Sunday, November 27, 2011
ஈழத்தின் தீர்மானங்கள்,
அகன்று திரண்டு அன்பு கனிந்தொரு
அன்னை வளர்த்தாலும்-பிள்ளை
தெருவில் நடந்தொரு பள்ளி பயின்றிட
எதிரி தடையாக.
நிமிர்ந்து எழுந்தனர் கருவி சுமந்தனர்-புலி
தமிழர் படையாகி
களங்கள் திறந்தனர் சமரில் உயர்ந்தனர்
உலகம் வியந்தாக.
படையில் விழுவதும் எழுந்து நிமிர்வதும்
புதிய விதியல்ல
விழுந்த மாவீரர் விதையா யாயினர்
எழுவார் என்றென்றும்.
படலை திறந்தொரு தெருவில் இறங்கிட
பயந்து சிலரோட
நடுத்தெருவில் பலர் கதை முடிந்து
சாவொரு மலிந்த நிலையாக,
களங்கள் திறந்து சுழன்று சமரிடை
புலி நிமிர்ந்த மாவீரன்
குருதி படிந்து புதைந்து கிடந்தமண்
கோவில் லாகாதோ.
சதிகள் குவிந் தொரு நிலையில்
மனமது தளந்து போகாமல்
விமானத் தளங்கள் அழிந்தன
களங்கள் எரிந்தன தமிழர் படையாலே.
திருவில் பிறந்தவள் சிறந்து பயின்றவள்
சிங் களச் சதியை பொறுக்காமல்
குமுறல் விரிந்தொரு சினந்து புலியென
விதந்து களமாட,
குருவி பறந்தது போல ஒரு ரவை
கூவித் துளைத்தோட
கருவி சுமந்தவள் காவலரணிலே
காவிய மானாளே.
உருவை மறைத்தொரு விமானம்
பறந்திடை குண்டு மழை வீச
கொடுமை தகர்த்திட பிறந்த புலியது
இன்று விதையாகி.
மறந்து கிடப்பது (உடை) துறந்த நிலையென
என்று ஆகாதோ
மண் மறைந்து கடலென ஆகிப்போகினும்
மறந்து போவோமோ.
மனித உருவிலே பிறந்த வினையது
"மஹிந்த" நரமாகி
பெரும் படையை நகர்த்தினான்
மரபு மீறியோர் மலிந்த திணையோடு.
எரிந்து தனலொடு மரங்கள் அடியினில்
மறைந்த மாவீரர்.
எழுந்து ஆடுவர் திரும்ப கூடுவர்
மறந்து போகாதே.
ஊர்க்குருவி.
நன்றி ஈழதேசம் இணையம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment