சிறையில் சுத்திகரிப்புப் பணியில் பொன்சேகா!
இரண்டரை வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதிக்கு நேற்று சிறைச்சாலையில் சுத்திகரிப்பு வேலைகள் வழங்கப்பட்டதாக வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகர் ஆர்.பி.விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு சாதாரணக் கைதியைப் போன்று ஏனைய கைதிகளுடன் சேர்ந்து அவரும் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டார்.
கடுங்காவல் தண்டனைக் கைதிகளை குழுக்களாக இவ்வாறான பணிகளில் ஈடுபடுத்துவது வழமையான ஒன்றாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கூண்டின் மாதிரித் தோற்றம்.
நன்றி ஈழதேசம்,
No comments:
Post a Comment