Friday, October 8, 2010

கிட்லரின் அந்தரங்கப் படங்கள் அம்பலம்.
ஜேர்மனியின் சர்வாதிகாரி கிட்லரின் அந்தரங்க புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அடோல்ஃப் கிட்லர் இதுவரை உலகில் வாழ்ந்த மிகக் கொடூரமான சர்வாதிகாரியாகக் கருதப்படுபவர். அவரின் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகவே கருதப்பட்டது.









எனினும் அவரின் வாழ்க்கையின் மறுபக்கத்தைப் பிரதிபலிக்கும் நிழற்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன. இந்நிழற்படங்கள் 1936 முதல் 1945ம் ஆண்டுகாலப் பகுதிக்குட்பட்டவையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இப் படங்கள் கிட்லர் தேநீர் அருந்துவது, பெண்களின் மத்தியில் புன்சிரிப்புடன் அமர்ந்திருப்பது, பெண் ஒருவருடன் உரையாடுவது, தனது பிறந்த நாள் பரிசான காரை ரசிப்பது போன்றவற்றை பிரதிபலிக்கின்றன.

இப்படங்கள் ஹியுகோ ஜெகர் என்பவரால் பிடிக்கப்பட்டவை. இவர் மட்டுமே கிட்லரின் அந்தரங்க வாழ்க்கை சம்பந்தப்பட்ட படங்களை எடுக்க அனுமதிக்கப்பட்டவர். மேலும் இவர் மட்டுமே அக்காலப்பகுதியில் வண்ணப் படங்களை எடுக்கும் படப்பிடிப்பாளராக இருந்தவர்.

மேற்படிப் படங்களை வங்கியொன்றில் பத்திரப்படுத்தி வைத்திருந்த அவர், 1965ம் ஆண்டு அவற்றை 'லைப்' சஞ்சிகைக்கு விற்பனை செய்தமை குறிப்பிடத்தக்கது. அவை தற்போது வெளியாகியுள்ளன.
இதுஇவ்வாறிருக்க, கிட்லர் வரைந்த ஓவியங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கிட்லர் ஒரு சிறந்த ஓவியரும் ஆவார். இவர் 1908ம் ஆண்டில் பல ஓவியங்களை வரைந்துள்ளார். 'வோட்டர் கலர்' மூலம் பல இயற்கைக் காட்சிகள், பண்ணை நிலங்கள், கிறிஸ்தவ தேவாலயம், தொழிற்சாலைகள், கிராமத்தின் இயற்கை எழில்மிகு காட்சிகள் போன்றவற்றை ஓவியமாக வரைந்திருந்தார்.

அவர் வரைந்த இந்த ஓவியங்கள் ஒஸ்ரியாவில் ஏலம் விடப்பட்டன. அவற்றை வழக்றிஞர் ஒருவர் ஏலம் எடுத்தார். ஆனால் தனது பெயரை வெளியிட அவர் மறுத்து விட்டார். இந்த மாத தொடக்கத்தில் ஓவியங்கள் ஏலம் விடப்பட்டன.
நன்றி மனிதன் இணையம்,

No comments: