Saturday, November 19, 2011

பொன்சேகாவுக்கு 3 வருஷ நீடிப்பு, கூத்தாடி குசும்பன்.18,


  விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன் மற்றும் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோர் உட்பட வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலி உறுப்பினர்கள், கோத்தபாயவின் கட்டளைக்கு அமைய சுட்டுக்கொல்லப்பட்டாகள் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியதற்கு எதிராக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் பொன்சேகா பொய் கூறினார் என தீர்ப்பளித்த ஸ்ரீலங்காவின் மேல் நீதிமன்றம் அவருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதித்திருக்கிறது.

ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் நச்சுப்பாம்புகளில் ஒன்றான முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா வெளியில் வந்தால் ராஜபக்க்ஷகளை காட்டிக்கொடுத்து திருப்பி தாக்கக்கூடும்.  அடிபட்ட பாம்பான பொன்சேகா சர்வதேசத்தில் அறியப்பட்டுவிட்டார் என்பதையெல்லாம் கருதி தமக்கான காலம் கனியும்வரை பொன்சேகாவை ராஜபக்க்ஷ தரப்பு சிறையில் வைத்திருக்க விரும்பியிருக்கக்கூடும்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் மூலம் ராஜபக்க்ஷவுக்கு  இருக்கும் பூதாகரமாக சிக்கல்கள் போதாதென்று, இன்னும் சிக்கலை பெரிதாக்கி சர்வதேசத்திடம் பொன்சேகா போட்டுக்கொடுக்கவும்கூடும் அது ராஜபக்க்ஷவுக்களுக்கு பெருத்த அனுட்டக்குற்றமாக அமையும் என்பது அனைவரும் அறிந்ததே. 

புதிதாக இன்னும் ஒரு சிக்கலை தோற்றுவிக்காமல் காதும் காதும் வைத்தாற்போல சிறையில் இருக்கும் பொன்சேகாவுக்கு தொடர்ந்து பாணும் சம்பலும், கிரிபத்தும், சாப்பிட மூன்றுவருடம் நீட்டி ராஜபக்க்ஷக்களின் விருப்பத்திற்கமைய நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருக்கிறது.

இதொன்றும் ஸ்ரீலங்காவுக்கு புதினமான சமாச்சாரமும் கிடையாது. ராஜபக்க்ஷவை எவர் எதிர்த்தாலும் இதுதான் கதி என்பதை மீண்டும் ஒருமுறை நீதிமன்றத்தின் மூலம் அராஜகம் நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒருவிதத்தில் அதுதான் காலத்தின் கட்டளையும். ஏனென்றால் காரணம் எதுவாகவும் இருக்கலாம் ஆனால் சரத் பொன்சேகாவும் சாகும் வரை சிறையில் இருக்கவேண்டிய படுகொலைக்குற்றவாளியே.

வெற்றிவிழா நிகழ்ச்சி நடத்திய ஒரு சந்தற்பத்தில் இராணுவ வீரர்கள் மத்தியில் ராஜபக்க்ஷ பேசும்போது இராணுவ வீரர்கள் நாட்டின் கண்கள் என்றும், மண்ணின் மைந்தர்கள் என்றும், வாணளாவ புகழ்ந்து தள்ளிய மஹிந்தர், தான் நாட்டுக்காக உயிரை விட்டாலும் விடுவேனே தவிர போர் வீரர்கள் எவரையும் எந்தச்சந்தற்பத்திலும் காட்டிக்கொடுக்கமாட்டேன் என சபதமிட்டு சத்தியம் செய்திருந்ததை எவரும் மறந்திருக்க முடியாது.

