Saturday, October 22, 2011

பன்றியுடன் சேர்ந்ததால் கனிமொழி என்ற கன்றும், மலம் தின்று சிறுமை பெற்றிருக்கிறது.

கூத்தாடி குசும்பன்> அங் 16,





"பன்றியுடன் சேர்ந்த கன்றும் மலம் தின்னும்" என்று ஒரு பழைய சொலவடை உண்டு.

ஆராய்ந்து பார்த்தால், விவேகம் நற்பண்புகள் இல்லாத, சுத்தம் குறைந்த விலங்கான பன்றி, இயல்பில் மலம் மற்றும் கழிவுகளை உணவாகக்கொள்ளக்கூடியது,

அந்த பன்றியுடன் ஒட்டி உறவாட அனுமதிக்கப்படும் பசுக்கன்றும், பன்றியின் பழக்க வழக்கங்களை விளையாட்டாக பின்பற்றி மலத்தை உட்கொள்ள பழகிவிடும் என்று சொல்லப்படுகிறது.

இந்தப்பழமொழியை அனுபவரீதியாக அறிந்து கிராம மக்கள் புளக்கத்தில் வைத்திருப்பதை காணலாம். கெட்ட செயலில் ஈடுபடும் இன்னுமொருவருடன் ஒட்டி உறவாடும் ஒருவர், நாளடைவில் மற்றவரின் பழக்கங்களை பின்பற்றி கெட்டுப்போகக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அந்த முதுமொழி அறிவுறுத்துகிறது.

மேல் குறித்த விலங்கினங்களை ஒத்த குணாம்ஷம் கொண்டவனல்ல மனிதன், இருந்தும் மொழியானாலும் சரி உணவுப்பழக்க வழக்கமானாலும் சரி வட்டாரத்தையொத்து பின்பற்றும் வாழ்வியலை மனிதன் வழிக்கொண்டு வகுத்துக்கொள்ளுகின்றான்.

அந்தவகையில் ஒரு நல்ல வட்டாரத்தின் சூழலில் பிறந்து வளர்ந்த ஒருவரான
Karunanidhi and Kanimozhi
கருணாநிதி கனிமொழி, அவர்கள், அவரது தந்தை முத்துவேல் கருணாநிதியின் தவறான வழி காட்டுதலால் இன்று "பன்றியுடன் சேர்ந்த கன்றின்" நிலையில் மிகுந்த சிரமத்தை வாழ்க்கையில் சந்தித்திருக்கிறார்.

தனது பெற்றோரின் வழிகாட்டல் தவறானதென, இப்போ சிறையிலிருக்கும் இந்த தருணத்தில் கனிமொழி ஒருவேளை உணரவும் கூடும். இதுபோன்ற முன்னுதாரணங்கள் நாகரீக மனித வாழ்வில் தொடரக்கூடாது,

கனிமொழி அவர்கள் நன்கு கற்றறிந்த விவேகமானவர், ஒரு உயர் குடும்பத்தில் பிறந்த குடும்பப்பெண். ஒரு குழந்தைக்கு தாய். பிறந்த காலம் தொட்டு வாழ்க்கைச்சூழல் கனிமொழி அவர்களை ஒரு இக்கட்டான நிலையில் வைத்திருக்கவுமில்லை.

வாழ்க்கையில் கஸ்ட்டங்களை ஒருபொழுதும் கனிமொழி அனுபவிக்கும் துரதிஸ்டம் கிடைக்கப்பெற்றவருமில்லை. குதூகலத்துடன் களிக்கவேண்டிய வாழ்வை, அவரது தாய் தந்தை எண்ணத்தில் எழுந்த பேராசை வேறு திசையில் திருப்பி கனிமொழியின் வாழ்வை இருண்ட பக்கத்திற்கு செலுத்தியிருக்கிறது,

மனுதர்ம பண்புகளின்படி ஒருவர் தனக்கு பிடித்தமான வகையில் நல்லதோ கெட்டதோ செய்யமுடியும். அவர் செய்வது நல்ல காரியம் என்றால் அவற்றை ஊக்குவிப்பதும் கெட்ட செயலாக இருந்தால் அவற்றை விட்டு விலகும்படி செய்வதுதான் பெற்றோரின் கடமை.

இவை அனைத்தையும் படித்து கரைத்துக்குடித்ததாக மனித வர்க்கத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கும் கருணாநிதி, தனது பேராசையின் விளைவாக குறுக்கு வழியில் நாட்டம் கொண்டு, கனிமொழியை தவறான பாதைக்கு உந்தி தள்ளி ஊழல்க்குற்றவாளியாக்கி சிறைக்குள் தள்ளி இலகுவில் வெளிவரமுடியாத சிக்கலான சிறுமையை உண்டுபண்ணிவிட்டு தானும் மிகுந்த வேதனைக்குள் விழுந்து எழுந்திருக்க முடியாமல். தத்தளிக்கிறார்.

ஸ்பெக்ரம், ஊழல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு கடந்த ஆறு மாதங்களாக சிறையில் இருந்துவரும் கனிமொழி, சென்ற 17 திகதி பிணையில் வெளிவருவதற்கான சூழ்நிலை இருந்ததாக பரவலாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அது நடைபெறவில்லை.

நாட்டின் மிகப்பெரிய ஊழல் மோசடி என வர்ணிக்கப்படும் கருணாநிதியின் கைங்கரியம் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவை பகிரங்கமாக்கப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படவேண்டுமென சமூக நலன்கருதி விரும்பியவர்களில் நானுமொருவன்.

அதேநேரம் கனிமொழி ஒரு பெண் என்கிற அடிப்படையிலும் ஒரு குழந்தையின் தாய் என்ற நெகிழ்வுடனும் மனிதாபிமான நோக்குடனும், நீதிமன்றம் அலசி விசாரித்து தீர்ப்பு வழங்கும் முன், தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது மனித உரிமை மீறல் என்பதும் பொதுவான கருத்து.

ஒரு குறிப்பிட்ட கால தடுப்பு விசாரணையின் பின் சட்டத்திற்குட்பட்டு, கனிமொழி பிணையில் வெளியேவந்து சட்டப்படி வழக்கை சந்திக்க வேண்டுமென விரும்பும் மனிதாபிமானம் கொண்டோரில் நானும் ஒருவன்.

2G மோசடியில் முக்கியமானவர்கள் வெளியில் இருப்பதாகவும், அவர்கள் உயர் மட்டங்களில் இருப்பதால் (குறிப்பாக உள்த்துறை மந்திரி ப சிதம்பரம், பிரதம மந்திரி மன்மோஹன் சிங், முன்னாள் தொலைத்தொடர்பு/ மற்றும் ஜவுளித்துறை மந்திரி தயாநிதி மாறன்.போன்றோர்.) தற்போது பிடிபட்டு சிறையில் இருப்பவர்களை பிணையில் வெளியேவிடாமல் தடுத்து வழக்கை குறுகிய வட்டத்துள் முடக்கி முடித்துவிட மேல் மட்டம் முனைப்புக்காட்டி வருவதாக பலதரப்பட்ட தரப்பிலிருந்தும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

அவற்றில் எவ்வளவு வீதம் உண்மை இருக்கிறது என்பது என்போன்றோருக்கு தெரியாவிட்டாலும், பல பலமான ஊடகங்கள் இவற்றை தெளிவாக வலியுறுத்தி ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

கனிமொழி நேரடியாக குறிப்பிட்ட துறையில் நிர்வாகம் செய்த ஒருவரல்ல,
Raja and Kanimozhi
மாறாக ஏதோ ஒருவிதத்தில் முறைகேடாக ஊடுருவி செல்வாக்கை பயன்படுத்தி குற்றச்செயலில் ஈடுபட்டிருந்தாலும். அதற்கு துணைபோன குறிப்பிட்ட துறை சார்ந்தவர்களே மோசடி தண்டனைக்குரியவர்கள்.

விசாரணை நடத்திவரும் சிபிஐ மற்றும் விஷேட புலனாய்வுத்துறையினர், நேரடியாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்களையும், ஒப்புதல் கொடுத்து துணைபோன மேல் மட்டத்தில் உள்ளவர்களையும் முதலில் ஒளித்து மறைக்காமல் பகிரங்கப்படுத்தவேண்டும்.

கனிமொழியும் விசாரணைக்கு தேவை எனும் பட்சத்தில். அழைப்பாணை விடுத்து விசாரணை நடத்தலாம், எனவே கனிமொழியை ஒரு பெறுமதியான பிணையில் வெளியேவந்து ஏன் வழக்கை சட்டப்படி சந்திக்கக்கூடாது என்பதே என்னுள் எழுந்திருக்கும் ஆதங்கமான வாதமாகும்.

22 10 2011 சனி கீழ் குறித்த செய்தி வெளியாகியிருக்கிறது,

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, திமுக எம்பி கனிமொழி ஆகியோர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 409ன் கீழ் நம்பிக்கை துரோக வழக்கை இன்று 22 10 2011 நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் கடந்த மாதம் 26ம் தேதி இந்திய தண்டனைச் சட்டம் 409-ம் பிரிவின் கீழ் நம்பிக்கை துரோக மோசடி என்ற புதிய குற்றச்சாட்டை இந்த 17 பேர் மீதும் சிபிஐ பதிவு செய்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் "ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்". இதனால் சிபிஐயின் இந்த புதிய குற்றச்சாட்டுக்கு 17 பேரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந் நிலையில் இன்று இது தொடர்பாக நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவு பிறப்பித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும், ரிலையன்ஸ் டெலிகாம், ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் வயர்லெஸ்-தமிழ்நாடு ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120ன் கீழ் கிரிமினல் சதி (criminal conspiracy) குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

அதே நேரத்தில் ராசா, கனிமொழி ஆகியோர் மீது நம்பிக்கை துரோக மோசடி குற்றச்சாட்டை பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.

ராசா, கனிமொழி தவிர கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார், ராசாவின் உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா உள்பட 17 பேர் மீதும் கிரிமினல் சதி குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மீது ஊழல், ஏமாற்றல், உயர் பதவியை தவறாக பயன்படுத்தியது, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட குற்றப் பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் கனிமொழி, ராசா உள்ளிட்டவர்களுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுவிட்டதால் 2ஜி வழக்கில் அடுத்தகட்ட விசாரணை (trial) ஆரம்பமாகவுள்ளது.

மேற் குறிப்பிட்ட செய்தி, இந்திய தண்டனைச்சட்டப்படி செல்லுபடியானதாக இருந்தாலும், 2G மோசடியில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் பாகுபாடில்லாமல் தண்டனை கிடைக்க வழி செய்வார்களாக இருந்தால் இந்திய அரச நிர்வாகத்தையும், நீதித்துறையையும் போற்றி பாராட்டுவது தப்பானதல்ல,

நீதித்துறை பாகுபாடில்லாமல் அனைவரையும் விசாரணை வளையத்துள் கொண்டுவந்து விசாரித்து தீர்ப்பு வழங்கவேண்டும்.

சந்தேகத்துக்குரிய முக்கியமானவர்கள் எனச்சொல்லப்படும் ப சிதம்பரம். மற்றும் பிரதமர் மன்மோஹன் சிங், பற்றிய முறைகேடுகள் அவர்களை நேரில் அழைக்காமல் ஆவணங்களை பரிசீலித்தாலே வெளிவரும் சாத்தியம் ஒளிவு மறைவின்றி இருக்கிறது. குற்றம் உறுதியாகும் பட்சத்தில் பாகுபாடு இல்லாமல் அவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்கலாம். அதுதான் தர்மம் நியாயம்.

நீதித்துறை பாகுபாடில்லாமல் செய்யும் பட்சத்தில், வரும் காலங்களில், கறுப்பு அரசியல்வியாபார மனிதர்களை அரசியலில் உள் நுளையவிடாமல் தடுக்கவும் முடியும்.

கருணாநிதி என்ற தனிமனிதனின் சுயநலவாதக் கட்சியால் இந்திய பொருளாதாரத்தில் 176,000. கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. அவை ஒருபுறம் போக, ஸ்பெக்ரம் ஊழலை விசாரிக்கவும், குற்றவாளிகளை பாதுகாக்கவும், இன்னுமொரு 5,000. கோடி செலவுசெய்யப்படும் என்பதை இந்தியக்குடிமகன்கள் எவரும் அறிந்துகொள்ளவில்லை. இதிலும் கணிசனான பணம் ஊழல் செய்யப்படுவதை எவராலும் தடுக்கமுடியாது.

கனிமொழி களவாடியதாக சொல்லப்படும் 214 கோடி ரூபாய்களை உள்வாங்கிய இடம், கலைஞர் தொலைக்காட்சி நிலையம் என்பதே விசாரணைகளில் வெளிவந்திருக்கும் அதிகாரபூர்வமான தகவல். கலைஞர் தொலைக்காட்சி யாருடையது என்றால், சிறு குழந்தையும் ஸ்ரீமான் கருணாநிதி அவர்களையே சுட்டிக்காட்டும். அதுதான் யதார்த்தமான உண்மையும் கூட.

அது உண்மையானால் நாட்டில் கூறப்படுவதுபோல பினாமி அடிப்படையில் கருணாநிதி கலைஞர் தொலைக்காட்சியின் பங்குகளை சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தனது குடும்பத்தினருக்கு பிரித்து கொடுத்திருக்கிறார் என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. இதனால் சட்டப்படி கருணாநிதியை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் கலைஞர் ரிவி நிறுவனத்தை சட்டப்பட்டி முடக்கியிருக்க முடியும் ஆனால் அது நடைபெறவில்லை.

கருணாநிதி தனது நீண்டகால அனுபவத்தை மிக நுணுக்கமாக பயன்படுத்தி காரியம் சாதிக்கக்கூடியவர், அந்த வழியில் கனிமொழியை பயன்படுத்தி தோற்றுப்போனார் என்றே சொல்லலாம்.

கருணாநிதியின் விஞ்ஞானத்தில் உருவாகி கனிமொழிமீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, கருணாநிதி பகிரங்கமாக தானே ஏற்றுக்கொண்டு பெற்ற மகள் கனிமொழியை, விடுவிப்பது ஒரு தந்தையின் கடமையல்லவா. கருணாநிதியின் வழிகாட்டல் இல்லாமல் குறிப்பிட்ட ஊழலை கனிமொழி கையாண்டிருக்க முடியாது என்பது நூற்று இருபது கோடி இந்தியர்களில் நூறு கோடிப்பேராவது ஏற்றுக்கொள்ளுவார்கள்.

நாற்பத்து ஐந்து வயதான மகளை சிறைப்படுத்திவிட்டு, தொண்ணூறு வயதாகி முடிவுகாலத்தை நெருங்கிவிட்ட கருணாநிதி தினமும் ஏதோ ஒன்றை பிடித்து வியாக்கியான வில்லங்கம் செய்துகொண்டிருப்பது நாகரீகமாக இருக்கிறதா, இதை ஏன் அவர் உணரவில்லை.

