Tuesday, November 8, 2011

7ஆம் அறிவு எமக்காகவா.. ?essay இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளாய் நம்மை இங்கு நாமே தொலைத்தோமே, நம்ப முடியாதா, நம்மால் முடியாதா, நாளை வெல்லும் நாளாய் செய்வோமே, யாருமில்லை தடைபோட உன்ன மெல்ல எடை போட நம்பிக் கையில் நடை போடச் சம்மதமே, என்ன இல்லை உன்னோடு, ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும் வலியோடு பிறந்தி டுமே, வந்தால் மலையாய் வருவோம், வீழ்ந்தால் விதையாய் விழுவோம் மீண்டும் மீண்டும் எழுவோம்''

இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளாய் நம்மை இங்கு நாமே தொலைத்தோமே, நம்ப முடியாதா, நம்மால் முடியாதா, நாளை வெல்லும் நாளாய் செய்வோமே, யாருமில்லை தடைபோட உன்ன மெல்ல எடை போட நம்பிக் கையில் நடை போடச் சம்மதமே, என்ன இல்லை உன்னோடு, ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும் வலியோடு பிறந்தி டுமே, வந்தால் மலையாய் வருவோம், வீழ்ந்தால் விதையாய் விழுவோம் மீண்டும் மீண்டும் எழுவோம்''

இப்போது எங்களின் காதுகளுக்குள் புகும் பாடல் வரிகள் இவை. இதனை விட அதே பாடலில் "நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும் தந்த வீரங்கள் மறக்குமா? கழுத்தோடும் ஒரு ஆயுதத் தைத் தினம் களங்களில் சுமக்கின்றோம். பனிமூட்டம் வந்து படிந்தென்ன சுடும் பகலவன் மறையுமா? அந்தப் பகை மூட் டம் வந்து பணியாமல் எங்கள் இருவிழி உறங்குமா? '' இந்தப் பாடல் வரிகள் உறங்கிய எமது தமிழினத்தை மெல்லத் தட்டியெழுப்பியிருக்கிறது.

ஈழத் தமிழன் வன்னியில் பட்ட அவலத்தை, இலங்கை மண்ணில் ரத்தம் தோய்ந்த நிலையில் வாழ்ந்த தமிழினத் தின் வரலாற்றுக் குறிப்புக்களை எடுத்துச் சொல்லியிருக்கின்றது. உலகில் தமிழீழ விடுதலைப் புலிகள் மாத்திரம் உயர்வாகப் பயன்படுத்திய "சயனைட் '' குப்பியின் மகத்துவத்தை இரண்டே வரிகளில் பாடலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் தீபாவளிக்கு வெளி வந்து ஆறறிவு படைத்த உலகத் தமிழர் களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் 7 ஆம் அறிவு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளே அவை. உணர்வுள்ள தமிழர் களின் உள்ளங்களைக் களவாடியிருக் கின்றது இந்தத் திரைப்படம். இந்தப் பாடல் வரிகளுக்கு நக்கீரன் இணையத் தளம், தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் காணொளிகளை இணைத்து வெளியிட்டுள்ளது. பாடல் வரிகளும் தமிழீழ மண்ணில் நடந்ததை சுட்டிக் காட்டுவதாவே அமைந்திருக்கின்றது.

உலகத் தமிழர்களின் உணர்ச்சிகள் மீண்டும் ஒரு முறை தூண்டப்பட்டிருக்கி ன்றது. இதனை விட படத்தின் கதை வசனங்களிலும் கூட இலங்கை தமிழர்கள் விடயத்தை விட்டு வைக்கவில்லை.

" நம் மள மலேசியாவில அடிச்சாங்க, இலங்கையில் அடிச்சாங்க இப்ப தமிழ் நாட்டுக்கே வந்து அடிக்கிறான். நம்மளால அவன்கிட்ட இருந்து ஓட மாத்திரம்தான் முடியுதில்லே ? , இப்ப ஒவ்வொரு நாட்டிலேம் அடி வாங்கிறம் பார்த்தியா ? திருப்ப அடிக்கணும் '' என்ற சூர்யாவின் பேச்சுக்கு " வீரம் வீரம் என்று சொல்லித்தானே பக்கத்து நாட்டில சண்டை போட்டாங்க. ஜெயிக்க முடிஞ்சுதா ? செத்துத்தானே போனோம்'' என்று ஸ்ருதி பதிலளிக்கின்றார்.

அதற்கு சூர்யா, "வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சுக்கோ. ஒரு தமிழனை ஒன்பது நாடு சேர்ந்து கொல்லுறதுக்கு பேரு வீரமில்ல... துரோகம் ''

இலங்கையின் இறுதிப் போரில் நடந்த கொடூரத்தை அச்சொட்டாய் சொல்லுகின்றது கதை வசனம். உலகெங்கிலும் உள்ள குறிப்பாக ஈழத்தமிழர்களிடையே உணர்ச்சிகளை மீண்டும் முறுக்கேற்றியிருக்கிறது 7 ஆம் அறிவு. அடுத்த தலைமுறைக்காய் எமது வரலாறுகளை எழுதாத எம்மை இந்த இறுதி யுத்த அழிவுகளையாவது எழுதிவைக்க முயன்றிருக்கின்றது ஏழாம் அறிவு.

அதையும் 7 ஆம் அறிவில் சொல்லி வைக்க தவறவில்லை இயக்குநர் முருகதாஸ். படத்தின் இறுதிக் கட்டத்தில் சூர்யா, "நம்ம வரலாற்றை நாம தெரிஞ்சு வைச்சுக்கிறது முக்கியம். நம்ம வீரமும் பெருமையும் நம்மளுக்கு தெரியக் கூடாதெண்டு நம்ம ஆண்ட ஒவ்வொருவனும் திட்டம் போட்டு மறைச்சிருக்கிறாங்க. மதமாற்றம், மொழி மாற்றம், என்று நமக்கான அடையாளத்தை மறைச்சிட்டாங்க. போகிப் பண்டிகையில பழசை எரிக்கணும் என்று சொல்லி ஓலைச் சுவடியை எரிக்க வைச்சாங்க. அதைவிடக் கொடுமை தமிழர்களின் வரலாறு, கண்டுபிடிப்புக்கள், ஆயிரக்கணக்கான அபூர்வமான புத்தகங்கள் இருந்த இலங்கை யாழ்ப்பாணம் நூலகத்தை முழுசா எரிச்சு சாம்பலாக்கிட்டாங்க. எல்லாத்தையும் இழந்திட்டு சின்ன சின்ன நாட்டையெல்லாம் அண்ணாந்து பார்த்து அவங்க பின்னாடி ஓடிக் கொண்டிருக்கின்றோம்''

வரலாறு என்பது எழுதப்படும்போது ஆளும் வர்கத்தார் தமக்கு ஏற்றதாய் எழுதுவதே வழமை. இங்கேயும் 7 ஆம் அறிவிலும் அவ்வாறே ஒரு வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. தமக்குச் சாதகமாய் தம்மை உத்தமர்களாய் காட்டிக் கொள்ள முயன்றிருக்கிறான் ஒரு வன். அவன் யார்? அதை விட எப்போதும் போல இந்திய தே\ம் ஈழத் தமிழர்களை இங்கேயும் கை கழுவி விட்டிருக்கின் றது. கை கழுவியது என்று சொல்வதை விடத் தமது துரோகத்தை மெல்ல மறைக்க முயன்றிருக்கின்றது.

"கைகட்டி வாய்பொத்தி கைக்கூலி யாய் நின்று கண்ணகிக்குச் சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு, தம்பி தம்பி என்று தமிழனை நம்ப வைத்து தக்க சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி, இத் தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணி '' இது ஒரு கவிஞன் அவனை விமர்சித்த வரிகள். இந்த விமர் சனங்கள் போதும் அவன் யாரென உங்கள் மனக்கண்ணில் தோன்ற.
வேறு யாருமல்ல தமிழை வைத்தே தமிழர்களை அழித்த கருணாநிதிதான். தன்னை உத்தமனாய் உருவகிக்க அவன் எழுதும் புது வரலாறே இந்த 7 ஆம் அறிவு. 7 ஆம் அறிவுக்கும் கருணாநிதிக் கும் என்ன சம்பந்தம். நேரடியாய் களமிறங் கினால் தன்னை எட்டி உதைப்பார்கள் தமிழ் மக்கள் என்பதால் பேரனைக் கொண்டு காரியத்தைக் கனகச்சிதமாய் முடித்திருக்கின்றார்.

கருணாநிதியின் மகன் ஸ்டாலின். கடந்த ஆட்சிக் காலத்தில் துணை முதல் வராக இருந்தவர். அவரின் மகனான உதயநிதி ஸ்டாலின் ஊடகவே இந்தக் காரியத்தை தொடங்கியிருக்கிறார் கரு ணாநிதி. உதயநிதியின் ரெட்ஜெயன்ட் மூவிஸே 7 ஆம் அறிவு திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. ஆக மொத்தத்தில் கருணாநிதியின் எண்ணங்களை பேரன் செயல்படுத்தி படமாக்கியிருக்கின்றார்.

கருணாநிதி நேரடியாகக் களத்தில் இறங்காதது ஏன் ? தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் ஈழத்தமிழர்களாக இருந்தாலும் சரி தமிழக தமிழ் மக்களாக இருந்தாலும் சரி தன்னை ஏற்றுக் கொள்ள மாட் டார்கள் என்பது வெளிச்சம். கருணா நிதியைத் தமிழினத் துரோகியாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றனர். எனவே நேரடியாக நுழைந்தால் இந்தத் திரைப்படம் வெற்றி பெறாது என்பதுடன் தமிழ் மக்களும் இந்த வரலாற்றை ஏற்கமாட்டார்கள்.

எனவே தனது பேரனின் ஊடாக அதனை நடைமுறைக்குக் கொண்டு வர முயன்றிருக்கின்றார் கருணாநிதி.

இந்தத் திரைப்படத்துக்காய் தனது முழு வளங்களையும் உயர்ந்தபட்சம் கருணாநிதி பயன்படுத்தியிருக்கின்றார். இதுவரையில் உதயநிதி ஸ்டாலினின் "ரெட்ஜெயன்ட் மூவிஸ்" தயாரிப்பில் பல படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றின் விளம்பரங்கள் தொடக்கம் பாடல் வெளியீடு உட்பட அனைத்தும் கலைஞர் தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பாகும்.

இந்த முறை 7 ஆம் அறிவு திரைப்படத்தின் விளம்பரங்கள் சன் தொலைக்காட்சியின் ஏனைய அலை வரிசைகளிலும் ஒளிபரப்பாகின்றன. இதனைவிட படக் குழுவினருடனான சந்திப்புக் கூட படம் வெளியாகிய தினம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இவ்வாறு உலகத் தமிழர்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்துவதற்காக கருணா நிதி எடுத்த முயற்சி கலப்படமில்லாமல் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.

சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல் கருணாநிதி ஏன் ஈழத்தமிழருக்காய் 7 ஆம் அறிவில் ஒரு சில நிமிடங்கள் ஒதுக்கியிருக்கின்றார். தற்போது தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஈழத் தமிழரின் விடயங்களே மிக மலிவாகப் பேசப்படுகின்றன.

மறுபுறம் அம்மா கூட ஈழத்தமிழர்களின் இழப்பை வைத்தே தனது ஆட்சிக் கதிரைக்கு வலு சேர்த்தார். வெற்றிக்காக மட்டும்தான் அவ்வாறு என்றால் அந்த அம்மாவின் செயற்பாடுகள் ஈழத்தமிழரை மையப்படுத்தி சென்றுகொண்டிருக்கின்றது. அது சென்று கொண்டிருக்கின்றது என்பதை விட தமிழகமக்களிடம் அது வென்று கொண்டிருக்கின்றது என்று சொல்லலாம்.

இந்த நிலை தொடருமானால் தள்ளாடும் வயதில் தன்னால் மீண்டும் ஆட்சிக் கதிரைக்கு வரமுடியாமல் போய்விடுமோ என்று அச்சப்பட்டு அவசர அவசரமாய் களத்தில் குதித்திருக்கிறார் கருணாநிதி.

அம்மாவின் ஆசீர்வாதத்தோடு களமிறங்கிய விஜயின் வேலாயுதம் பரிதாபமாக நிற்கின்றது. இங்கு தமிழனைக் குழி பறிக்க தமிழினிடமே புகுந்த 7 ஆம் அறிவு வெற்றிக் கொடி கட்டுகின்றது.

ஈழத்தமிழ் மக்களையும் உலகத்து தமிழ் மக்களையும் பொறுத்த வரையில் இலங்கையின் இறுதிக் கட்டங்களில் நடந்த போரின் கொடூரத்தை வைத்து உல கில் தமிழினத்துக்கு அங்கீகாரம் வாங்கி விடத் துடிக்கின்றனர். அதனை வைத்து தான் செய்த பித்தலாட்டங்களை மறைத்து மீண்டும் தனது இருப்பை நிலை நிறுத்த முயற்சிக்கின்றார் கருணாநிதி.

இறுதி யுத்தத்தின் கணங்களையும் இலங்கையில் நடந்த அநீதிகளையும் சுட்டிக்காட்டிய 7 ஆம் அறிவின் இயக்குநர் முருகதாஸால் ஏன் கருணாநிதி ஆடிய பத்தலாட்டங்களைத் தொட்டுவிட்டுக் கூடச் செல்ல முடியவில்லை.

இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண் டிருந்தபோது மொத்த தமிழினமும் ஏங்கித் தவித்தபோது தமிழகத்தில் இடம்பெற்ற தேர்தலுக்காய் முதலமைச்சர் நாற்காலியில் இருந்து கொண்டு நான்கு மணி நேரம் நடத்திய உண்ணா விரத நாடகத்தை மறந்து விட்டார்களா? தமிழனுக்காய் நீதி கேட்பதாய் டெல்லி பறந்து தனது உறவுகளுக்காய் அதிகாரம் கேட்டதை மறந்து விட்டார்களா ? தமிழ்ச் செல்வனுக்காய் கவிபடித்து பாராட்டு பெற முயன்றதை மறந்து விட்டாயா ? தந்தியடித்து தந்தியடித்து ஏமாற்றிய காலங்கள் உங்களுக்கு ஞாபகத்துக்கு வரவில்லையா ? மனித சங்கிலி என்று மக்களை நடு வீதியில் நிற்க வைத்துவிட்டு காரில் உல்லாசமாய் சுற்றிப்பார்த்து ஏமாற்றியது இவர்களுக்கு தெரியவில்லையா ?

இவ்வாறு கருணாநிதி ஈழத் தமிழர்களுக்கு செய்தவையெல்லாம் முருகதாஸால் படத்தில் ஓர் இடத்தில் கூட முனங்க முடியவில்லையே ?

இதனை விட தெளிவாக " நாங்கள் முதலில் இந்தியர்கள். அதன் பின்னர் தான் தமிழர்கள்'' என்பதையும் படத்தில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் முருகதாஸ்.

அதாவது 7 ஆம் அறிவின் திரைக்கதைபடி இந்திய தேசத்தை அழிக்க வரும் சீன நாட்டவனை சூர்யா எதிர்க்கின்றார். அப்போதுதான் "நம்மள மலேசியாவில அடிச்சாங்க, இலங்கையில் அடிச்சாங்க இப்ப தமிழ் நாட்டுக்கே வந்து அடிக்கிறான்'' என்று சொல்கின்றார்.

மொத்தத்தில் இலங்கையில் தமிழனை அழித்ததையும் சீனாவின் மீது பழி போட்டு, இந்தியா செய்த துரோகத்தையும் கருணாநிதி செய்த துரோகத்தையும் போக்க முயன்றிருக்கின்றார்.

இப்போது புரிகின்றதா ? 7 ஆம் அறிவை பின்னின்று இயக்குபவன் யாரென்று. தனக்காய் தான் எழுதிய வரலாற்றை எங்களுக்குள் எப்படித் திணிக்கின்றான் என்று. இதை அறியாமல் நாம் 7 ஆம் அறிவு ஈழத்தமிழரின் திரைப்படம் என்று கத்தித் திரிகின்றோம். இதனை விட சமூக வலைத்தளமான "பேஸ்புக்கில்" 7 ஆம் அறிவுக்காய் எத்தனை போராட்டங்கள்.

எங்களை அறியாமல் எங்களின் துரோகிக்கு நாங்கள் மீண்டும் இடம் கொடுக்கின்றோம். மீண்டும் கருணா நிதியை பலப்படுத்துகின்றோம். மீண்டும் இந்திய தேசத்தின் காலடிகளை கழுவுகின்றோம். எமது வரலாற்றை நாமே எழுதும் வரை இவ்வாறு கருணாநிதி போன்ற புல்லுருவிகள் தங்களுக்காய் எங்களின் வரலாற்றை மாற்றியமைத்து எங்களிடமே பிழைப்பு நடத்துவார்கள்.

நன்றி, உதயன் இணையம்.

No comments: