகளில் சமூகத்தில் புரட்சிச் சாதனை படைத்த பல பெண்கள் பிறந்த இடமாக இந்தியாவை குறிப்பிடுகின்றனர். இருந்தும் உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற அந்தஸ்து இலங்கையை சேர்ந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்கள் பெற்றிருந்தார்கள்.

அடுத்து 1966 ல் இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமர் ஆனார், ஆனாலும் பெண் அடிமைத்தனமும் பெண் சிசுக்கொலையும் இந்தியாவில் ஒரு உயர்ந்த கலாச்சாரமாகவே கொண்டாடப்பட்டுவந்தது.

இதற்கான மூல காரணியாக அபிவிருத்தியடையாத கிராமத்து மக்களின் பொருளாதார வறட்சி முக்கிய பங்கு வகித்தது, இருந்தும் இன்றுவரை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி சுகபோகிகளாக வாழும் அரசியல் வியாதிகள், மேலான நோக்கம் கொண்டு. கிராமத்து மக்கள் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை,

1948ல் சுதந்திரத்தின்போது 32 சதவீதமாக இருந்த வறியவர்களின் விகிதாசாரம் 65 ஆண்டுகள் கடந்த சுதந்திர இந்தியாவில் 40 சதவிகிதமாக உயர்வு பெற்று வறுமை பீறு நடை போடுகிறது.

கிராமப்பகுதிகளில் தினமும் 26 ரூபாய் "நகர்ப்புறங்களில், தினமும் 32 ரூபாய்க்கு மேல் செலவிடுவோர், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வராதவர்களாகக் கணக்கிடப்படுவர் என, திட்ட கமிஷன் அளவுகோல் நிர்ணயித்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.

இந்த 32 ரூபாயை வைத்து, நாய், பூனை போன்ற விலங்குகள் மட்டுமே வாழ முடியும்' என, தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் சக்சேனா கூறியுள்ளார்.

மேதா பட்கர், அருந்ததி ராய்,போன்ற பெண்நிலை மற்றும் சமூகப்போராளிகள் இந்திய தேசத்தில் தலையெடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் இக் கொடுநிலை வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டு, ஆப்கானிஸ்தானை முன்னிலைப்படுத்தி இந்தியா பின்னுக்கு சென்றிருக்கும் அபாயம் இருக்கிறது.

மத்திய அரசாங்கம் முதலாக, ஒவ்வொரு மானில அரசுகளையும் ஆட்சிசெய்பவர்கள் அனைவரிலும், குறைந்த பட்ஷம் ஐம்பதுக்கு மேற்பட்ட கிரிமினல் ஊழல் மோசடி வழக்குகள் இருக்கின்றன. இருந்தும் எந்த தடையும் இல்லாமல் அவர்களே அரசியலில் குறுநில மன்னர்களாக பரம்பரையாக தொடர்ந்து அதிகாரப்போட்டியில் இருந்து வருகின்றனர். தடுப்பதற்கு எதுவும் காணப்படவில்லை.

சிபிஐ, நீதிமன்றத்திலிருந்து அதி உச்ச நீதிமன்றங்கள்வரை ஏதோ ஒருவகையில் அதிகார வர்க்கத்தினருக்கு சார்பாகவே, அனைத்து அசைவாக்கத்தையும் திருப்பி விடுகிறது,, சட்டத்தின் ஓட்டைகளை பவித்து அதிகார துஷ்பிரையோகம் செய்துவரும் அரசியல்வாதிகளான திருட்டு கனவான்களை, இந் நீதிமன்றங்களும் நீதிமான்களும், சளைக்காமல் காப்பாற்றிக்கொண்டே இருக்கின்றனர்,

பாராளுமன்றம் வயோதிபத் திருடர்கள் தலைமை வகிக்கும் குளப்படி மையமாக இருந்து வருகிறது,

2011 ஆண்டுக்கு முன் நடந்த அனைத்து ஊழல் கிரிமினல் குற்றச்சாட்டுக்களும் அரசியல்வாதிகளால் நீர்த்துப்போக செய்யப்பட்டிருக்கின்றன.

சட்டத்தில் உள்ள சகல ஓட்டைகளையும் சரியாகப் பயன்படுத்தி ஆட்சியாளர்கள் தப்பியிருந்தது உலகம் அறிந்த பரகசியம்.

கடைசியாக இப்போ லைஃபில் ஓடிக்கொண்டிருக்கும் 176,000. கோடி உழலும் மக்கள் கண்முன்னே ஊழல் அரசியல்வாதிகளால் ஏதேதோ புதிய புதிய காரணங்கள் காட்டி குழி வெட்டி புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

குற்றவாளிகள் என சுட்டிக்காட்டப்படுபவர்கள் முன்னைய நிதி அமைச்சரான சிதம்பரமும், பிரதமரான மன்மோஹன் சிங் அவர்களுமென்று பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ளிருந்தே கிளம்பியது.