வயோதிபம் காரணமாக அவர் உணர்ந்துகொள்ளும் தன்மையை இழந்துவிட்டரென்றால், கட்சியின் அடுத்த நிலையில் இருப்பவர்களும் அவரது வாரிசுகளும் நிலமையை எடுத்துச்சொல்லி ஏன் புரியவைக்கக்கூடாது,

இன்று கருணாநிதி டில்லிக்கு விரைந்திருக்கிறார் அவர் டில்லியில் சென்று இறங்கி தள்ளு வண்டியில் கால் பதிக்கும் நேரத்தில் கனிமொழியின்மீதி நம்பிக்கை மோசடிச்சட்டம் 409 பாய்ச்சப்பட்டிருக்கிறது.

கனிமொழிமீது சுமத்தப்பட்ட வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்றும். பொய்க்குற்றச்சாட்டை நிரூபித்து நிரபராதியாக கனிமொழியை மீட்போம் என்றும், இது சம்பந்தமாக சோனியாவை ஒருபோதும் சந்திக்கமாட்டேன் என்றும். பொதுக்குழு உயர்மட்டக்குழுக்களை கூட்டி தீர்மானங்களை ஐயன் கருணாநிதி அள்ளிவிட்டது எவரும் மறந்திருக்க முடியாது,

அனைத்தும் கைமீறி போன இறுதி கட்டத்தில் வேறு புலுடா விட வழியில்லாமல், எல்லாவற்றையும் துறந்து சோனியாவை கருணாநிதி சந்தித்திருக்கிறார்.

இலகுவாக கையாளக்கூடிய விதத்தில் இருந்த விடையம் அனைத்தையும் வரட்டு பிடிவாதத்தால் குட்டிச்சுவராக்கி குளப்பிய நிலையில் இன்று மிக மிக சாமானியனாக கருணாநிதி அவலப்படுவது அனைவருக்கும் பரிதாபத்தை உண்டுபண்ணுகிறது.

இப்போதும் கூட கருணாநிதி பின்வழி மூலம் காரியம் சாதித்து தப்பிக்கவே விரும்புகிறார்.

சோனியா என்ற பெண்மணி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கிறாரே தவிர, இந்திய நாட்டின் அடிப்படையில் தலையிடக்கூடிய தகுதி கொண்ட பிரதமரோ, குடியரசுத்தலைவரோ, அல்ல என்பது கவனிக்க வேண்டிய அம்ஷமாகும்.

திரும்பத்திரும்ப கருணாநிதி தப்பின்மேல் தப்பு செய்வதற்கே முன்னுரிமை கொடுத்துக்கொண்டிர்ருக்கிறார். என்பதை திமுகவின் அடிமட்டத்தொண்டனும் அறிந்துகொள்ள வேண்டும்.

தவறுகள் நடப்பது இயல்பானதே, பொது வாழ்வில் உள்ள சராசரி மனிதன் அனுபவத்தின் பின் ஒருகட்டத்தில் ஓரளவேனும் திருந்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

கருணாநிதியின் வக்கிர வழிகாட்டலால் கனிமொழி அவர்கள் ஈழத்தில் எனது உறவுகள் பல்லாயிரம் பேர் அழிய காரணமாயிருந்தவர், இருந்தும் பழிதீர்க்கும் மனநிலையில் எங்கள் இனம் இல்லை.

கனிமொழி ஊழல் வழக்கை சட்டப்படி சந்திக்கட்டும் அது நியாயமானது. முக்கியமான பெருத்த ஊழல் கைகளை காப்பாற்றுவதற்காக வெளியில் வரமுடியாதபடி கனிமொழியை கொடுஞ்சிறையில் வாட்டுவது ஆண்டவனுக்கே அடுக்காத ஒன்று.


கருணாநிதி என்ற கொடிய மனிதனின் மகளாக பிறந்துவிட்டதால் கனிமொழி என்ற பெண் சிறுமைப்படுகிறார்.

பன்றியுடன் சேர்ந்ததால் கனிமொழி என்ற கன்றும், மலம் தின்று சிறுமை பெற்றிருக்கிறது.

1 comment:

Nallavan said...

Poda Thavideya pasangala..........