உன்னதமான எம் தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின், ஐம்பத்து ஏழாம் அகவைநாள் . அவரை வாழ்த்த வரியில்லை!


தமிழ் இலக்கியத்தின் வழக்கிலுள்ள அத்தனை உவமைகளும் தலைவனின் பெருமை பகர்ந்து ஏற்கெனவே எழுத்தில் வடிக்கப்பட்டுவிட்டன,  வாஞ்சையுடன் தலைவனை பாராட்ட ஒப்பற்ற சொல் இனி இல்லை. இருந்தும் என்றென்றும் எம் ஒரே தலைவன் வாழ்வாங்கு வாழ்வாங்கு பல்லாண்டு வாழியவே என மனதார வாழ்த்துவோம்!.

உளப்பூர்வமாக உரிமையில் நான், என் தலைவன் என்பேன். என் அண்ணனும் தம்பியும் அக்காளும் தங்கையும் தன் தலைவன் என்பர். அம்மாவும் அப்பாவும் தமது தலைவன் என்கின்றனர். நாடு தன் தலைவன் எனும். மொத்தத்தில் அவர் பிரிக்க முடியாத எம் தலைவர் என்போம். இரத்த நாளத்தில் உணர்வையூட்டி உலகத்தில் எங்களை இனங்காட்டிய ஒப்பற்ற கற்பகமாம் எம் தலைவனை எங்கிருந்தாலும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழிய! வாழிய!! வாழியவே!!! என்று ஒருவினையாக வாழ்த்துவோம்!.

மேதகு தலைவனின் பிறந்தநாள் போற்றுவோம்
வீரியம் புகழ்பட ஆண்டுகள் நீண்டிடும்
ஈன்றவள் பார்வதி பாதம் பணிகிறோம்- திரை
மீண்டிடும் நாள்வரும் மாயைகள் விலகிடும்.
தோன்றிய இடரெலாம் தூசாய் மறைந்திடும்
ஐம்பத்து ஏழொடு ஆண்டுகள் தொடர்ந்திடும்.

தலைவனின் பிறப்பது உலகத்தின் அதிசயம்
சத்தியம் உண்மையில் அவர் ஒரு மெல்லினம்
நிறமதில் கறந்தபால் போன்றதோர் மனதிடை
நிமிர்ந்தவர் சினங்கொள்ள வைத்தது சிங்களம்.
தமிழனின் சிறுமையை கண்டவர் பொங்கினார்
தம்பியாய் சிரிப்பினில் நெஞ்சினில் தங்கினார்.

தமிழனின் உதிரத்தில் உணர்வின விதைத்தவர்.
தனியொரு ஒழுக்கத்தில் உலகத்தை வென்றவர்
ஒப்புக்கும் மழுப்பலாய் செப்பிட  மறந்தவர்
ஒருகணம் பயத்தினை உணர்ந்திட ஒறுத்தவர்.
உறுதியில் அவர் ஒரு பெருமலை யென்பதும்
உண்மையில் எதிரியின் எரிமலை யல்லவோ

சீருடை அவர்க்கென பிறந்தது என்றனர்- வெள்ளையர்
தேசமும் அதனையே பகர்ந்தது திண்ணமாய்
வெள்ளையர் மற்றவர் விதந்தனர் புகழ்ந்தனர்
வீரனாய் உலகத்தில் ஒருவனே என்றனர்.
சிரம் தாழ ஒருபோதும் நடந்ததுமில்லை- அவர்
சிங்களன் மண்ணுக்காய் விதந்தாட வில்லை.

சாவொரு காலமும் நெருங்கிடா துண்மையே
தலைவனின் வழியொரு பிழைவரா திண்ணமே
காலமும் சதிகளும் குறு தடை போடலாம்
கடைநிலை சத்தியம் வெல்லுமே காணலாம்.
ஆயிரம் வரிப்புலி விதைநிலை உள்ளனர்
வானமே சிதறினும் வரிப்புலி வெல்லுவர்.

நிமிர்ந்தொரு நடையது பெரு முதலாக- தலைவனின்
நேர்கொண்ட கொள்கையே மந்திரமாக
வரமது போற்றிடும் தலைவனே வாழ்க- நீ
பிறந்தது தமிழனின் பெரும் பேறது வாக.
அலைகடல் தாண்டியும் நின்புகழ் மேவின
ஐம்பத்து ஏழொ டாண் டாயிரம் வாழ்க!

கனகதரன்
நன்றி ஈழதேசம் இணையம்.