ஆனால் அரசியல் தலையாரிகளான அவர்களை குற்றஞ்சாட்டுவது இந்தியாவுக்கே அவப்பெயர் வந்துவிடும் என்றும்,, அரசியல் வாதிகளான அவர்கள் வானத்திலிருந்து வந்திறங்கியவர்கள் போல மகத்துவம் படைத்தவர்கள் அவர்களை விசாரிக்கமுடியாது என்றும்,, சட்டத்தின் ஓட்டைகளின் சாரம் தடுத்தாட்கொள்வதாகவும், வழக்குரை வித்தகர்கள் சட்ட வரம்பின் வழியை காட்டி வில்லங்கமாக வாதாடுகின்றனர்.

எதிர்க்கட்சிகளிடம் தட்டிக்கேட்கும் தகுதியில் இல்லை. எதிர்க்கட்சிகள் தட்டிக்கேட்க முற்பட்டால். முன்னய ஆட்சிக்காலத்தில்,, அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது செய்த பல்வேறு ஊழல்களை கிளறுவோம், கிண்டிக்கிளப்புவோம் என இன்றய ஆட்சியாளர்கள் மிரட்டுகின்றனர்.

அடிமட்ட கிராம பஞ்சாயத்து சபைகளிலிருந்து, மத்திய அரசுவரை, கோடிகளில் ஊழல் மலிந்து கிடக்கிறது. அரசியல்வாதிகளின் முத்திரை பதித்த அடியாட்கள், பொலிஸை தமது வேலையாட்களாக நடத்த, ஆட்சியாளர்கள் எழுதப்படாத சட்டமாக மாற்றி உத்தரவு போடுகின்றனர்.

இந்தநிலையில் பாவப்பட்ட இந்தியப்பிறப்பு ஒருவன், 26 ரூபாய் செலவு செய்ய தகுதியுள்ளவன் என்றால், அவன் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்தவன் என்று இந்திய (வல்)அரசு நிறுவ முயற்சிக்கிறது.

மூன்று குழந்தைகளைக்கொண்ட ஒரு குடும்பத்தின் தலைவனான ஒருவன். நாள் ஒன்றிற்கு 50 ரூபா சம்பாதிக்க முடியாமல் தமிழகத்து கிராமங்களில் வாழ்வதாக "நடந்தது என்ன" "நிஜம்" போன்ற தொலைக்காட்சி வார நிகட்சிகளில், ஊடகங்கள் தினம் தினம் ஊரூராக சென்று உண்மை நிலைவரங்களை காட்டுகின்றன.

வயிற்றுக்கு வழிதேடி பல இளம் குடும்பத்தலைவர்கள் தமது குடும்ப வறுமையை போக்க வீடு, காணி, தாலி, தோடு, போன்றவற்றை கந்துவட்டிக்காரனிடம் கொடுத்து பணம் பெற்று கடல் கடந்து மலேசியா, சிங்கப்பூர், டுபாய், போன்ற நாடுகளில் அஞ்ஞானவாசம் பூண்டு வருடக்கணக்காக குடும்பங்களை பிரிந்து சொல்லொணா துயரத்துடன் பிழைப்புதேடி குடும்பத்திற்காக வருடக்கணக்காக தனிமையில் தியாக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

தமிழகத்தின் கிராமங்களுக்கு போகாமல், தலைநகரம் சென்னையின் கல்வித்தரம் என்ன என்பதை மக்கள் தொலைக்காட்சியின் "கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை" நிகழ்ச்சி பார்ப்போரை புல்லரிக்க வைக்கிறது.

சமீபத்தில், ஏதோ ஒருவகையில் இதே ஆட்சியாளர்களை தெரிவுசெய்யும் வாக்குரிமை தகுதியைக்கொண்ட பரமக்குடி மக்கள். தாம் சார்ந்த சாதிக்கட்சி தலைமையை நம்பி போராட்டத்தில் குதித்து துடிக்க துடிக்க 7 பேர் தெரு நாய்களைப்போல பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அதற்கு முன் நீண்ட நாட்களாகவே வேதாரணியம், தூத்துக்குடி, போன்ற கடற்கரை கிராமங்களில் கஸ்ட ஜீவனம் நடத்தும் பாமர மீனவர்களை இலங்கை கடற்படையினர் சரமாரியாக சுட்டு படுகொலை செய்துகொண்டிருக்கின்றனர்

நீதி வேண்டி பலர் தீக்குளித்தும் சாகின்றனர், இறந்தவர்கள் சார்பாக எந்த நீதி விசாரணையும் நடைபெறுவதில்லை, கண் துடைப்பாக செத்து தொலைந்தவர்களுக்கு 1 இலடசம் ரூபாய் வீதம் சன்மானம் வழங்கி மண்ணின் மைந்தர்களை சிறுமைப்படுத்திவிட்டு . ஓய்வுபெற்ற ஒரு வயோதிப நீதிபதியை நியமித்து "விசாரணைக்கமிஷன்" அமைத்து சட்டத்தின் ஓட்டையை சரியாக பயன்படுத்தி ஆட்சியாளர்கள் தமது ஊழலை தொடருகின்றனர்,

இப்படியே சீர்கேடு தொடர்ந்தால் இன்னும் ஒரு இருபது வருடத்தில் இந்தியா எங்கு சென்றடையும் என்பதை,, ஒன்றும் ஆய்வு செய்து பரிசோதனைக்குட்படுத்த தேவையில்லை.

மீண்டும் சந்திப்போம்.

No comments: