மட்டக்களப்பு ஏறாவூர் எல்லை நகர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அதிசய விநாயகர் ஆலயத்தின் வளாகத்தில் உள்ள மாமரத்தில் பிள்ளையார் உருவத்தினை கொண்ட அதிசய மாங்காய் ஒன்று காய்த்துள்ளது. | |
மேற்படி ஆலயத்தின் புனர்நிர்மானப் பணிகள் இடம்பெற்று வரும் இத்தருணத்தில் இவ்வாறான அதிசயப் பிள்ளையாரின் தோற்றம் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனை பெருந்திரளான மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வழிபட்டு வருவதுடன், மாங்காய் உருவத்தில் தோன்றியுள்ள அதிசயப் பிள்ளையாரின் இயற்கையான இந்த வடிவம் பிள்ளையாரின் அருள் கடாட்சம் இந்த இடத்தில் நேரடியாக கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. | |
|
No comments:
Post a Comment