சமீபத்தில் சர்வதேசம் ராஜபக்க்ஷவை கை கழுவி கைவிட்ட நிலையில். நண்பன் இந்தியாவும் திகைப்பூண்டில் கால் வைத்து திகைத்த நிலையில் தடுமாறிக்கொண்டிருக்கிறது. இருந்தும் சட்டத்தின் ஓட்டைகளையே பாவித்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் இந்தியா, ராஜபக்க்ஷவுக்கு தனது ஆலோசலையை அவிழ்த்துவிட்டு சட்டத்தின் ஓட்டையை பாவிக்க சொல்லிகொடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்தியாவின் ஆலோசனைக்கேற்ப, கேணல் ரமேஷ் மற்றும் விடுதலைப்புலிகளின் போராளிகளை கொலைசெய்ததன் மூலம் மனித உரிமையை மிறி நடந்தார்கள் என சில ராணுவச்சிப்பாய்களை குற்றவாளியாக்கி தான் தப்பிக்க ராஜபக்க்ஷ தந்திரம் தேடி சில நோய் ஆடுகளை  (இராணுவத்தினரை) பலிகொடுக்க தாயாராகி விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியா இலங்கை இரு பிரிவும் மலைதீவில் அலசி ஆராய்ந்து தேடிய வகையில் கையில் கிட்டிய மருந்து. சில இராணுவ வீரர்களை பிடித்து. போர்க்குற்றவாளியாக்கி ஒப்புக்கு சிறையில் சிலகாலம் அடைத்துவிட்டால் சர்வதேசத்தின் கண்களுக்கு சர்வமும் சரியாகிவிடும் என்பது இவர்களின் கணக்கு.
இந்த விளையாட்டை கச்சிதமாக செய்தால் சர்வதேசம் அடங்கிவிடும் பிறகு மீதியை பார்த்துக்கொள்ளலாம் என திருடர் கூட்டம் திட்டம் தீட்டப்பட்ட்டிருப்பதாக செய்திகள் வலம்வருகின்றன, இந்த விளையாட்டு எங்கு சென்றுமுடியும் என்பது போகப்போக தெரியவரும்.
கேணல் ரமேஷ் அவர்களை சித்திரவதை செய்து படுகொலை செய்த புகைப்பட விடியோ ஆதாரமும் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அரசியல்ப்பொறுப்பாளர் நடேசன் மற்றும் புலித்தேவன் அவர்களின் படுகொலைச்சம்பவங்களும் முதல்த்தரமான போர்க்குற்றமாக சர்வதேசத்தால் நோக்கப்படுவதாக தெரிகிறது.
"பாட்டும் நானே பாவமும் நானே" என்றுதான் ராஜபக்க்ஷ இலங்கையை வழிநடத்தி வந்தார். இப்போ பாட்டை மாற்றி "பாடும் உனை நானா பாடவைத்தேன்" என்று இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்த தயாராகிறார். குற்றவாளிகள் அனைவரும் இனங்காணப்படும்வரை மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி முடிவில் "எளியாரை வலியார் வருத்தினால் வலியாரை தெய்வம் வருத்தும்" என்ற கதையுடன் எல்லாம் முடிவுக்குவரும்.

ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்க்ஷ ஸ்ரீலங்கா இராணுவத்தின் பிரதம தளபதியாக மட்டுமல்ல முப்படைகளின் தளபதியுமாவார், அத்துடன் ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு மந்திரியாகவும் மஹிந்த ராஜபக்க்ஷவே இருந்து வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் பாதுகாப்பு அமைச்சின் அனைத்து அதிகாரமும் கொண்டு. அசைக்கமுடியாத கட்டளையிடும் சர்வ அதிகாரம் கொண்டவராக இருப்பவர் ஜனாதிபதியின் உடன்பிறப்பான கோத்தபாய ராஜபக்க்ஷ.

இவர்களுக்குப்பின் பசில் ராஜபக்க்ஷ, நாமல் ராஜபக்க்ஷ, சமல் ராஜபக்க்ஷ. இன்னும் பல பக்க்ஷக்கள் இருந்தும். இவர்களது கட்டளையில்லாமல் 100 இராணுவ சிப்பாய்கள் மனுநீதியை மீறி நடந்துவிட்டனராம்.

ஏதோ வகையில் குற்றம் சாட்டப்பட்ட சரத்பொன்சேகா போர் முடிவடையும்வரை முன்னணியில் நின்றவர். மஹிந்த மற்றும் கோத்தபாயவின் கட்டளைகளை நிறைவேற்றியவர் பொன்சேகா. பொன்சேகா கூறியபடி அரசியல் பொறுப்பாளர் நடேசன் புலித்தேவன் உட்பட்ட முந்நூறுபேர் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு உண்டு. அந்தச்சந்தற்பத்தில் சகல அதிகாரிகளிடமும் தொடர்பிலும் இருந்தவர் கோத்தபாய, மற்றும் பசில் ஆகியோர். ஆனால் இன்று பலியாடாக இருப்பவர்கள் மூன்றாம் நிலையில் உள்ள இராணுவ சிப்பாய்கள்.

ஆனால் காலம் குறிப்பிட்ட வேஷதாரிகள் ஒருவரையும் தப்பாமல் சரியாக வெவ்வேறு விதங்களில் இனங்காட்டிக்கொண்டிருக்கிறது.

இனப்படுகொலைக்கு அஸ்த்திவாரமிட்டு மூர்க்கமான துவேஷத்துடன் நின்று சதிராடியவர். மஹிந்த ராஜபக்க்ஷ.

அனத்துக்கும் கை கொடுத்து சதிசெய்து சர்வதேசத்தை தலையிட விடாமல் வஞ்சகமாக போரை நடத்தி இனப்படுகொலைக்கு உதவிய நாடுகளில் முன்னணியில் நின்றது இந்தியா. 

இந்தியாவின் ஈனமான படுகொலைக்கு வேஷம் கட்டி நாடகங்கள் மூலம் நீலிக்கண்ணீர் வடித்து மக்களை ஏமாற்றி உதவி புரிந்தவர் கருணாநிதி.

மஹிந்தருக்கு வலது கரமாக செயற்பட்ட சரத் பொன்சேகா காலத்தின் கட்டளைப்படி சிறையில் வாடுகிறார். மஹிந்தர் சுற்றி சுருக்கு கயிறு தொங்க கான்ஸர் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வந்திருக்கின்றன. அவை ஒருபுறம் இருந்தாலும் மஹிந்தரை உலகம் நிம்மதி இழக்க வைத்திருக்கிறது, அவர் போகுமிடமெல்லாம் அவதிப்படுவது உலகறிந்த உண்மையாக தெரிகிறது.

அடுத்து முண்டுகொடுத்து உதவிய நாடு இந்தியா. இந்தியாவை ஆட்சி செய்யும் காங்கிரஸ் இன்று அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லாமல் ஊழல் குற்றச்சாட்டுக்களிலும். இலங்கைக்குள் ஊடுருவிவிட்ட சீனாவை எதிர்கொள்ளுவது எப்படி என்ற தள்ளாட்டத்தில் திகைப்பூண்டில் மிதித்துவிட்ட திருடன்போல் தடுமாறுகிறது. தள்ளாட்டம் பெரிய அளவில் தெரிவதற்கு சிலகாலம் எடுக்கலாம் ஆனால் இந்தியாவை ஆட்சிசெய்யும் காங்கிரஸை சனியன் பிடித்துவிட்டது தெளிவாக தெரிகிறது. அத்துடன் அத்தனைக்கும் சகுனியாக நின்ற சோனியாவுக்கு புற்றுநோய் தாக்கி அமெரிக்க மருத்துவமனையில் அழுகிய பாகம் வெட்டி எறிந்ததாகவும் புற்று முற்றுமுழுதாக அப்புறப்படுத்த முடியவில்லை என்றும் காற்றில் அலையென கசிந்த செய்திகள் சொல்லுகின்றன. 

வஞ்சகமாக இனத்துரோகத்துக்கு துணை நின்ற. பசி எனப்படும் சிதம்பரம் ஸ்பெக்ரம் ஊழல் குற்றவாளி என்று, சு சுவாமி சிதம்பரத்தை பெரிய சிக்கலில் மாட்டி விட்டிருக்கிறார். சிதம்பரம் நிம்மதி துறந்து பல நாட்களாகிவிட்டன.

நடக்க திராணியற்றும் தள்ளு வண்டியில் சப்பாணியாக வலம்வந்து சோனியாவுக்கு உடுக்கு அடித்து ஊளையிட்டு நாடகமாடிய நாடகமணி கருணாநிதி,, சகலத்திலும் ஒதுக்கப்பட்டு சாவீட்டில் பெண்களின் ஒப்பாரியை விஞ்சும் விதத்தில் ஓலமிடுவது பார்க்க பரிதாபமாக இருந்தாலும் காலம் கண்ணை கட்டிக்கொண்டு தர்மத்தின் கட்டளையை நிறைவேற்ற முற்படுவதாகவே புலப்படுகிறது.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவலாம் ஆனால் தர்மம் வெல்லும் அதுதானே கீதையின் விதியும். 

மீண்டும் சந்திப்போம் 

No comments: